அடிக்கடிRefresh தேவைதானா?
விண்டோஸ்இயங்கு தளத்த்தில் டெஸ்க்டொப்பில் அல்லது திறந்து வைத்துள்ளஒரு ;போல்டர் விண்டோவில் வலதுக்ளிக் செய்யும் போது தோன்றும் மெனுவில்உள்ள Refresh எனும் தெரிவு இருப்பதைக்கணினிப் பயனர் பலரும்அறிந்திருப்பீர்கள் பயன் படுத்தியிருய்ப்பீர்கள்,
எனினும்இந்த Refresh கட்டளை எதற்கு என்பதைநீங்கள் நினைத்துப் பர்த்ததுண்டா? அது விண்டோஸ் இயங்க்ய்தளத்திற்குப் புத்துயிர் கொடுத்து அதனை திறன்பட இயங்க வைக்கிறதா? கணினியின்வேகத்தை அதிகரிக்கச்செய்கிறதா அல்லது நினைவகத்தில் தேங்கியுள்ளவற்றை அழித்து விடுகிறதா? உனமையில்இது எதுவுமே நடப்பதில்லை.
டெஸ்க்டொப்என்பது விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒருபோல்டர் அன்றி வேறெதுவுமில்லை. அந்தபோல்டரின் உள்ளடக்கம் மாறறத்திற்குள்ளாகும் போது தானாகவே அந்தபோல்டர் புதுப்பிக்கப்படும் வகையில் ஆணைத் தொடர்எழுதப் பட்டுள்ளது. எனினும் சில வேளைகளில்டெஸ்க்டொப் அல்லது ஏதேனும் ஒருபோல்டர் மாற்றத்திற்குள்ளானாலும் அந்த மாற்றத்தைக் காண்பிப்பதிலை. அதாவது (Refresh) புதுப்பிக்கப் படுவதில்லை. எனவே பின்வரும் சந்தர்ப்பங்களில் ரைட் க்ளிக் செய்துவரும் மெனுவில் சநகசநளா தெரிவுசெய்ய்லாம் அல்லது விசைப் பலகையில்F5 விசையை அழுத்தலாம்.
- நீங்கள் உருவாக்கிய, இடம் மாற்றிய, அல்லது பெயர் மாற்றிய பைல் மற்றும் போல்டர்களைக் காண்பிக்காத போது
- உங்கள் டெஸ்க்டொப் ஐக்கன்களை மீள்–வரிசைப் படுத்த்தியும் அது மாற்ற முறாதபோது போது
- டெஸ்க்டொப் ஐக்கன்களைப் பயன் படுத்த முடியாமல் இருக்கும் போது
- ஒரு பயன் பாட்டு மென்பொருள் கொண்டு உருவாக்கி சேமிக்கப் பட்ட பைலைக் காண்பிக்காத போதுமுன்னர் பார்வையிட்ட அல்லது தடைப் பட்ட இணைய தளப் பக்க மொன்றை மறுபடியும் பார்வையிடும் போது
எனினும்டெஸ்க்டொப்பில்; அடிகடி மறுபடியும் மறுபடியும் Refresh செய்தவதைபலரும் ஒரு வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது ஒருதேவையற்ற விடயம என்றே கூறலாம்.
-அனூப்-