வீடியோ பைல்களில் MPEG, AVI, WMV, FLV, 3GP, MP4 என ஏராளமான பைல் வடிவங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.. இந்த ஒவ்வொரு வீடியோ பைல் போமட்டும் தனககேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன கணினியில் மட்டுமல்லாது கையடக்கத் தொலைபேசி, விசிடி / டிவிடி ப்லேயர் /எம்பி4 ப்லேயர், கெம்கோடர் மற்றும் இணையம் என பல்வெறு சாதனங்களில் வெவ்வேறு வகையான வீடியோ பைல் போமட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன.
எல்லா பைல் வீடியோ போமட்டுகளையும் எல்லா ஊடகங்களிலும் பயன் படுத்த முடிவதில்லை. உதாரணமாக நீங்கள் நேற்று டிவிடியில் பார்த்த ஒரு திரைப்படத்தை அல்லது பாடலை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொள்ள விரும்பினால அதனை டிவிடி வீடியோவாகவே பதிந்து விட முடியாது. அந்த செல்போன் ஆதரிக்கும் ஏதொவொரு வீடியோ பைல் போமட்டில் அந்த டிவிடி வீடியோவை மாற்றியே பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒரு பைல் போமட்டிலிருந்து மற்றுமொரு பைல் போமட்டுக்கு மாற்றுவதற்கென ஏராளமான மென்பொருள்கள் பாவனையிலுள்ளன. ஆனால் அவையனைத்தும் எல்லா வகையான வீடியோ பைல் மோமட்டுகளையும் ஆதரிப்பதில்லை.
அனேகமான மென்பொருள்கள் கொண்டு வீடியோ பைல் போமட்டை மாற்றும் போது வீடியோவின் தரம் குறைவதோடு அதனை மாற்றும் செயற்பாட்டிற்கு அதிக நேரமும் எடுத்துக் கொள்கின்றன..
-அனூப்