Home / General / Fiverr-Online market place for freelancing

Fiverr-Online market place for freelancing

Fiverr-Online market place for freelancing ” ஃபைவர் Fiverr என்பது உலகளாவிய ஆன்லைன் சந்தையாகத் தொழிற்படும் மிகப் பிரபலமான ஓர் இணையதளமாகும். ஆன்லைனில் பொருட்களைக் வாங்கவும் விற்கவும் Ebay, Amazon, Ali Express போன்றதளங்கள் எவ்வாறு பிரபலமானதாக விளங்குகின்றதோ அதேபோல் இணையம் வழியே சேவைகளை வழங்கவும் பெறவும் உருவாக்கப்பட்டிருக்கும் பிரபலமானஒரு இணையதளமே ஃபைவர். இந்த இணையதளம் மூலம் கணினி மற்றும் இணையம் சார்ந்த ஏராளமான சேவைகளைப் பெறவும் வழங்கவும் முடிகிறது. ஃபைவர் மூலம் வழங்கப்படும் ஒரு சேவைக்கான கட்டணம் ஐந்து டாலரில் ஆரம்பித்து ஐந்து டாலரால் அதிகரித்துச் செல்கிறது. இதன் காரணமாகவே இத்தளத்திற்கு (Five – ஐந்து) ஃபைவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை

எந்த நிறுவனத்திலும் முழு நேரபணியாளராக இணைந்து சேவையாற்றாத ஃப்ரீலான்ஸர்ஸ் (freelancers) எனப்படும் தனிநபர்களே உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் சேவைகளை வழங்க ஃபைவரை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

Fiverr-Online market place for freelancing

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சம்பாதிக்கலாம் என எராளமான விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கலாம். ஆனால் அவற்றுள் அதிகமானவை போலியானவையாகவும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாகவுமே இருக்கும். அவ்வாறான விளம்பரங்களுக்குமத்தியில் ஃபைவர் தளம் எந்தவிதமான போலித்தனமும் இல்லாமல் திறமையுள்ள எவரும் மாதந்தோறும் இலட்சங்களில் சம்பாதிக்கக் கூடியவாறு உண்மையான ஆன்லைன் தொழில் வாய்ப்பை கடந்த பத்து வருடங்களாக வழங்கிவருகிறது.

ஃபைவர் போன்று ஆன்லைன் சேவைகளை வழங்கவென freelancer, upwork, peoplesperhour என இன்னும் ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவை கூட உலகளவில் மிகப்பிரபலமானவைதான். இத்தளங்கள் நிறுவனங்கள் சார்ந்ததும் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக் கூடியதுமான பெரிய செயற் திட்டங்களையே அதிகளவில் சந்தைப் படுத்துகின்றன. அவற்றில் சேவையாற்று வோரும் professionals எனும் தொழில் வல்லுநர்களாகவே இருப்பர்.

ஆனால் அவற்றிற்கு மாறாக ஃபைவர் தளம் ஓரிரு நாட்களில் பூர்த்திசெய்யக் கூடிய தனிநபர் சார்ந்த மைக்ரோ ஜொப்ஸ் (micro jobs) எனப்படும் மிகச்சிறிய வேலைகளை சந்தைப்படுத்துகின்றன. சில நேரம் அவ்வேலைகள் உங்கள் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப ஓரிரு மணித்தியாலங்களிலோ அல்லது ஓரிரு நிமிடங்களிலோ கூட செய்துமுடிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை ஒரே நிமிடத்தில் செய்து முடித்தாலும் அந்தவேலைக்குரிய கூலியாக ஐந்து டாலர் உறுதி என்பது ஓர் ஆச்சரியமானஉண்மை.

சாரதி தேவை, பணிப்பெண் தேவை, காவலாளி தேவை என பத்திரிகைகளில் தொழில் வாய்ப்பு வெற்றிடங்களுக்கான விளம்பரங்கள் பார்த்திருப்பீர்கள். ஃபைவர் என்பது இது போன்று தொழில் வாய்ப்பு வெற்றிடங்களை விளம்பரப்படுத்தும் தளம் அல்ல.

உங்கள் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய பல் வேறு திறமையுள்ள தொழிலாளர்கள் எங்களிடம் காத்திருக்கிறார்கள். நீங்களே அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு வேலைக்கமர்த்திக் கொள்ளலாம். உங்களுக்குத் திருப்தியான சேவையும் கிடைக்கும். வேலையாளுக்கு திருப்தியான ஊதியமும் கிடைக்கும். மத்தியஸ்தம் செய்யும் எங்களுக்கும் சிறிய கமிஷன் கிடைக்கும் இவ்வாறுதான் ஃபைவர் செயற்படுகிறது

ஃபைவரில்

 • கிரேஃபிக் வடிவமைப்பு (Graphic Designing),
 • லோகோ வடிவமைப்பு(logo designing)
 • இணையதள வடிவமைப்பு (web designing),
 • ப்ளோக் உள்ளடக்கம் எழுதுதல் (blog content writing)
 • வீடியோ படங்களுக்குக் குரல் கொடுத்தல் (voice over)
 • காட்டூன் வீடியோ உருவாக்கம்
 • டீ-ஷர்ட் வடிவமைப்பு,
 • சமூகவலைத்தளங்கள் மூலமான சந்தைப்படுத்தல (Social Media Marketing),
 • வீடியோ எடிட்டிங்,
 • மெய்நிகர் உதவியாளர் பணி (Virtual Assistant),
 • கணிணி செய்நிரலாக்கம் (Programming)
 • அண்ட்ராயிட் செயலி உருவாக்கம்
 • மற்றும் தரவு உள்ளீடு (data entry)

போன்றன மிகவும் பிரபலமானவையும் அதிக தேவையும் உள்ள டிஜிட்டல் சேவைகளாகக் கருதப்படுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்டவை தவிர மொழிபெயர்ப்பு, கட்டுரைஎழுதுதல், கற்பித்தல் செயற்திட்ட உருவாக்கம், வணிகம், ஆலோசனை வழங்கள் என இன்னும் ஏராளமான ஆன்லைன் சேவைகள் ஃபைவர்தளத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.

ஃபைவர்தளத்தில் வழங்கப்படும் ஏதாவது ஒரு சேவையை ”Gig -கிக்” எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, “உங்களுக்குதரமான லோகோ ஒன்றை ஐந்து லாடருக்கு என்னால் வடிவமைத்துத் தரமுடியும்” என்பது சேவை வழங்குபவரின் ஒரு ”கிக்- Gig” ஆக இருக்கலாம்.

”கிக்ஸ்” எனப்படும் சேவைகளை வழங்கப் பதிவு செய்த பயனர் அல்லது ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றும் நபர் (seller) விற்பனையாளர் என அழைக்கப்படுகிறார்.

அதே போன்று ”கிக்ஸ்” களை வாங்க அல்லது சேவைகளைப் பெறுவதற்காக பதிவுசெய்யப்பட்ட பயனரை அல்லது ஃப்ரீலான்ஸரைப் பணியமர்த்தும் நபர் (buyer) வாடிக்கையாளர் அல்லது சேவைபெறுநர் எனவும் அழைக்கப்படுகிறார்.

ஃபைவரில் சேவைகளைப் பெறவோ அல்லது வழங்கவோ எதுவாக இருந்தாலும் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இக்கணக்கை இலவசமாகவே ஃபைவரில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஃபைவரில் சேவை பெறுநராக கணக்கொன்றை உருவாக்கி சேவைகளைப் பெறுவதென்பது இலகுவானவிடயம்தான். ஆனால் சேவைவழங்குநராகப் பதிவுசெய்து உங்களால் வழங்கக் கூடிய சேவைகளை ”கிக்” உருவாக்கி அதற்கு வாடிக்கையாளர்களைப் பெறுவது என்பது ஃபைவருக்குப் புதியவர்களுக்கு சற்று சிரமமான காரியம்தான்.

நீங்கள் பைவரில் சேவை வழங்குனராகப் பதிவு செய்து உங்கள் ”கிக்” அங்கீகரிக்கப்பட்டதும், அது ஃபைவர் சந்தையில் உரிய பிரிவில் பட்டியலிடப்படும். அதனைப் பட்டியலிடுவதால் மட்டும் உங்களுக்கான வேலை கிடைத்து விடுவதில்லை. உங்கள் ’கிக்’ வாடிக்கையாளரைக் கவரும் படியாக இருக்கவேண்டும்.

ஃபைவரிற்குப் புதியவர்கள் ‘கிக்’ உருவாக்கி விட்டு உங்களுக்கான வாடிக்கையாளர் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டு,ம். அந்தக் காத்திருப்பு ஒரு சில நாட்கள் முதல் ஒரு சில மாதங்கள் வரை கூட இருக்கலாம். மேலும் இங்கு வாடிக்கையாளரோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுடைய திருப்தியடைய மட்டும் சேவையாற்ற வேண்டும். எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பொதுவாக ஃபைவர் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டுக்காரர்களாகவே இருப்பர்.

உங்கள் ‘கிக்’கை யாராவது ஆர்டர் செய்தால், ஃபைவர் உங்களுக்கு அறிவித்து விட்டு வாங்குபவரிடம் முன்கூட்டியே கட்டணம் அறவிட்டு விடும். உங்கள் ’கிக்’ பூர்த்தி செய்யப்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டதும், உங்கள் விற்பனையாளர் கணக்கில் ’கிக்’ பெறுமதியின் 80% சதவீதம் வரவு வைக்கப்படும். உங்கள் ”கிக்” பெறுமதி ஐந்து டாலராக ஆக இருந்தால், நான்கு டாலரே உங்களுக்குக் கிடைக்கும்.

.அனைத்து ஃபைவர் கிக்ஸின் அடிப்படை விலை ஐந்து டாலர்கள் என்பதை முன்னரே குறிப்பிட்டேன். ஆனால் ஒரு ஆர்டரை ”கிக் எக்ஸ்ட்ராக்கள் (Gig extras) எனப்படும் மேலதிக சேவைகள் வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்கள் வரை எளிதாக அதிகரிக்க முடியும், அதாவது தங்கள் சேவைக்கான கட்டணத்தை சேவை வழங்குநரே தீர்மானித்துக் கொள்ள முடியும். மேலும் ஒருவர் அவரது பல்வேறு திறமைகளுக்கேற்ப ஒன்றிற்கு மேற்பட்ட ’கிக்ஸ்’ களை உருவாக்கி பட்டியலிடவும் முடியும்.

ஃபைவரில் உங்கள் வருவாயை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றியோ, பே-பேல் –PayPal கணக்கின் மூலமோ திரும்பப் பெறலாம். ஃபைவரில் புதிதாக இணைந்தவர்கள் ஒரு கிக் – இனைப் பூர்த்தி செய்து 14 நாட்களின் பின்னரேயே தங்கள் வருவாயை மீளப் பெறலாம்.

ஃபைவரில் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோலாக இருக்கக் கூடாது. உங்கள் வாடிக்கையாளரின் திருப்தியும் மிக முக்கியம். அவர் திருப்தியடைய மட்டும். உங்கள் பணி தொடர வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைப்பதோடு ஐந்து நட்சத்திர மதிப்பாய்வும் (5star review) கிடைக்கும். இவை பிற வாடிக்கையாளர்கள் உங்கள் சேவைகளைப் பெற ஊக்குவிப்பதோடு ஃபைவரில் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் உதவும்.

உங்களிடமும் கணினி மற்றும் இணையம் சார்ந்த திறமைகள் இருந்தால் இப்போதே ஃபைவரில் ஒரு சேவை வழங்குநராக இணைந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களைப் போன்ற திறமையுடன் இன்னும் பல சேவை வழங்குநர்கள் உங்களோடு போட்டியில் இருப்பர். அத்தோடு முன்னரே சேவைகள் வழங்கி தரப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர்கள் பட்டியலில் முன் நிலையில் இருப்பர். தரப்ப்படுத்தலுக்குள்ளானவர்கள் மிகச் சுலபமாக வேலைகளைப் பெறுவர்.

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *