Home / General / கணினியில் IPTV தொலைக்காட்சி பார்ப்பது எப்படி?

கணினியில் IPTV தொலைக்காட்சி பார்ப்பது எப்படி?

வழமையானதொலைக் காட்சிஎன்டனாசேட்டலைட் டிஸ்எதுவுமின்றிதொலைபேசி இணைப்புவழங்கப்படும் கேபல் வழியாகவரும் தொலைக் காட்சி சேவையே ஐபிடிவி எனப்படுகிறது. அதாவதுப்ரோட்பேண்ட் ((Broadband)) எனும் அதிவேக இணைய இணைப்பினைப் பயன்படுத்திதொலைக்காட்சிசேவையைவழங்குதலை ஐபிடிவி எனப்படுகிறது. இங்கு IPTV என்பது InternetProtocol Television என்பதைக் குறிக்கிறது.  உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியைஅதிவேக இணைய இணைப்பில் தொடுக்கப்படுவதன் மூலம் டிஜிட்டல் தொலைக்காட்சிசேவையை இணையத்தின் மூலம் பெறக்  கூடியதாயுள்ளது.

ப்ரோட்பேன்ட் எனும் அதிவேக இணையசேவைநிலத்தின் கீழ் போடப்பட் டிருக்கும் பைபர்ஒப்டிக் கேபல் (fiber optic cable) மூலமாக வழங்கப்படுகிறது. இக்கேபல் 500 க்கும் மேற்பட்டதொலைக்காட்சிச் சேனல்களை ஒரே நேரத்தில் கடத்தக் கூடியஆற்றல் வாய்ந்தவை.

முதன் முதலாக ஐபிடிவி 1994 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அமெரிக்காவின் தொலைக் காட்சிசேவையான ABC நிறுவனத்தின் நிகழ்ச்சிகளே இணையத்தின் மூலம் முதன் முதலில் ஒளிபரப்பாகியது.

இலங்கையில் கூட ஐபிடிவி சேவை கடந்த 10 வருடங்களாக இயங்கிவருகிறது என்பதைஅறிவீர்களா? ஆமாம்.. ஸ்ரீலங்கா டெலிகொம் வழங்கும்   Peo TV  தொலைக் காட்சிசேவையை IPTV  யிற்கு நாம்  அறிந்த ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஐபி (IP) என்பது இன்டர்நெட் ப்ரொட்டகோலைக் (Internet Protocol) குறிக்கிறது. இணையத்தில் TCP/ IP எனும் ப்ரொட்டகோல் பயன்பாட்டிலுள்ளது. ப்ரொட்டகோல் என்பது டேட்டாவை இணையத்தில் அனுப்பபெற கடை பிடிக்கப்படும் பொதுவான சிலவிதிமுறைகளைக் குறிக்கிறது. மின்னஞ்சல்  அனுப்பவும் பெறவும், இணையதளங்களைப் பார்வையிடவும் தொடர்பாடவும் இந்த TCP/ IP எனும் இன்டர்னெட் ப்ரொட்டகோலேநமக்குஉதவுகிறது.

ஐபிடிவியில் ஒரு தொலைக்காட்சிநிகழ்ச்சி இன்டர்நெட் புரட்டகோல் எனப்படும் விதிமுறைகளுக்கமைவாகசிறுசிறுபகுதிகளாகஉடைக்கப்பட்டு“பெக்கட்ஸ்” (packets) எனும் பொதிகளாகதொலைபேசிகேபல் மூலம் நமதுகணினியைஅல்லதுதொலைக்காட்சிப் பெட்டியைவந்தடைகிறது.

இணையத்தின் வழியாகஏதெனுமொருவீடியோக்ளிப்பைஅல்லது ஒரு சினிமாபடத்தைகணினியில் பார்வையிட்டிருந்தால் ஐபிடிவியைநீங்கள் ஏற்கனவேபார்த்திருக்கிறீர்கள் எனச் சொல்லலாம்.

ஐபிடிவிசேவையைசாதாரணதொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்துரசிக்கவிரும்பும் ஒருவர்முதலில் ஐபிடிவி இணைப்பைசேவைவழங்கும் ஒரு நிறுவனத்திடம் பெறுவதுடன் அதற்கானசெட்-டொப்-பொக்ஸையும் (Set-Top-Box)) அந்நிறுவனத்திடமிருந்தேபெறவேண்டும். அத்துடன் ADSL மோடம் மற்றும் (filter) பில்டர்என்பனவும் அவசியம்.

ஐபிடிவிஎவ்வாறுசெயற்படுகிறது?

வெவ்வெறுஊடகங்கள் மூலம் பெறப்பட்டதொலைக்காட்சிசேனல்கள் ஒரு மத்தியநிலையத்தில் உள்ளசேர்வரில் (Server) சேமிக்கப்பட்டு இணையத்தின் மூலம் பெறக்கூடியதாக“பாக்கட்” வடிவில் சிறுசிறுபகுதிகளாகஉடைக்கப்படுவதோடுஅந்தசிக்னலைஅதிகாரமற்றோர்பெறமுடியாவண்ணம் என்க்ரிப்ட் (encrypt) செய்துஅதாவதுவேறொருவடிவில் மாற்றப்பட்டுதொலைபேசிகேபல் வழியேசெலுத்தப்படுகிறது.

கேபல் வழியேபயணம் செய்யும் அந்தடேட்டாஐபிடிவிசேவையைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளரைவந்தடைகிறது. வாடிக்கையாளரின் வீட்டில் பொருத்தியுள்ள ADSL மோடம் ஊடாகஅந்தசிக்னல் அவரதுசெட்-டொப்-பொக்ஸை அடைகிறது. செட்-டொப்-பொக்ஸ் எனும் சாதனம் என்க்ரிப்ட் செய்யப்பட்டுவரும் அந்தசிக்னலை (decrypt) டிக்ரிப்ட் செய்வதோடுஅதாவதுஎன்க்ரிப்ட் செய்வதற்குமுன்பிருந்தவடிவிற்குமாற்றி“பெக்கட்” வடிவில் சிறுசிறுபகுதிகளாகவரும் டேட்டாவைமறுபடிஒன்றுசேர்த்துதொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிப் படுத்துகிறது. இந்தசெயற்பாடுகள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துமுடிவதால் ஒளிபரப்பில் எந்ததாமதத்தையும் நம்மால் உணரமுடிவதில்லை.

இந்தசெயற்பாடு,கட்டணம் செலுத்திப் பெறும் செய்மதிதொலைக் காட்சிச் சேவைஓரளவுஒத்திருக்கிறது. எனினும் இங்குநாம் எந்த ஒரு என்டனாவையும் பொருத்தவேண்டியதில்லை.

ஐபிடிவி மூலம் தொலைக்காட்சிநிகழ்ச்சிகளைப் பார்த்துரசிக்கும் அதேவேளை ADSL மோடம் கருவியைகணினியுடன் இணைப்பதன் மூலம் இணையசேவையையும் நம்மால் அதேநேரத்தில் பெறமுடிவதோடுதொலைபேசியையும் கூட அதேநேரத்தில் உபயோகிக்கக் கூடியதாயிருக்கும்.

ஐபிடிவி ஏனைய தொலைக்காட்சிஊடகங்களைப் போலன்றிபலவசதிககளைத் தருகிறது.

வழமையானதொலைக் காட்சிசேவைபோல் ஒரு நிகழ்சியைபலபேருக்குஒரேநேரத்தில் ஒளிபரப்புவது (multicast) மற்றும் ஒரு நிகழ்ச்சியைகுறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளருக்குமட்டும் (unicast) அவர்கேட்கும் போதுவழங்குவதுஎனஐபிடிவிசேவை இரண்டுவழிகளில் கையாளப்படுகிறது.

ஐபிடிவிவழமையானடிவிசேனல்களையோஅல்லதுகளஞ்சியப்படுத் தப்பட்டுள்ளவீடியோபடங்களிலிருந்துநமக்குத் தேவையானதைத் தெரிவுசெய்துபார்ப்பதற்கானவசதியைஅளிக்கிறது. அதனைவீடியோஒன் டிமாண்ட் (Video On Demand) எனஅழைக்கப்படும்.ஐபிடிவியின் முக்கியஅம்சமாக இந்தவீடியோஒன் டிமான்ட் எனும் வசதியைக் குறிப்பிடலாம்.

பாவனையாளர்தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றும் ஒரு மெனுவிலிருந்துஎன்னென்னபடங்கள் வீடியோக்ளிப்புகள் உள்ளனஎனரீமோட் கன்ட்ரோலைஅழுத்துவதன் மூலம் தெரிந்துகொண்டுதமக்குதேவையானவீடியாவைதெரிவுசெய்துகண்டுகளிக்கலாம். வீடியோ ஒன் டிமாண்ட் சேவைக்கு Netflix,Hulu, Amazon prime Video போன்றனஉலகளவில் பிரபல்யம் பெற்றுள்ளன.

ஐபிடிவியில் சாதாரண டிவிடி ப்லேயரில் போன்றுதொலைக்காட்சிநிகழ்ச்சிஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதுஅதனைதற்காலிகமாகநிறுத்திவிட்டு(Pause) மீண்டும் விட்ட இடத்திலிருந்துதொடருதல்,ரீவைண்ட் (rewind) செய்துஆரம்பத்திலிருந்துபார்த்தல், ஸ்லோமோசனில் (slow-motion) மெதுவாக இயக்குதல்,பாஸ்ட் போர்வர்ட் (fast-forward) செய்துவிரைவாக ஓட வைத்தல் போன்றவசதிகளையும் பெறலாம்.

ஐபிடிவியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதுவழமையானடிவியில் போலன்றி ஒரு புதியஅனுபவத்தைத் தரும். தமக்குதேவையானதைமட்டும் தேர்ந்தெடுத்து,தமக்குவிருப்பமானநேரத்தில் (Time Shift TV) தமதுபூரணகட்டுப்பாட்டின் கீழ் தமக்குசௌகரியமானமுறையில் பார்த்துரசிக்கலாம். நீங்கள் பார்க்கத் தவறவிட்ட ஒரு நிகழ்ச்சியைஅல்லதுசீரியலைக் கூட வேறொருநேரம் பார்க்கலாம். வழமையானதொலைக்காட்சிஒளிபரப்புபோன்றேஉயர்தரத்திலானவீடியோமற்றும் ஓடியோவைஐபிடீவியில் பெறலாம

கேபல் டிவிசெய்மதிதொலைக்காட்சிசேவைபோலன்றிஐபிடிவியில் Interactivity எனும் வசதியும் கிடைக்கிறது. இதன் முலம் நேரடிபோட்டிநிகழ்ச்சிகள் (Game Shows ஒளிபரப்பகும்போதுஅந்த ஸ்டுடியோவில் இருக்கும் பார்வையாளர்கள் போல் வீட்டில் தொலைக் காட்சிபார்த்துக் கொண்டிருப் போரும் பங்குபெறலாம். தொலைக் காட்சிவிளம்பரத்தில் வரும் ஒரு பொருளைடிவியிலிருந்தேஆடர்செய்துவாங்கவும் முடியும்.

IPTV சேவையைநீங்கள் அதற்கெனவடிவமைக்கப்பட்டிருக்கும் setup boxes (STB) சாதனத்தின் ஊடாக மாத்திரமன்றிகணினி  ஸ்மாட்  டிவி ஸ்மாட் போன் மற்றும் PS4 போன்றகேம் கன்சோல்களிலும் பார்வையிடமுடியும்.

நான் இங்குகணினிமற்றும் அண்ட்ராயிட் ஸ்மாட்போன் மூலம்  எவ்வாறுஐபிடிவிசேவையகட்டணம் ஏதும் செலுத்தாமலேயே இலவசமாகபார்ப்பதுஎன்பதைவிவரிக்கிறேன்.

அனைத்து IPTV சேவைகளும் M3U எனும் பைல் வகையைப்  பயன்படுத்துகின்றன.  ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன்களிலும் இதேபைல் வகையே பயன் படுத்தப்படுகிறது.   இது ஒரு  உரைகோப்பாகும் (text file).  இந்த M3U கோப்புகள்  எந்தவீடியோஆடியோஉள்ளடக்கத்தையும் கொண்டிருப்பதில்ல. மாறாக இவை  சேனல்களின் பெயர்,சேனல் மூலத்தின் ருசுடுமற்றும் சேனல் குறிப்புஎண் போன்றதகவல்களைக்  கொண்டிருக்கும் ஒரு பட்டியலாகும்.

இந்த M3U கோப்புக்களை ஏராளமானமீடியாப்லேயர்செயலிகளால் கையாளமுடியும்.   அவற்றுள் VLC மீடியாபிளேயர்கணினியிலோ ஸ்மாட் போனிலோ IPTV சேனல்களை இயக்கசிறந்ததேர்வாக இருக்கிறது. ஏனெனில் வி-எல்சிபல்வேறுவகையானஆடியோமற்றும் வீடியோகோப்புக்களைஆதரிக்கிறது.

உங்கள் கணினியில் ஐபிடிவிசேவைகளைப் பார்வையிடமுதலில் VLC மீடியாபிளேயர்மென்பொருளைபதிவிறக்கம் செய்துகணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். ஸ்மாட் போன் பயன் படுத்துபராக இருந்தால் ப்லே ஸ்டோரில் இருந்து VLC செயலியைநிறுவிக் கொள்ளுங்கள் (இன்னும் ஏராளமானஐபிடிவிசெயலிகளும் பயனபாட்டில் உள்ளன).

அடுத்துபிரவுஸரைதிறந்து M3U  play list என கூகுலில் தேடுங்கள். M3U  play list கொண்டஏராளமான இணையதளங்களை கூகுல் பட்டியலிடும்.  அவற்றிலிருந்துநீங்கள் விரும்பும் ஒரு பட்டியலைடவுன் லோட் செய்துகொள்ளுங்கள். அந்த M3U பட்டியலைஏடுஊமீடியாப்லேயருடன் திறந்துகொள்ளுங்கள்.  இப்போதுஏராளமானதொலைக் காட்சிச் சேனல்களைநீங்கள் பார்வையிடமுடியும்.

M3U கோப்புகள் உரைஅடிப்படையிலானவைஎன்பதால் அவற்றைஎந்த ஒரு  டெக்ஸ்ட் எடிட்டருடனும் எடிட் செய்யவும் முடியும்.  இதன் மூலம் பட்டியலில் இருந்துதேவையற்றசேனல்களைநீக்கிசேமித்துக் கொள்ளலாம்.

Note Pad  ஐத் திறந்து கீழேதரப்பட்டிருக்கும்  வரிகளைஎந்தமாற்றமும் இல்லாமல்  டைப் செய்துஅதனை bbc.m3u என சேமித்து அந்தக் கோப்பை VLC மீடியாப்லேயருடன் திறந்துபாருங்கள்.

;.#EXTINF:-1,BBC World News
http://online.123iptv.net:25461/nata/nata/367

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply