Home / General / வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை
3 400x330 - வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை

Share it if you like

fiverr - வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை

ஃபைவர்- Fiverr  என்பது உலகளாவிய ஆன்லைன் சந்தையாகத் தொழிற்படும் மிகப் பிரபலமான ஓர் இணையதளமாகும்.  ஆன்லைனில் பொருட்களைக் வாங்கவும் விற்கவும் Ebay, Amazon, Ali Express  போன்றதளங்கள் எவ்வாறு பிரபலமானதாக விளங்குகின்றதோ அதேபோல் இணையம் வழியே சேவைகளை வழங்கவும் பெறவும் உருவாக்கப்பட்டிருக்கும் பிரபலமானஒரு இணையதளமே ஃபைவர்.  இந்த இணையதளம் மூலம்  கணினி மற்றும் இணையம் சார்ந்த ஏராளமான சேவைகளைப் பெறவும்  வழங்கவும் முடிகிறது. ஃபைவர் மூலம் வழங்கப்படும் ஒரு சேவைக்கான கட்டணம் ஐந்து டாலரில் ஆரம்பித்து ஐந்து டாலரால் அதிகரித்துச் செல்கிறது.  இதன் காரணமாகவே இத்தளத்திற்கு (Five – ஐந்து) ஃபைவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எந்த நிறுவனத்திலும் முழு நேரபணியாளராக இணைந்து சேவையாற்றாத ஃப்ரீலான்ஸர்ஸ் (freelancers) எனப்படும் தனிநபர்களே உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் சேவைகளை வழங்க ஃபைவரை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

4 - வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தைவீட்டிலிருந்தபடியே  ஆன்லைனில் சம்பாதிக்கலாம் என  எராளமான  விளம்பரங் களை நீங்கள் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப் போதுபார்த்திருக்கலாம். ஆனால் அவற்றுள் அதிகமானவை போலியானவையாகவும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாகவுமே இருக்கும். அவ்வாறான விளம்பரங்களுக்குமத்தியில் ஃபைவர்தளம் எந்தவிதமான போலித்தனமும் இல்லாமல் திறமையுள்ள எவரும் மாதந்தோறும் இலட்சங்களில் சம்பாதிக்கக் கூடியவாறு உண்மையான ஆன்லைன் தொழில் வாய்ப்பை  கடந்த  பத்து  வருடங்களாக  வழங்கிவருகிறது.

Fiverr.com போன்று ஆன்லைன் சேவைகளை வழங்கவென upwork.com,  freelancer.com  என இன்னும் ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவை கூட உலகளவில் பிரபல்யமானவைதான். இத்தளங்கள் நிறுவனங்கள் சார்ந்ததும்  நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக் கூடியதுமான பெரிய செயற் திட்டங்களையே அதிகளவில் சந்தைப் படுத்துகின்றன. அவற்றில் சேவையாற்று  வோரும்  professionals   எனும் தொழில் வல்லுநர்களாகவே இருப்பர்.

3 300x300 - வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தைஆனால் அவற்றிற்கு மாறாக ஃபைவர்தளம் ஓரிரு நாட்களில் பூர்த்திசெய்யக் கூடிய  தனிநபர்  சார்ந்த மைக்ரோ ஜொப்ஸ் (micro jobs) எனப்படும் மிகச்சிறிய வேலைகளை சந்தைப்படுத்துகின்றன. சில நேரம்  அவ்வேலைகள் உங்கள் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப  ஓரிரு  மணித்தியாலங்க ளிலோ அல்லது ஓரிருநிமிடங்களிலோ கூட செய்துமுடிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை ஒரே நிமிடத்தில் செய்துமுடித்தாலும்  அந்தவேலைக்குரிய கூலியாக ஐந்து டாலர் உறுதி என்பது ஓர் ஆச்சரியமானஉண்மை.

சாரதிதேவை, பணிப்பெண் தேவை, காவலாளி தேவை என பத்திரிகைகளில் தொழில் வாய்ப்பு வெற்றிடங்களுக்கான விளம்பரங்கள் பார்த்திருப்பீர்கள். ஃபைவர்என்பது இது போன்று தொழில் வாய்ப்பு வெற்றிடங்களை விளம்பரப்படுத்தும் தளம் அல்ல. ”உங்கள் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய பல் வேறு திறமையுள்ள தொழிலாளர்கள் எங்களிடம் காத்திருக்கிறார்கள். நீங்களே அவர்களை நேரடியாகத்   தொடர்பு கொண்டு வேலைக்கமர்த்திக் கொள்ளலாம். உங்களுக்குத் திருப்தியான சேவையும் கிடைக்கும். வேலையாளுக்கு திருப்தியான ஊதியமும்  கிடைக்கும். மத்தியஸ்தம் செய்யும் எங்களுக்கும் சிறிய கமிஷன்  கிடைக்கும்” இவ்வாறுதான் ஃபைவர் செயற்படுகிறது.

ஃபைவரில் கிரேஃபிக் வடிவமைப்பு (Graphic Designing), லோகோ வடிவமைப்பு(logo designing) இணையதள வடிவமைப்பு (web designing), ப்ளோக் உள்ளடக்கம் எழுதுதல் (blog content writing) வீடியோ படங்களுக்குக் குரல்  கொடுத்தல் (voice over) டீ-ஷர்ட் வடிவமைப்பு,  சமூகவலைத்தளங்கள் மூலமான சந்தைப்படுத்தல (Social Media Marketing), வீடியோ எடிட்டிங், மெய்நிகர் உதவியாளர் பணி (Virtual Assistant), கணிணி செய்நிரலாக்கம் (Programming); அண்ட்ராயிட் செயலி உருவாக்கம் மற்றும் தரவு உள்ளீடு (data entry) போன்றன மிகவும் பிரபலமானவையும்  அதிக தேவையும் உள்ள  டிஜிட்டல் சேவைகளாகக் கருதப்படுகின்றன.

மேலேகுறிப்பிடப்பட்டவை தவிர மொழிபெயர;ப்பு, கட்டுரைஎழுதுதல்,  கற்பித்தல் இசெயற்திட்டஉருவாக்கம், வணிகம், ஆலோசனை என இன்னும் ஏராளமானஆன்லைன் சேவைகள் ஃபைவர்தளத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதை  நீங்கள் காணலாம்.

ஃபைவர்தளத்தில் வழங்கப்படும் ஏதாவது ஒருசேவையை ” Gig -கிக்”  எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, “உங்களுக்கு

 தரமான லோகோ ஒன்றை ஐந்து லாடருக்கு என்னால் வடிவமைத்துத் தரமுடியும்”  என்பது சேவை வழங்குபவரின் ஒரு  ”கிக்- Gig” ஆக இருக்கலாம்.

SEE MORE  Microsoft Equation Editor

”கிக்ஸ்”  எனப்படும் சேவைகளை வழங்கப்  பதிவுசெய்தபயனர் அல்லது ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றும் நபர் (seller) விற்பனையாளர் என அழைக்கப்படுகிறார்.

அதே போன்று ”கிக்ஸ்” களை வாங்க அல்லது சேவைகளைப் பெறுவதற்காக பதிவுசெய்யப்பட்ட பயனரை அல்லது ஃப்ரீலான்ஸரைப் பணியமர்த்தும் நபர் (buyer) வாடிக்கையாளர் அல்லது சேவைபெறுநர் எனவும் அழைக்கப்படுகிறார்.

ஃபைவரில் சேவைகளைப் பெறவோ அல்லது வழங்கவோ எதுவாக இருந்தாலும் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இக்கணக்கை இலவசமாகவே ஃபைவரில் உருவாக்கிக் கொள்ளமுடியும்.

ஃபைவரில்

6 300x169 - வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை

சேவை பெறுநராக கணக்கொன்றை உருவாக்கி சேவைகளைப் பெறுவதென்பது இலகுவானவிடயம்தான். ஆனால் சேவைவழங்குநராகப் பதிவுசெய்து உங்களால் வழங்கக் கூடியசேவைகளை ”கிக்” உருவாக்கி அதற்கு வாடிக்கையாளர்களைப் பெறுவது என்பது ஃபைவருக்குப் புதியவர்களுக்குசற்று சிரமமான காரியம்தான்.

நீங்கள் பைவரில் சேவை வழங்குனராகப் பதிவு செய்து உங்கள் ”கிக்” அங்கீகரிக்கப்பட்டதும், அது ஃபைவர் சந்தையில் உரிய  பிரிவில் பட்டியலிடப்படும். அதனைப் பட்டியலிடுவதால்  மட்டும் உங்களுக்கான வேலை கிடைத்து விடுவதில்லை. உங்கள் ’கிக்’ வாடிக்கையாளரைக் கவரும் படியாக இருக்கவேண்டும். மேலும் உங்களைப் போன்ற திறமையுடன் இன்னும் பல சேவை வழங்குநர்கள் உங்களோடு போட்டியில் இருப்பர்.  அத்தோடு முன்னரே சேவைகள் வழங்கி தரப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர்கள் பட்டியலில் முன் நிலையில் இருப்பர். தரப்ப்படுத்தலுக்குள்ளானவர்கள் மிகச் சுலபமாக வேலைகளைப் பெறுவர். இருந்தாலும் நீங்கள் அதையிட்டுக் வருத்தப்படக் கூடாது

About admin

Check Also

What is OTT?

What is OTT?

Share it if you like What is OTT? OTT என்றால் என்ன? OTT என்பது ஓவர்-தி-டாப் (Over …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க