பிரவுஸர் உதவிக் குறிப்பு
கூகில் க்ரோம் ப்ரவுசரைப் பயன் படுத்தி gmail, yahoo, facebook போன்ற தளங்களைப் அணுகும் போது சில வேளைகளில் அத்தளங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக படத்தில் காட்டியுள்ளது போன்ற ஒரு பக்கத்தைக் காண்பிக்கும் அப்பக்கத் தில் Server Security Certificate is not yet validஎனும் ஒரு பிழைச் செய்தியையும் காண்பிக்கும். அப்போது நீங்கள் “Proceed anyway” எனும் லிங்க்கில் க்ளிக் செய்ய மறுபடியும் அதே முடிவையே தரும். உண்மையில் இந்தப் பிழைச் செய்தி வருவதற்கு உங்கள் கணினி தவறான நேரத்தையும் திகதியையும் காண்பிப்பதே காரணம் ஆகும். எனவே கணினியில் சரியான திகதியை மாற்றியமைப்பதன் மூலம் இப்பிழைச் செய்தியைத் தடுத்து மேற் சொன்ன தளங்களை அடைய முடியும். டாஸ்க் பாரின் வலது பக்க ஓரத்தில் காண்பிக்கப் படும் கடிகாரத்தில் இரட்டைக் க்ளிக் செய்வதன் மூலம் கணினியில் திகதியை மாற்றிக் கொள்ளலாம்.
-அனூப்-