Home / General / Add Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்
addmetosearch

Add Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்

Add Me to Search கூகுலில் ஒரு நபரைப் பற்றிய  விவரங்களைக்  தேடிக்  கண்டுபிடிப்பது என்பது எளிதான விடயமல்ல. ஒரே பெயரில் பல பேர் இருக்கக் கூடிய நிலையில் நாம் தேடும் நபர் பற்றிய விவரங்களைக் கண்டறிவது உண்மையிலேயே  கடினம்தான். மேலும் நாம் தேடும் நபருக்கு  வலுவான ஓர் ஆன்லைன் இருப்பு (online presence) இல்லையென்றால் அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடிப்பது சவாலான விடயம்தான்.  

எனினும் கூகுலில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெயர்,  பிரபலமான ஒரு நபரின் பெயர்  போன்றவற்றை  நீங்கள் எப்போதாவது தேடியிருந்தால் தேடல் முடிவுகளில் அந்நிறுவனம் பற்றிய அல்லது அந்த பிரபல நபர் பற்றிய விவரங்களை வலப்புறம் அழகிய முறையில் கட்டமிட்டுக் காண்பிப்பதைப் பார்த்திருக்கலாம்.

Add Me to Search

கூகுலின் இந்த தேடல் முடிவு அம்சத்தை  பிரபலமல்லாத சாதாரண நபர்களும் பயன் பெறும் வகையில் புதிதாக கூகுல் பீப்பல் கார்ட் Google People card எனும் மெய் நிகர் அட்டையை (virtual visiting card) உலகில் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சாதாரண நபர்களும்  கூகுள் தேடலில் தங்கள் பெயரை ”Add Me to Search”  “தேடலில் என்னைச் சேர்” அம்சம் மூலம் சேர்க்கலாம்.

அதாவது  ஒருவரின்  பெயரை கூகுலில் தேடும் போது  வரும்  தேடல் முடிவுகளில் அவரது கூகுல் பீப்பல் கார்ட் எனும் மெய் நிகர் வணிக அட்டையைக் காண்பிக்கும்.

கூகுளின் இந்த புதிய ‘மக்கள் அட்டை’ தேடல் முடிவுகளில் தனிநபர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் காண்பிக்க அனுமதிக்கின்றன.

add me

மக்கள் அட்டைகள் தொழில் வல்லுநர்கள் (business professionals), கலைஞர்கள்(artistes), தொழில்முனைவோர் (entrepreneurs), வேலை தேடுவோர்(job seekers), பகுதி நேர பணியாளர்கள் (part time workers)அல்லது ஆன்லைனில் தங்கள் இருப்பை வளர்க்க விரும்பும் எவருக்கும் பயனுள்ள வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பீப்பல் கார்ட் மக்கள் அட்டையை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்றாலும் வாடிக்கையாளர்கள் தொடர்பை எளிதாக்குவதற்கு வணிக மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு அதிக பயனளிக்கிறது.

பிற பயனர்கள் தங்கள் பொது சுயவிவரத்தை உருவாக்குவது அவரவர் விருப்பம். ஏனெனில் இது அவர்களின் தனியுரிமைக்கு (privacy) பாதிப்பை ஏற்படுத்தலாம்.

people card

மக்கள் அட்டையில் உங்கள் Google கணக்கிலுள்ள படம், தொழில் விவரம், இணையதள இணைப்பு, சமூக ஊடக சுயவிவரங்களுக்கான இணைப்புகள், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மக்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் வேறு எந்த தகவலையும் சேர்க்கலாம்.

மக்கள் அட்டையில் சேர்க்க விரும்பும் விவரங்களை  நீங்களே தீர்மானிக்கலாம். நீங்கள் கூடுதல் தகவல்கள் வழங்கும் போது, உங்களை எவரும் கூகுலில் கண்டுபிடிக்கும் வேலை எளிதாகும். மேலும் இந்த மக்கள் அட்டைகள் கூகுல் தேடல் முடிவுகள் பக்கத்தில் மட்டுமே தோன்றும்.

தொலைபேசி எண்ணைக்  காண்பிக்க விரும்பா விட்டால்  அதனை தடுக்கலாம்.  எனினும்  உங்கள் கணக்கை அங்கீகரிக்கும் நோக்கங்களுக்காக கூகுல்  இதனை வினவும்.

88 760x400 1

கூகுல் தேடலில் உங்கள் பெயரை  எவ்வாறு சேர்ப்பது?

படி 1 முதலில் கூகுல் செயலில் அல்லது மொபைல் உலாவியைத் திறந்து Google.com சென்று உங்கள் பெயரை கூகுலில் தேடுவதன் மூலமோ அல்லது “Add Me to Search” என்ற தேடல் வினவலை உள்ளிடுவதன் மூலமோ இது “Get started” எனும் பட்டணைக் காண்பிக்கும் . அதன் மீது இது கிளிக் செய்வதன் மூலம் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை சரிபார்த்தபின் மக்கள் அட்டையை உருவாக்குவதற்கான படிவம் தோன்றும்.

மொபைல் உலாவி மட்டுமே தற்போது இதனை ஆதரிக்கிறது. டெஸ்க்டாப் கணினியில் இதனை  செயற்படுத்த  முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

படி 2 – தோன்றும் படிவத்தில் உங்கள் தகவல்களை வழங்கி  நிரப்புங்கள்.  உங்கள் பெயரை தேடல் வினவலாக யாரும் பயன் படுத்தும் போது இத் தகவல்களே  மக்கள் அட்டையில் காண்பிக்கும்.

படி 3 – அடுத்து படிவத்தைப்  பூர்த்தி  செய்து சேமியுங்கள். அப்போது Google தேடலில் உங்களை வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுவிடும்.

உங்கள் பெயர் தேடல் முடிவுகளில் காண்பிக்க சிறிது நேரம் எடுக்கும். எனவே உங்கள் Google தேடல் சுயவிவரத்தை சேமித்த உடனேயே முடிவை எதிர்பார்க்க வேண்டாம்.

இந்த கூகுல் பீப்பல் கார்ட் அம்சம் இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதனால் பிற நாடுகளில் இந்த வசதியை தற்போது காண்பிக்காது. எனினும் VPN (Virtual Private Network) பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்து செயற்படுத்திக் கொள்ளலாம். பிற நாடுகளில் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பதை கூகுல் இது வரை அறிவிக்கவில்லை.

tamiltech.lk

About admin

Check Also

11 Medium

High-speed internet via airborne beams of light

High-speed internet via airborne beams of light கூகுலின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet) இந்த ஆண்டின் தொடக்கத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *