எழுத்துருக்களை உருவாக்க ஒரு தளம்..
நீங்கள் விரும்பும் வடிவத்தில் எழுத்துருக்களை உருவாக்க உதவுகிறது fontstuct.com இனைய தளம். இவ்விணைய தளத்தில் நுளைந்து இலவசமாக ஒரு கணக்கை உருவாக்கி விட்டு “Create new fontstruction” எனும் இணைப்பில் க்ளிக் செய்யுங்கள். அப்போது நீங்கள் உருவாக்க விரும்பும் எழுத்துருவுக்கு ஒரு பெயரை வழங்கச் சொல்லுங்கள். அடுத்து நீங்கள் விரும்பிய எழுத்துருவை “A” முதல் “Z” வரை ஆங்கில பெரிய எழுத்திலும் (uppercase) சிறிய எழுத்திலும் (lowercase) உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு உங்கள் கற்பனைத் திறனும் முக்கியம். எழுத்துரு உருவாக்கும் பணி முடிந்ததும் download பட்டனில் க்ளிக் செய்து உங்கள் கணினிக்கு உடனடியாக தரவிறகம் செய்து கொள்ளலாம். இந்த எழுத்துரு பைல, சிப் எனும் சுருக்கப்பட்ட பைல் வடிவிலேயே தரவிரக்கம் ஆகும் என்பதனால அதனை அன்சிப் செய்தே பயன் படுத்த வேண்டும். -அனூப்-