CCleaner
CCleaner என்பது ஒரு கணினி பயன்பாட்டில் அவ்வப்போதுசேரும் தற்காலிக பைல்கள் (temporary files) போன்ற வேண்டாதகுப்பை பைல்களை நீக்கி கணினியை சுத்தப் படுத்தும் ஒரு சிறிய மென்பொருள் கருவியாகும்.
மேலும் கணினி பயனரின் இணைய பயன்பாடு, இணைய தேடல் போன்ற தனிப்பட்ட விடயங்களை பிறர் கண்ணில் படாதவாறு temperory internet files, cookies என்பவற்றை நீக்கி அவரின் அந்தரங்கத்தையும் இது பாதுகாப்பதோடு இணைய திருடர்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. மேலும் நீங்கள் அவ்வப்போது பயன் படுத்தும் அப்லிகேசன்கள் உருவாக்கும் தேவையற்ற பைல்களையும் நீக்கி ஹாட் டிஸ்கில் மேலதிக வெற்றிடத்தையும் சி–க்ளீனர் பெற்றுத் தருகிறது. ,
இந்த சி–க்ளீனர் மென்பொருள் கருவியை https://www.piriform.com எனும் இணைய தளத்திலிருந்து தறவிறக்கம் செய்யலாம்.
அனூப்