எம்.எஸ்.வர்டில் F2
எம்.எஸ்.வர்டில் டைப் செய்துள்ள ஒரு டெக்ஸ்ட் பகுதியை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு நீங்கள் கட் பேஸ்ட் எனும் வசதியை இதுவரை பயன் படுத்தியிருக்கலாம். ஆனால் அதனைவிட இலகுவாக டெக்ஸ்டை நகர்த்துவதற்கு உதவி புரிகிறது F2 எனும் விசை. முதலில் நீங்கள் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட் பகுதியை தெரிவு செய்து கொள்ளுங்கள். அடுத்து F2 விசையை ஒரு முறை அழுத்துங்கள். பின்னர் நகர்த்தப் பட வேண்டிய இடத்திற்கு வந்து விசைப் பலகையில் Enter விசையைத் தட்டி விடுங்கள்.
அனூப்