Home / Tips / Auto Recover feature in MS Office

Auto Recover feature in MS Office

மைக்ரோஸொப்ட் ஒபிஸ் Auto Recover
Save optionsமைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுதியில் ஓட்டோ ரிகவரி எனும் வசதியுள்ளது. இந்த வசதி மூலம் ஒபிஸ் தொகுப்பில் பணியாற்றும் போது நமது டேட்டா கணினியில் ஒரு குறித்த நேர இடை வெளியில் (10 நிமிடம்தானாகவே சேமிக்கப் பட்டு விடுகின்றன. எதிர் பாராத விதமாக மின் தடை போன்ற காரணங்களால் கணினியின்  இயக்கம்தடைப் படும் போது  நாம் சேமிக்க மறந்தாலும் இந்த ஓட்டொ ரெகவரி வசதி மூலம் அந்த பைலை மீட்டெடுக்க முடியும். இந்த வசதி தற்போதைய ஒபிஸ் பதிப்பான 2013 மட்டுமல்லாது முன்னைய  பதிப்புக்களான  ஒபிஸ் எக்ஸ்பீ, 2003. 2007 ,மற்றும்2010 பதிப்புக்களிலும் உள்ளது.
இவ்வாறுதானாகவே 10 நிமிடங்களுகொருமுறை சேமிக்கும்  நேர  இடை வெளியை நீங்கள் விரும்பியபடி கூட்டவோ குறைக்கவோ முடியும்.
ஒபிஸ் தொகுப்பில் ஏதேனும் ஒரு எப்லிகேசனில் உதாரணமாக எம்.எஸ்.வர்ட் 2010 இல் File  மெனுவில்க்ளிக் செய்து  Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில்  Save  க்ளிக் செய்து Save AutoRecover information எனுமிடத்தில் நேர இடை வெளியைக் மாற்றிக் கொள்ள முடியும்.
எம்.எஸ்.வர்ட் 2007 பதிப்பில் ஒபிஸ் பட்டனில் க்ளிக் செய்து Word Options தெரிவு செய்து மேற் சொன்னது போன்றே நெர இடை வெளியை மாற்றிக் கொள்ளலாம்.

ஒபிஸ்2003 பதிப்பில் Tools  மெனுவில்Options தெரிவு செய்து வரும் டயலொக் பொக்ஸில் Save டேபில் க்ளிக் செய்து Save AutoRecover info every எனிமிடத்தில் மேற் குறிப்பிட்டபடி  மாற்றியமைக்கலாம்.

அனூப் 

About Imthiyas Anoof

Check Also

word tip

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி

வேர்டில் உரை அல்லது படங்களை நகலெடுக்கவும் நகர்த்தவும்   Ctrl + C>   Ctrl + X    மற்றும் Ctrl + …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!