Home / General / மீடியா கோப்புக்களை மாற்றும் VLC மீடியா ப்லேயர்

மீடியா கோப்புக்களை மாற்றும் VLC மீடியா ப்லேயர்

VLC மீடியா ப்லேயர் மென்பொருளானது ஒரு சிறந்த மீடியா ப்லேயர் என்பதை அறிவீர்கள். திறந்த மூலநிரல் மென்பொருளான விஎல்சி மீடியா ப்லேயர் பல்வேறு வகையான மீடியா  கோப்புக்களை ஆதரிப்பதுடன் கையடக்கக் கருவிகளுக்கெனவும் கிடைக்கிறது.

இந்த விஎல்சி மீடியா ப்லேயர் வெறும் மீடியா ப்லேயர் மட்டுமல்லாமல் மேலும் பல வசதிகளையும்  கொண்டுள்ளது. அவற்றுள் மீடியா கோப்புக்களை வேவ்வேறு கோப்பு வகைகளுக்கு மாற்றும் வசதியானது  மிகவும் பயனுள்ள ஒரு வசதி எனலாம்.

இணையத்தில்  மீடியா கோப்புக்களை மாற்றும் மென்பொருள் கருவிகள் ஏராளம் இருப்பினும் உங்களிடம் விஎல்சி இருந்தால் வேறு மென்பொருள்களைப்  பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை.

விஎல்சி மீடியா ப்லேயரை மீடியா கன்வர்டராக பயன்படுத்துவது  எப்படி?

முதலிம் விஎல்சி மீடியா ப்லேயரத் திறந்து கொள்ளுங்கள். அப்போது தோன்றும் விண்டோவில்  மீடியா  மெனுவில் Convert / Save என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

அப்போது ஒரு புதிய விண்டோ திறக்கும். அங்கு File டேபின் கீழ் Add பட்டனில் க்ளிக் செய்து மாற்ற வேண்டிய மீடியா கோப்பினைத் (வீடியோ / ஓடியோ எதுவாகவும் இருக்கலாம். தெரிவு செய்யுங்கள்.

அடுத்து Convert / Save பட்டனில் க்ளிக் செய்ய ஒரு சிறிய விண்டோ தோன்றும். அங்கு கன்வர்ட் செய்த பிறகு Destination File எந்த போல்டரில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கள். அதே விண்டோவின் கீழே setting பகுதியில் Profile எனுமிடத்தில் கீழ் நோக்கிய அம்புக்குறியில் க்ளிக் செய்து வரும் பட்டியலில் இருந்து நீங்கள் மாற்ற விரும்பும் கோப்பு வகையைத் தெரிவு செய்து Start பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.  மீடியா பைலின் நீளம் மற்றும் தரம் என்பவற்றிற்கேற்ப மாற்றுவதற்கான நேரம் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள.. .

 

 

 

 

About admin

Check Also

ஃபேஸ்புக் அறிவிப்புகள் மின்னஞ்சலிற்கு வருவதைத் தடுப்பது எப்படி?

Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை …

Leave a Reply