எண்ட்ரொயிட் ஸ்மாட் தொலைபேசியில் கேமராவில் எடுத்த படங்கள், வீடியோ என பல தனிப்பட்ட தகவல்களை வைத்திருப்பீர்கள். ஆனால் சில வேளைகளில் உங்கள் தொலைபேசியை நண்பர்களிடம் கொடுக்க வேண்டிய தேவைகளும் வரலாம். அப்போது தொலைபேசியிலுள்ள உங்கள் அந்தரங்கக தகவல்களை நண்பரும் பார்க்கக் கூடிய வாய்ப்புகளுண்டு. எனவே அவ்வாறான அந்தரங்க தகவல்களைப் பாதுகாக்கவென அண்ட்ரொயிட் கையடக்கக் கருவிகளுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் எப்லிகேசனே எப்-லொக்.
இதன் மூலம் ஸமாட் கருவியிலுள்ள பைல்கள், படங்கள், வீடியோ, தொலைபெசி இலக்கப் பட்டியல், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் போன்ற ஏனைய எப்லிகேசன்கள் என எல்லாவற்றையும் தனித்தனியே பாஸ்வர்ட் இட்டுப் பாதுகாக்கலாம். ஸ்மாட் தொலைபேசியை பிறர் கையில் கொடுத்தாலும் பாஸ்வர்ட் இல்லாமல் அவர்களால் எந்த்த்த் தகவல்களையும் அணுக முடியாது. கூகில் ப்லே ஸ்டோரில் இலவசமாகக் இடைக்கும் இந்த யுppடுழஉம ஒவ்வொரு எண்ட்ரொயிட் பயனரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய எப்லிகேசன். -அனூப்-