Home / Sites / இணையத்தில் குர்-ஆன்

இணையத்தில் குர்-ஆன்

இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் வாசகர்களுக்கு ஐடி வலம் சார்பாக பெருநாள் வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு பயனுள்ள ஒரு இணைய தளத்தையும் அவர்களுக்காக அறிமுகம் செய்ய நினைக்கிறேன். தளத்தின் பெயர் தன்ஸீல். இந்த இணைய தளத்தில் முஸ்லிம்களின் புனித நூலான அல் குர்-ஆன் முழுமையாக எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அல் குர்-ஆனின் எந்த ஒரு அத்தியாயத்தையும் விரும்பிய ஒழுங்கில் பார்வையிடவோ ஒலிக்க வைக்கவோ முடியும். அத்தோடு அல்குரானை முறையாகவும் அழகாகவும் ஓதுவதில் தேர்ச்சி பெற்ற (காரிகள்) பலரின் குரலில் கேட்கவும் முடிகிறது. அல்குரானின் மொழி பெயர்ப்பையும் கூட தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பெறக்கூடியதாகவும் இருப்பது இந்த தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த இணைய தளத்தைப் பார்வையிட நீங்கள் செல்ல வேண்டிய முகவரி www.tanzil.info

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு …

2 comments

  1. உங்களின் இந்த வலயமைப்புக்கு நான் புதியவன். இன்றுதான் உங்களின் ஆக்கங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் ஒரு முஸ்லிம் என்ற வகையில் உங்களுக்கு இந்த ஆக்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க பிரயோசனமான ஆக்கங்களாகத்தான் உங்கள் எல்லா ஆக்கங்களும் தெரிகின்றன. நன்றி நண்பரே..

  2. உங்களின் இந்த வலயமைப்புக்கு நான் புதியவன். இன்றுதான் உங்களின் ஆக்கங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் ஒரு முஸ்லிம் என்ற வகையில் உங்களுக்கு இந்த ஆக்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க பிரயோசனமான ஆக்கங்களாகத்தான் உங்கள் எல்லா ஆக்கங்களும் தெரிகின்றன. நன்றி நண்பரே..

Leave a Reply