Home / General / பேஸ்ட் செய்திடும் Insert key

பேஸ்ட் செய்திடும் Insert key

கணினி விசைப்பலகையில் உள்ள Insert Key எனும் விசைக்கு இரண்டு விதமான செயற்பாடுகள் உள்ளன. ஒரு நிலையில் (Insert mode) ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் பகுதியின்; இடையே புதிதாக டெக்ஸ்டை செருகலாம். முன்னர் டைப் செய்ததை அழிக்காது. இன்னொரு நிலையில் (overwrite mode ஏற்கனவே டைப் செய்த பகுதியினிடையே டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்துவிடும்.

இதே Insert Key முநல விசைக்கு இன்னுமொரு செயற்பாட்டையும் வழங்கிட வசதி தருகிறது எம்.எஸ்.வர்ட் மென்பொருள். வர்டில் கொப்பி செய்யும் டெக்ஸ்ட், படம் ;எதுவானாலும் நினைவகத்தில ;க்லிப்போர்ட் எனும் பகுதியில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டு விடும். அவ்வாறு கொப்பி செய்ததை பேஸ்ட் கட்டளை தெரிவு செய்து அல்லது விசைப் பலகையில் Ctrl + V விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி தேவையான இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இதே பேஸ்ட்  செய்யும் வேலையை Insert விசையை அழுத்தியும் செய்து கொள்ளலாம். ஆனால்  இயல்பு நிலையில் Insert விசை பேஸ்ட் செய்யாது. ஆதனை பேஸ்ட் விசையாக இயங்க வைக்கப் பின்வரும் வழி முறையைக் ;கையாளுங்கள்.

முதலில் எம்.எஸ்.வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு பைல் மெனுவில் Word Options தெரிவுசெய்யுங்கள். அப்போது திறக்கும ;விண்டோவின் இடப்புறம்  Advanced பட்டன் க்ளிக் செய்யுங்கள். அடுத்து அதே விண்டோவின் வலப்புறம்  Cut, Copy and Paste என்பதன் கீழ் Use the Insert Key for paste என்பதைத் தெரிவு செய்து Ok சொல்லிவிடுங்கள். இனி வர்டில் கொப்பி செய்ததைப் பேஸ்ட் செய்ய Insert விசையை அழுத்தினாலே போதுமானது.

About admin

Check Also

In-Flight Wi-Fi Connectivity..How?

In-Flight Wi-Fi விமானத்தில் வைஃபை இணைப்புக்கு ஏர்-டு-கிரவுண்ட் (air-to-ground) சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் (satellite link)  இணைப்பு என இரண்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *