Home / TechNews / Facebook introduces blood donation feature in Sri Lanka

Facebook introduces blood donation feature in Sri Lanka

Facebook introduces blood donation feature in Sri Lanka இலங்கைக்கான இரத்த தானம் செய்யும் அம்சத்தை (blood donation feature) அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக்

இந்த அம்சத்தை இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு தற்போது பயன் படுத்த ஆரம்பிக்கலாம்.

Facebook introduces blood donation feature in Sri Lanka

இலங்கையில் 18-55 வயதுக்குட்பட்ட ஃபேஸ்புக் பயனர்கள் இரத்த தானம் செய்பவர்களாக பதிவுபெறத் தொடங்கவும், அருகிலுள்ள இரத்த மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் இரத்தத் தேவைகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறவும் முடியும். மேலும் நாடு முழுவதும் உள்ள 24 ரத்த வங்கிகள் இந்த சிறப்பம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அதிகமான மக்களை இரத்த தானம் செய்ய ஊக்குவிப்பதற்காகவுமே இந்த வசதி ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பம்சத்தைப் பெறும் 29 வது நாடாக இலங்கையும் சேர்கிறது.

பேஸ்புக்கில் இரத்த தானம் குறித்த புதுப்பிப்புகளைப் பெற நீங்களும் பதிவு செய்யலாம்

முதலில் பேஸ்புக் பக்கத்தில் வலது பக்க மேல் மூலையில் உள்ள சுயவிவரப் படத்தை க்ளிக் செய்
அடுத்து About மெனு க்ளிக் செய்
அதன் கீழுள்ள Details About You க்ளிக் செய்
அதன் கீழ் சென்று Learn About Blood Donations க்ளிக் செய்
Get Updates about Donating Blood என்பதன் கீழ்
Get Updates க்ளிக் செய்

About admin

Check Also

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து …

Leave a Reply