Home / General / Difference between http and https

Difference between http and https

http / https என்ன வேறுபாடு?
இணையதளமுகவரிகள் பொதுவாக http  எனஆரம்பிக்கும். எனினும் சில இணையதளங்கள் https என ஆரம்பிப்பதையும் நீங்கள்அவதானித் திருக்கலாம் http  (Hypertext Transfer Protocol)  என்பது  இணையம்வழியே தகவல்களை அனுப்பவும் பெறவும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கும்சில வரையறைகளாகும்இதுதகவல்கள் விரைவாகவும், இலகுவாகவும் திருத்தமாகவும் தகவல்களைத் தேக்கி வைத்திருக்கும் சேர்வர்கணினி களிடையேயும் பயனரிடையேயும் பரவுவதற்கு வழி செய்கிறது
Http என்பது பொதுவாகhtml கொண்டு உருவாக்கப் பட்ட வெப் பக்கங்களைஅணுகவே பயன் படுகிறது. எனினும்இணையத்திலுள்ள வேறு வளங்க ளையும்Http ஊடாகப் பெற முடியும். சிலநேரங்களில் சேர்வர் கணினிகளின் ஊடாககடன் அட்டை விவரங்கள் போன்றஅந்தரங்கமான விடயங்களையும் பறிமாற வேண்டிய  தேவை ஏற்படலாம்இவ்வாறான தகவல்கள் அதிகாரமற்ற எவரும் பெற முடியாவண்ணம் பதுகாக்கப்படவும் வேண்டும். இநோக்கத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கும்  ஒருநெறி முறையே https  ஆகும். இதனை secure http Http எனப்படுகிறது
பலநிலைகளில் Http மற்றும் https  என்பனஒரே மாதிரியாகவே தொழிற்படுகின்றன. காரணம் அடிப்படையில் அவைஒரே வகையான நெறி முறைகளாகும்
Http மற்றும்   https  க்ளையண்ட்மென்பொருளான ஒரு வெப் பிரவுசர், ஒரு சேவர் கணினியுடன் இணைப்பைஏற்படுத்தி அந்த சேர்வரிடம் ஒருதகவலை எதிர் பார்த்து நிற்கிறது. இந்த செய்தியைப் பெறும் அந்த  சேர்வர் கணினி தனதுதற்போதைய நிலையை தெரிவிப்பதோடு கூடவேஒரு செய்தியையும் பிரவுஸருக்கு அனுப்பி வைக்கிறதுஅந்த செய்தியானது பிரவுசர்எதிர்பார்த்த தகவலாக இருக்கலாம் அல்லதுதகவல் செயற்பாடு முறையாக செயற் படவில்லைஎன்ற ஒரு ஒரு பிழைச்செய்தியாகவோ இருக்கலாம். https  பயன்படுத்தும் போது தரவு மறைகுறியாக்கம் ((encrypted)  செய்யப்பட்ட (SSL Secure Sockets layer-Digital Certificate) பாதுகாப்பானஒரு இணைப்பு அவசியம் என்பதனைசேர்வருக்கு உணர்த்தி விடுகிறது.  
அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply