Home / General / முப்பரிமாண பொருள்களை உருவாக்கும் 3D Printer

முப்பரிமாண பொருள்களை உருவாக்கும் 3D Printer

3D அச்சுப்பொறி (Printer) என்பது முப்பரிமாணவத்தில் (Three Dimensional) பொருள்களை உருவாக்கக் கூடிய கணினி சார்ந்த உற்பத்தி (ஊழஅpரவநச யுனைநன ஆயரெகயஉவரசiபெ) சாதனமாகும்.  பாரம்பரிய அச்சுப்பொறியைப் போன்றே ஒரு 3D அச்சுப்பொறி டிஜிட்டல் தரவை கணினியிலிருந்து உள்ளீடாகப்  பெறுகிறது. இருப்பினும், வெளியீடாகக் காகிதத்தில் அச்சிடுவதற்குப் பதிலாக, ஒரு 3D அச்சுப்பொறி ஒரு  ப்லாஸ்டிக் மற்றும்  உலோக மூலப்பொருள்களைப் பயன் படுத்தி  திண்ம நிலையில் முப்பரிமாண மாதிரியை உருவாக்குகிறது. இவற்றில் ப்லாஸ்டிக்கை  மூலப் பொருளாகப் பயன் படுத்தும் 3D அச்சுப்பொறிகளே   அதிகளவில் பயன் பாட்டில் உள்ளன.

3D அச்சுப்பொறிகள்  மூலம் அச்சிட அல்லது ஒரு பொருளின் முப்பரிமான வடிவத்தைப்  பெற  சேர்க்கை உற்பத்தி முறையைப்  (Additive manufacturing) பயன் படுத்தப்படுகிறது.  இங்கு பொருள்களை உருவாக்குவதற்கு (அல்லது ”அச்சிட”) பொருளின்  உருவம் முழுமையாகும் வரை  ஒவ்வொரு அடுக்காக (layers) மூலப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

3D அச்சுப்பொறியில் அச்சிடும் செயற்பாடானது கழித்தல்  உற்பத்தி முறையிலிருந்து (subtractive manufacturing)  வேறுபடுகிறது.  கழித்தல்  உற்பத்தி முறையில் ஒரு இயந்திரம்  மூலம்  மூலப்பொருளின்  பகுதிகளை  நீக்கி அல்லது  மாற்றி  புதிதாக ஒரு மாதிரி உருவம் வடிவமைக்கப்படும்.

கழித்தல்  உற்பத்தி முறையை விட  D அச்சுப்பொறிகளை புதிதாக மாதிரிகள் உருவாக்குவதில் திறன் மிக்கதாக செயற்படுவதுடன்  குறைந்த அளவிலேயே  கழிவுகளையும் தருகின்றன.

3D அச்சுப்பொறியில் ஒரு 3D மாதிரியை அச்சிடுவதற்கான செயல்முறை,   உருவாக்கும் பொருளைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு பிளாஸ்டிக் மாதிரியை  உருவாக்கும் போது, ​​ஒரு 3D அச்சுப்பொறி இணைந்த படிநிலை மாதிரி (FDM –  Fused deposition modeling) என அழைக்கப்படும் ஒரு செயல்முறையைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் அடுக்குகளை வெப்பமாக்கி, உருகிவிடக்கூடும்.

ஒரு உலோக பொருளை உருவாக்கும் போது, ​​ஒரு 3D அச்சுப்பொறி நேரடி உலோக லேசர் வெப்பமாக்கல் (DMLS- direct metal laser sintering) என்று அழைக்கப்படும் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறையில் ஒரு உயர் இயங்கு திறன் கொண்ட லேசர் கதிரைப் பயன்படுத்தி உலோக தூளிலிருந்து உலோக  அடுக்குகளை உருவாக்குகிறது.

1980 களில் இருந்து 3D அச்சிடல் சாத்தியமானதாக இருந்தாலும், இது முதன்மையாக பெரிய அளவிலான தொழில்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இருப்பினும், அண்மைக் காலத்தில் 3D அச்சுப்பொறிகள் மிக மலிவானதாக நுகர்வோர் சந்தையில் கிடைக்கின்றன. தொழில்நுட்பம் இன்னும்  வளரும் போது, ​​3D அச்சுப்பொறிகள் ஒவ்வொரு கணினிப்பயனர் மேசையிலும் வைக்கப்படும் நாள் தொலைவில் இல்லை எனலாம்

About admin

Check Also

விண்டோஸ் நிறுவும்போது MBR partition ஒன்றை GPT partition ஆக மாற்றுவது எப்படி?

Windows 10 அல்லது 11 Bootable Media ஐ Install செய்யும்போது உங்களுக்கு “Windows cannot be installed to …

Leave a Reply