Home / Video / மொபைல் ஃபோன் சென்ஸர்கள்

மொபைல் ஃபோன் சென்ஸர்கள்

இன்றைய ஸ்மாட் போன்கள்  நம்பவே முடியாத அதிசயிக்கத்தக்க  கையடக்கக் கருவிகளாக உருவெடுத்துள்ளன.   பல தசாப்தங்களுக்கு முன்பு வரை மாந்திரீகம் மாயாஜாலமாகக் கருதப்பட்ட பல விடயங்கள் இன்று நிதர்சனமாக நம் உள்ளங்கைகளிலேயே விந்தைகள் புரிவதைப் பார்த்து வியக்கிறோம். மகிழ்கிறோம். இவ்வாறு விந்தைகள் பல புரிய பல்வேறு தொழில் நுட்பங்கள்  ஸ்மாட் போன் கருவியினுள்ளே பயன் படுத்தப்படுகின்றன.

அவற்றுள் சென்ஸர்கள் எனப்படும் உணரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.   ஸ்மாட்போன் கருவிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உணரிகள்  பர்றிக் கீழே பட்டியலிடப்படுகிறது. .

Accelerometer ஆர்முடுகள்மானி ஸ்மாட்போன் கருவிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் உணரிகளில்  ஒன்று.  இவ்வுணரி  ஸ்மாட் போன் கருவிகளில்  ஆர்முடுகளை  (வேக அதிகரிப்பை )  அளவிடப்பயன் படுகிறது. ஸ்மாட்போன்  எத்திசையிலாவது அசைகிறதா அல்லது நிலையாக இருக்கிறதா  என்பதை இவ்வுணரியின் மூலம் கண்டறியப்படுகிறது.   மேலும் ஸ்மாட் போன் கருவியின் அல்லது திரையின்  திசை முகம்  (orientation) நிலைக்குத்தாக (portrait)   அல்லது கிடையாக (landscape)  உள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும்  உதவுகிறது.

Gyroscope   ஜை (ஜி) ரஸ்கோப்  எனும் உணரியும்  ஆர்முடுகல் மானி உணரி போன்றே ஸ்மாட் போன் கருவியின் திசை முகத்தை அறியப் பயன்படுகிறது. ஆனால் இது மிகத் துல்லியமான தகவலை வழங்குகிறது. அண்டரொயிடின் ஃபோட்டோ ஸ்பியர் கேமரா செயலி ஜிரஸ்கோப் உணரியின் உதவியைப் பயன் படுத்துகிறது.  ஸ்மாட்போ கருவி எத்தனை தடவை சுழற்றப்பட்டுள்ளது எத்திசையில் சுழற்றப்பட்டுள்ளது  போன்ற தகவல்கலைப் பெற ஜிரஸ்கோப் உணரி  பயன் படுகிறது. மேலும் கூகிலின் (ஆகாய வரைபட) Sky Map செயலி  மற்றும் கார் ஓட்டப் பந்தய (விளையாட்டு) செயலிகளிலும் பயன் படுத்தப்படுகிறது.

Magnetometer என்பது பொதுவாக அனைத்து  ஸ்மாட் போன் கருவிகளிலும் . காணப்படும் மற்றுமொரு உணரியாகும் இதன் மூலம் காந்த புலன் களை கண்டறிய முடியும். ஸ்மாட்போன் கருவிகளில் திசைகாட்டி செயலிகள் பயன் படுத்தும் உணரிகளில் காந்தப்புலன் உணரியும் ஒன்றாகும்.  உலோகத்தைக் கண்டறிய (metal detectors)  உதவும் செயலிகளும் இவ்வுணரியைப் பயன் படுத்துகின்றன.
Proximity sensor அருகாமை உணரி –  இது  அகச்சிவப்பு எல்.ஈ. டி விளக்கு மற்றும் ஒரு IR light detector (ஒளி உணரி) என்பன இணைந்த ஓர் உணரி.  இது ஸ்மாட் போனில் ஒளிபெருக்கியின் (earpiece) அருகே பதியப்பட்டும். தொலைபேசி அழைப்பில் போது காதருகில்  கருவியைக்  கொண்டு செல்கையில்   நீங்கள் ஓர் அழைப்பில் இருப்பதாகவும்  எனவேதிரை விளக்கை நிறுத்தப்பட வேண்டும் என்றும்  அறிவிக்கும்.  கண்களுக்குப் புலப்படாத அகச்சிவப்பு நிறக் கதிர்கள் அருகாமையிலுல்ல ஒரு பொருளின் மீது பட்டு தெறிப்படையும் போது Infrared Detector  கண்டறியப்படுகிறது.

Light sensor   ஒரு ஸ்மாட் போன் கருவியின்  ஒளி உனரியானது   சுற்றுப்புற  ஒளியின் பிரகாசத்தை அளவிடுகிறது.  சுற்றுப் புறச் சூழலில் ஒளி  பிரகாசமாகவோ அல்லது இருளாகவோ இருக்கும் போது அதை உனர்ந்து அதற்கேற்ப  தனாகாவே கருவியின் ஒளி அளவை மாற்றியமைக்கிறது.

Barometer    காற்றழுத்தமானி –  வளிமண்டல அமுக்கத்தை இதன் மூலம்  அளவிட முடியும். இதன் மூலம் பெறப்படும் தகவலை வைத்து ஸ்மாட்போன் கருவி  கடல் மட்டத்திற்கு மேல் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதைக் கண்டரிய முடியும்.  இதன் மூலம் உங்கள் அமைவிடம் காட்டும்  GPS வசதியை  இன்னும் துல்லியமாகப் பெறலாம்.

புதிதாக ஸ்மாட்போன் வாங்க நினைப்பவர்கள் உங்கள் தேவைகளுக்கேற்ப இனிமேல் இந்த உணர் கருவிகள் பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தி வாங்குங்கள். ஆனால் எந்த ஸ்மாட் போன் கருவியும் இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து உணரிகளையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப் படுவதில்லை. ஒவ்வொரு ஸ்மாட்போன் கருவியும் வெவ்வேறு  சென்சர்களைக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Fingerprint sensors  விரல் அடையாள உணரி – ஸ்மாட்போன் கருவிகளுக்குக்  கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக   கை விரல் அடையாளத்தையும் பயன் படுத்தலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். கைவிரல் அடையாளத்தைக் கண்டரியவே Fingerprint ஸ்கேனர்கள்  பயன்படுத்தப்படுகின்றன .

GPS (Global Positioning System)  செய்மதிகளின் உதவியோடு நாம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம்.

இவை தவிர இன்னும் பல வகையான உணரிகள் ஸ்மாட் போன்களில் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோன்று எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான உணரிகள புதிது புதிதாக அறிமுகமாகலாம் என்பதும் நிச்சயம்.

Air humidity sensor  வளியின் ஈரப்பதனை அறியும் உணரி
Thermometer  சூழல் வெப்பநிலையைக் கண்டரியும் உணரி

Temperature Sensor ஸ்மாட்போன் கருவியினுல்ளே வெப்பநிலையை அறிந்து அதிகமாயின் ஸ்னாட்போன் இயக்கத்தை நிறுத்திவிடும் உணரி

Pedometer நாம்  நடக்கும்போது முன்வைக்கும் ஒவ்வொரு அடியையும் அளவிட்டு  கால்களால்  நடந்த தூரத்தைக் கணிக்கும்  உணரி

Heart rate monitor  எமது இதயத் துடிப்பை  அளவிடும் உணரி

Detecting harmful radiation தீங்கு விளைவிக்கும் கதிர் வீச்சுக்களைக் கண்டறியும் உணரி

About admin

Check Also

pass Medium

Microsoft introduces Passwordless Sign-In option

Microsoft introduces Passwordless Sign-In option மைக்ரோசாப்ட் பயனர்கள் தங்கள் கணக்கிலிருந்து கடவுச்சொல்லை இனி முழுவதுமாக நீக்க முடியும். பதிலாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *