Dropbox எனும் இணைய வெளிபைல் சேமிப்பகம்
ட்ரொப்பொக்ஸ் (
Dropbox)
என்பது இணையம் சார்ந்த)
ஒருபைல் சேமிப்பு சேவையாகும்,
இந்தசேவை மூலம் பைல்மற்றும் போல்டர்களை இணைய வெளியில் பாதுகாப்பாகதேக்கி வைக்க முடிவதுடன் தேவையேற்படும் போது அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் பிறருடன்பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.
உங்களது முக்கிய ஆவணங்கள்,
படங்கள் வீடியோ போன்றவற்றை இனிபென் ட்ரைவ்,
சீடி,
டீவிடியிலிட்டுகையிலெடுத்துச் செல்ல வேண்டாம்.
அவற்றை ட்ரொப்பொக்ஸில் சேமித்து விடுவதன் மூலம் எங்கிருந்தும் விரும்பியநேரத்தில் அணுகி பெற்றுக் கொள்ளமுடியும்.
இதுஆகாயக் கணினி எனும் க்லவுட்கம்பியுட்டிங் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
பிரபல்யம்பெற்றுவரும் ட்ரொப்பொக்ஸ் எனும் இந்த பைல்சேமிப்பு சேவையை இலவசமாகவோஅல்லது கட்டணம் செலுத்தியோ பயன் படுத்தலாம். இலவசசேவை மூலம் 2 GB அளவவிலான் இடத்தை ட்ரொப் பொக்ஸ்வழங்குகிறது. எனினும்கட்டணம் செலுத்துவதன் மூ;லம் இந்தஅள்வை மேலும் அதிகரித்துக் கொள்ளமுடிவதோடு இன்னும் பல வசதிகளையும்பெற்றுக் கொள்ளலாம். ட்ரொப் பொக்ஸ் சேவையைஉங்கள நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் 8 GB அளவிலான சேமிப்பிடத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இணையம்சார்ந்த ஓன்லைன் பைல் சேமிப்புசேவையை வழங்கும் Windows Live SkyDrive, Ubuntu One, Sugar,Sync Zumo Drive Wuala போன்ற பிறநிறுவன சேவைகளுடன் ஒப்பிடும்போது ட்ரொப் பொக்ஸ் ஏராளமானவசதிகளைத் தருகிறது.
ட்ரொப்பொக்ஸை பயன் படுத்துவது மிகஎளிதான ஒரு விடயம்.
இந்தமென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு ஒருட்ரொப் பொக்ஸ் கணக்கொன்றை ட்ரொப்பொக்ஸ் இணைய தளத்திலிருந்து உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
அதனை நிறுவியதும் மைடொகுயுமண்ட்ஸ் போல்டரில் ட்ரொப் பொக்ஸ் எனும்பெயரில் ஒரு போல்டர் உருவாகிவிடும்.
அந்த போல்டரை சாதாரணஒரு போல்டர் போல் பயன்படுத்தலாம்.
அந்த போல்டரினுள் பைல்களைவழமையான முறையில் சேமிக்கவும் பைல்மற்றும் பிற போல்டர்களை கொப்பி பேஸ்ட் செய்துவிடவும் முடியும்.
பைல்களை ட்ரேக் அண்ட்ட்ரொப் முறையில் பைல்களை இழுத்துப் போடலாம்நீங்கள்:
விரும்பியபடி சப் போல்டர்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆனால் இந்த போல்டர்,
ட்ரொப்பொக்ஸ்சேர்வரிலுள்ள போல்டர்களையே சுட்டிக் காட்டு கின்றன.
அதனுள் சேமிக்கப்படும் பைல்போல்டர்கள் நீங்கள் இணையத்தில் இணைந்திருப் பின் உங்களை அறியாமலேயே அப்லோட் செய்யப்பட்டு விடும்.
அதிலுள்ள பைல் ஒன்றைத் திறந்துபார்க்கும்போது உங்கள் கணினியிலுள்ள பைல்ஒன்றைத் திறப்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம்.
ட்ரொப் பொக்ஸிலுள்ள பப்லிக் எனும் போல்டரில்இடப்படும் பைல்களை நீங்கள் குறிப்பிடும்நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இணையத்தில்இணையாமலேயே அதனுள் சப் போல்டர்களைஉருவாக்க லாம். பைல்களைச் சேமிக்கலாம். இணையத்தில் இணைந்ததுமே உங்கள் கணினியிலுள்ள ட்ரொப்பொக்ஸ் போல்டர் சேர்வரிலுள்ள உங்கள்கணக்குக் குரிய போல்டருடன் (synchronize) சமப்படுத்தப்படும்.
ட்ரொப்பொக்ஸ் மென்பொருள் நிறுவாத கணினிகளிருந்தும் ட்ரொப்பொக்ஸ் போல்டர்களை dropbox.com இணைய தளத்தின் மூலம்உங்கள் பயனர் பெயர் மற்றும்பாஸ்வர்டுடன் அணுகலாம்.
உங்களிடம்ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருக்கும் பட்சத்தில் அவை ஒவ்வொன்றிலும் ட்ரொப்பொக்ஸ் மென்பொருளை நிறுவி ஒரு கணினியிலுள்ளட்ரொப் பொக்ஸ் போடட்ரில் பைல்களைப்புதிதாக சேர்க்கும் போது ஏனைய கணினிகளில்ஒரு செய்திப் பெட்டி தோன்றி இது பற்றிஅறியத் தரும்.
இவ்வாறுஏராளமான வசதிகளை ட்ரொப்பொக்ஸ் தருகிறது. இதனை Windows , Mac OS X Linux என பல்வேறுஇயங்கு தளங்களில் பயன்படுத்தவும் முடியும்.
-அனூப்-