Home / General / 10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்

10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்

10 Common Cyber Crimes பொதுவான சில  இனைய வழி குற்றங்கள்  இணைய வெளியில் நடக்கும் எந்தவொரு சட்ட விரோதச் செயலும் சைபர் கிரைமில் அடங்கும்.கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளைத் தாக்குவதற்கு கணினி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதை சைபர் கிரைம் உள்ளடக்குகிறது. சைபர் கிரைம் வெளிப்படையாகவே ஒரு கிரிமினல் குற்றமாக இருப்பதுடன் அதற்கு சட்டத்தால் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் சைபர் கிரைம் நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களும் தண்டனைகளும் உள்ளன.

கணினிகள் மற்றும் அமைப்புகளைத் தாக்க சைபர் கிரிமினல்கள் பல்வேறு உத்திகளை பிரயோகிக்கிறார்கள்சில பொதுவான சில  இணைய வழி குற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

ஹேக்கிங் Hacking

ஹேக்கிங் என்பது ஒரு கணினி முறைமை, நெட்வொர்க் அல்லது வலைத்தளத்தினுள் சில செயல்பாடுகளை அல்லது முழுமையாக தனது கட்டுப் பாடிற்குள்  கொண்டு வருவதை  குறிக்கிறது. இது முக்கியமான தரவு மற்றும் தகவல்களை அணுகுவதையும், தனியுரிமையை மீறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரும்பாலான “ஹேக்கர்கள்” வணிக நிறுவன கனக்குகள் மற்றும் அரச நிறுவன கணக்குகளைத் தாக்குகிறார்கள். பல்வேறு வகையான ஹேக்கிங்கிலும் பல்வேறு முறைகள் உள்ளன.

10 Common Cyber Crimes

மோசடி Fraud

மோசடி என்பது ஒரு சைபர் கிரைமை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல், இது முக்கியமான தரவுகளைப் பெறுவதற்காக ஒரு நபரை ஏமாற்றுவதை குறிக்கிறது. . சட்டவிரோதமாக ஆதாயத்தைப் பெறும் நோக்கில் எந்தவொரு தகவலையும் மாற்றுவது, அழிப்பது, திருடுவது அல்லது முடக்குவதன் மூலம் மோசடி செய்ய முடியும்.

10 Common Cyber Crimes

அடையாள திருட்டு Identity Theft

அடையாள திருட்டு என்பது மோசடியின் மற்றுமொரு  வடிவமாகும், இதில் கடவுச்சொற்கள், வங்கி கணக்கு பற்றிய தரவு, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் விவரங்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை சைபர் குற்றவாளிகள் திருடுகிறார்கள்.  அடையாள திருட்டு மூலம்  பணத்தையும் திருட முடியும்

Scamming எனும் மோசடி

மோசடி பல்வேறு வடிவங்களில் நடக்கிறது. சைபர்ஸ்பேஸில், கணினி பழுதுபார்ப்பு, நெட்வொர்க் சரிசெய்தல் மற்றும் ஐடி ஆதரவு சேவைகளை வழங்குவதாக் கூறியும் மோசடி செய்ய முடியும்.

பயனர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் கணினியில் இல்லாத சிக்கல்கலையெல்லாம் இருப்பதாக் பயனர்களைக் பணம் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறான பணம் பறிப்பதற்கான எந்தவொரு சட்டவிரோத செயற்பாடும்  மோசடியில் அடங்கும்.  

Fraud எனும் மோசடி

முக்கியமான தகவல்களைப் பெறுவதற்காக ஒரு நபரை ஏமாற்றுவதைக் குறிக்கிறது. சட்டவிரோத ஆதாயத்தைப் பெறும் நோக்கில் தகவல்களை மாற்றுவது, அழிப்பது, திருடுவது மூலம் மோசடி செய்ய முடியும்.

கணினி வைரஸ்கள் Computer Viruses

வைரஸ்களைப் பயன்படுத்தி கணினிகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று முக்கியமான தரவுகளைத் திருடுவதும் சைபர் குற்றங்களில் அடங்கும். கணினி வைரஸ்கள், கணினிகள் மற்றும் நெட்வர்க்குகளை முடக்குவதற்காக உருவாக்கி பரவ விடப்படுகின்றன.  வெளிப்புற தேக்கச் சாதனங்கள்  மற்றும் இணையத்தின் மூலம் எளிதாகப் வைரஸ்கள் பரவலாம்.

ஃபிஷிங் Phishing

Phishers  ஃபிஷர்கள் என்போர் ஒரு உண்மையான நிறுவனம் அல்லது அமைப்பு போல செயல்படுகிறார்கள். கிரெடிட் கார்டு எண்கள்,  கடவுச்சொற்கள் போன்ற ரகசிய தகவல்களைத் திருடுவதே அவர்களின் நோக்கம். அவற்றைத் திருடுவதற்காக அவர்கள் “மின்னஞ்சல் ஸ்பூஃபிங்கை “email spoofing” பயன்படுத்துகிறார்கள். போலியான வலைத்தளங்களுக்கான இணைப்புகளை மின்னஞ்சலூடாக ஆயிரக்கணக்கில் அனுப்புகிறார்கள்.  பயனர்கள் இவை உணமையானவை என நம்பி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவார்கள்.

Ransomware ரேன்சம்வேர்

ரேன்சம்வேர் என்பது மிகவும் அபாயகரமான தீம்பொருள் அடிப்படையிலான தாக்குதல்களில் ஒன்றாகும். இது உங்கள் கணினி வலையமைப்பில் நுழைந்து கோப்புகள் மற்றும் தகவல்களை உங்களால் பயன் படுத்த முடியாத வகையில் மறை குறியாக்கம் செய்து விடுகின்றன. பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு மாற்றித் தருவதாகவும், அதற்கு தாங்கள் கேட்கும் தொகையை பணமாகச் செலுத்துமாறும் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வார்கள்.

ஸ்பாமிங் Spamming

அறிமுகமில்லாத நபர்கள்  நிறுவனங்கள், குழுக்களிடமிருந்து வரும் கோரப்படாத மின்னஞ்சல்கள் ஸ்பாமிங் Spam எனப்படுகின்றன,  இது போலி வலைத்தளங்களின் இணைப்புகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் malware  நிரல்கலைக் கொண்டிருக்கும். மேலும் பயனர்களை ஏமாற்றும் நோக்கில்  விளம்பரங்கள் மற்றும் பிறகவர்ச்சிகரமான விடயங்களும் அடங்கியிருக்கும்.

DDoS தாக்குதல் DDoS Attack

DDoS அல்லது விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல் (Distributed Denial-of-service) (DDoS)என்பது ஹேக்கிங்கின் மிகவும் பிரபலமான முறைகளில் ஒன்றாகும். இது வெற்றிகரமாக இயங்கும் சேவையகங்கள் மற்றும் நெட்வொர்க்குகளில் தற்காலிகமாக அல்லது முழுமையாக்க குறுக்கிடுகிறது. ஆஃப்லைனில் இருக்கும்போது, ​​பயனர்களுக்கு வலைத்தளம் கிடைக்காத வகையில் அவை சில செயல்பாடுகளை செய்கின்றன. பயனர்கள் டி.டி.ஓ.எஸ் தாக்குதலில் கவனம் செலுத்த வைப்பதே முக்கிய குறிக்கோள். தாக்குதலின் போது  இது ஹேக்கர்களுக்கு கணினி முறைமையை ஹேக் செய்ய வாய்ப்பளிக்கிறது.

போட்நெட்ஸ் Botnets

கணினிகளைத் தாக்கும் நோக்கில் ஸ்பாம்கள் அல்லது தீம்பொருளை malware அனுப்புவதன் மூலம் “போட் ஹெர்டெர்ஸ்“bot herders ” என்று அழைக்கப்படும் தொலை தூர தாக்குபவர்களால் போட்நெட்டுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. போட்நெட்டுகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பைத் தாக்குவதால் அவை வழக்கமாக வணிகங்களையும் அரசு நிறுவனங்களையும் தாக்குகின்றன.

Software Piracy மென்பொருள் காப்புரிமை மீரல்

பாடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், ஆல்பங்கள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட அசல் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக நகலெடுக்கும் டொரண்டுகள் மற்றும் பிற நிரல்களால் இணையம் நிரம்பியுள்ளது. இது பதிப்புரிமை மீறலலில் சேரும். மென்பொருள் திருட்டு காரணமாக, நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்கள் தங்கள் தயாரிப்புகள் சட்டவிரோதமாக அனுமதியின்றி பிரதி செய்யப்படுவதால் அவர்களின் வருமானத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

இணைய வழி மிரட்டல் Cyberbullying

மெய்நிகர் உலகில் நிகழும் மிக அதிகமான குற்றங்களில் ஒன்று சைபர் மிரட்டலும் ஒன்று. இது இணையத்தில் மூலம் நடக்கும் கொடுமைப்படுத்தலின் ஒரு வடிவம். உலகளாவிய தலைவர்கள் இந்த குற்றத்தை அறிந்திருக்கிறார்கள் மற்றும் இணைய அச்சுறுத்தலின் பெருக்கத்தை தடைசெய்யும் சட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

சைபர்ஸ்டாக்கிங் Cyberstalking
சைபர்ஸ்டாக்கிங் என்பது ஒரு நபரை ஆன்லைனில் அநாமதேயமாகப் பின்தொடர்வதாகும். ஒருவரது இணைய செயற்பாடுகள் அனைத்தும் ஸ்டாக்கர்களால் கண்காணிக்கப்படுகின்ரன. சைபர் ஸ்டாக்கிங்கில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே.

பிரவுஸர் ஹைஜேக்கிங் Browser Hijacking

பிரவுஸர் ஹைஜேக்கிங் என்பது பயனரின் அனுமதியின்றி இணைய உலாவியின் அமைப்புகளை மாற்றியமைப்பதைக் குறிக்கிறது. பயனரின் உலாவியில் தேவையற்ற விளம்பரங்களை செலுத்தும் நோக்கில் உலாவியில் ஏற்கனவே இருக்கும் முகப்பு பக்கம், தேடுபொறி பக்கம் போன்றவற்றை தீம்பொருள் நிறுவி மாற்றியமைக்கப்படலாம். இவை பொதுவாக அதன் விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்திற்குச் செல்ல பயனரைக் கட்டாயப்படுத்துகிறது.

இதே ஆட்டிக்கல் கோராவில்

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply