Home / Sites / Find drivers for your PC easily

Find drivers for your PC easily

ட்ரைவர் மென்பொருள் கிடைக்கவிலையா?
ஹாட் டிஸ்கை போமட் செய்து விண்டோஸ் இயங்குதளத்தைப் புதிதாக  நிறுவியதும் கணினியில் பொருத்தப்பட்டுள்ள வன்பொருள் சாதனங்களுக்குரிய பொருத்தமான ட்ரைவர்  மென் பொருளை  கிடைக்கவிலையாஇதோ  உங்களுக்குக் கை கொடுக்கிறது 3DP Chip kw;Wk;   மற்றும்  3DP Netஎனும் இலவச யூட்டிலிட்டிகள்.
விண்டோஸ் புதிதாக நிறுவியதும் உங்கள் நெட்வர்க் கார்டுக்குரிய ட்ரைவர் மென்பொருளை நிறுவாமல் இணையத்தில் உங்களால் இணைய  முடியாதிருக்கும். எனினும் இந்த 3DP Net யூட்டிலிட்டி உங்கள் கனினியில் பொருத்தப் பட்டிருக்கும் நெட்வர்க் கார்டைக் கண்டறிந்து பொருத்தமான ட்ரைவரை நிறுவி இணையத்தில் இணைவதற்கு வசதியளித்து அதிசயிக்க வைக்கிறது.
அதேபோன்று 3DP Chipஎனபது மற்றுமொரு பயனுள்ள கருவி உங்கள் கணினியிலுள்ள சிபியூ மதர்போட் வீடியோ கார்ட்சவுண்ட் கார்ட் போன்ற அனைத்து  வன்பொருள் சாதனங்களையும் கண்டறிந்து அவை பற்றிய விவரங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றிற்குரிய ட்ரைவர் மென்பொருள்கிடைக்கக் கூடிய இணைய தளங்களுக்கான இணைப்புகளையும்  காண்பிக்கிறது.
உங்கள் கணினியில் இணைய இணைப்பு இருக்குமெனில் தரப்படும் அந்த இணைப்பில் க்ளிக் செய்வதன் மூலம் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்குரிய பொருத்தமான ட்ரைவர் மென்பொருளை டவுன் லோட் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் கருவியை http://www.3dpchip.com எனும்இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். – அனூப் –

About Imthiyas Anoof

Check Also

What is DOS?  

What is DOS? Disk Operating System “டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்” என்பதன் சுருக்கமே  DOS.  ஐபிஎம்-மற்றும் அதற்கு இணக்கமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *