404 Not Found எதற்கு இந்தப் பிழைச் செய்தி
ஒரு இணைய தளத்தை பார்வையிடுகையில் அவ்வப்போது சில பிழைச் செய்திகளையும் பிரவுஸர் காண்பிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றுள் பொதுவான ஒரு பிழைச் செய்திதான் 404 Not Found. என்பதாகும். வெப் சேர்வரில் இல்லாத ஒரு இணைய பக்கத்தைப் பார்வையிட முயற்சிக்கும் போதே இந்தப் பிழைச் செய்தி யைக் காண்பிக்கும். அதாவது அந்தப் பக்கம் சேர்வரிலிருந்து அகற்றப் பட்டிருக்கலாம் அல்லது எட்ரஸ் பாரில் தவறான முகவரி டைப் செய்திருக்கலாம். இந்த பிழைச் செய்தி சேர்வரினால் பிரவுஸருக்கு அனுப்பப் படுகிறது. இப்பிழைச் செய்தி தோன்றும் போது எட்ரஸ் பாரில் நீங்கள் டைப் செய்திருக்கும் முகவரி சரியானதா என உறுதி செய்து கொள்ளுங்கள். முகவரி சரியாயிருப்பின் அந்தப் பக்கம் அகற்றப் பட்டிருப்பது உறுதி.

அனூப்