Home / General / For safe web browsing – Mozilla Firefox

For safe web browsing – Mozilla Firefox

பாதுகாப்பாக இணையத்தில் உலாவிட

இணைய உலாவி (web browser) என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் Internet Explorer தான். அந்த அளவுக்கு இணைய பாவனையாளர்கள் மத்தியில் இன்டனெட் எக்ஸ்ப் லோரர் பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இலவசமாகக் கிடைப்பதும், எவராலும் பயன்படுத்தக் கூடிய வண்ணம் எளிய இடை முகப்பைக் கொண்டிருப்பதும் அதன் பிரபல்யத் துக்குக் காரணம் எனலாம். நெட்ஸ்கேப் நெவிகேட்டர், ஒபெரா, சபாரி என மேலும் பல பிரவுசர்கள் இருந்தாலும், இன்டனெட் எக்ஸ்ப்லோரர் அளவுக்கு அவற்றால் வரவேற்பைப் பெற முடியவில்லை.

இந்த இன்டனெட் எக்ஸ்ப்லோரர் கணினிப் பாவ¨னையாளளிடயே வரவேற்பைப் பெற்றாலும், பாதுகாப்பில் பல குறைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனை உபயோகிப்பதால் நம்மை அறியாமலேயே நமது கணினிக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. இண்டனெட் எக்ஸ்ப்லோ ரரிலுள்ள ஏராளமான ஓட்டை களால் நமது கணினில் ஸ்பைவெயர் (spyware) போன்ற வேவு பார்க்கும் மென்பொருள்கள் தானாகவே நிறுவப் பட்டு கணினியில் நமது செயற் பாட்டைக் கன்காணிப்பதோடு அது பற்றிய தகவல்களையும் அதனை உருவாக்கியவருக்கு அனுப்பி வைக் கிறது.

இந்த ஓட்டைகளை அடைக்கவென மைக்ரோஸொப்ட் நிறுவனம் Patches எனப்படும் ஒட்டுக்களையும் அவ்வப்போது வெளியிடுகிறது. எனினும் எத்தனை ஒட்டுக்களிட்டாலும் புதிது புதிதாக ஓட்டைகள் உருவாகி விடிவதால் இன்டனெட் எக்ஸ்ப்லோரரின் நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இன்டனெட் எக்ஸ்ப்லோரரில் இருக்கும் இந்த பாதுகாப்புக் குறைகளை உணர்ந்து எந்த ஸ்பைவெயர்களும் ஊடுறுவா வண்ணம் போதிய பாது காப்புக் கவசத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது Mozilla Firefox எனும் இணைய உலாவி.
.
மொஸில்லா நிறுவனத்தின் open source செயற் திட்டத்தில் உருவானதே இந்த பயபொக்ஸ் எனும் பிரவுசராகும். ஓபன் சோர்ஸ் செயற்திட்டம் எனப்படுவது ஒரு ப்ரோக்ரமுக்குரிய source code ஐ இலவசமாகப் பெற்று அதனை எவரும் தமது தேவைக் கேற்ப மாற்றியமைத்து அல்லது மேம்படுத்தி பின்னர் அதனைத் தமது தேவைக்கு மட்டும் உபயோகித் தல் அல்லது அனைவரும் பயன்படும் வண்ணம் செய்தலைக் குறித்து ந்ற்கும். எனவே பயபொக்ஸ் இணைய உலாவியின் வெற்றியில் மொஸில்லா நிறுவனத்தின் பங்களிப்பு மட்டுமன்றி நூற்றுக் கணக்கான தன்னார்வலர்களின் உழைப்பும் அடங்குகிறது.

மொஸில்லா பயபொக்ஸ் ஆரம்பத்தில் பீனிக்ஸ் எனும் பெயரிலேயே 2003 ஆம் ஆண்டில் அறிமுகமானது. பின்னர் பயபொக்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. தற்போது பயபொக்ஸின் அண்மைய பதிப்பான பய பொக்ஸ் 3 எனும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயபொக்ஸ் வெப் பிரவுசரை www.mozilla.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

பயபொக்ஸ் இணைய உலாவியில் எழுத்துப் பிழை திருத்தி (spell checkers), விளம்பரத் தடுப்பு (advertisement blockers) போன்ற பிற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற முடியும். இவை Add-on என அழைக்கப்படுகின்றன. இது போன்ற எராளமான எட்- ஒன்கள் மொஸில்லா வலைத் தளத்தில் கிடைக்கின்றன. வேறு வலைத்தளங்களிலும் இது போன்ற எட்-ஒன்கள் காணப்படாலும் அவற்றை உபயோகவிப்பதை விட மொஸில்லா தளத்திலிருந்து பெறும் எட்-ஓன்கள் மிகவும் பாதுகாப்பானவை.

பயபொக்ஸ் பதுகாப்பில் மேம்பட்டதாயிருந்தாலும் டவுன்லோட் செய்யப்படும் பைலானது பிரவுசரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதால், அவ்வாறு டவுன் லோட் செய்யப்படும் பைலை வைரஸ் நீக்கி மென்பொருள் கொண்டு ஸ்கேன் செய்தே பயன்படுத்த வேண்டும்.

பயபொக்ஸின் விசேட அம்சங்களாக பொப்-அப் ப்லொக்கர் (pop-up blocker) மற்றும் tabbed browsing. எனப்படும் வெப் பிரவுஸரின் ஒரு விண்டோவுக்குள்ளேயே பல விண்டோக்களை தோன்றச் செய்யக்கூடிய வசதி என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த tabbed browsing. இணைய உலாவலில் புதிய அனுபவத்தைத் தருகிறது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களை ஒரே விண்டோவுக்குலள் கொண்டு வர முடிவதுடன் டேப் மூலம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு இலகுவாகத் தாவலாம்.

கூகில், யாஹூ, அமேசோன் போன்ற தேடு பொறிகளுக்கான (search engine) இணைப்பும் பிரவுஸரின் டூல் பாரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணைய தேடலில் பயன்படுத்தப்படும் Keyword எனப்படும் தேடற் சொற்கனள் நாம் பாதி டைப் செய்ய மீதியை தானாகவே பூரணப்படுத்தி விடும். அத்தோடு உங்களுக்குத் தேவையான தகவலைத் தேடும் போது அனாவசியமாக வேறு தளங்களுக்குச் செல்லாமல், நேரடியாக உரிய தளத்ரதிற்கு மட்டுமே அழைத்துச் செல்லும்.

பயபொக்ஸ் எவரும் தமது இஸ்டம் போல் மாற்றியமைக்கக் கூடிய ஒரு இணைய உலாவி. கணினி ப்ரோக்ரமர் ஒருவர் சோர்ஸ் கோடை டவுன் லோட் செய்து மாற்ற்யமைக்கக் கூடியது போலவே சாதாரண பயனர் களும் பிரவுசரின் தோற்றத்தை மாற்றியமைக்கக் கூடியவாறு themes போன்றவையும் உள்ளன.

அத்துடன் பைல்களை பதிவிறக்கம் செய்யக் கூடிய டவுன் லோட் மேனேஜர் மூலம் பைல் ஒன்றை பவிறக்கிக் கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு துண்டிக்கப்படுமானால் விடுபட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடரவும் முடியும்.

இன்டனெட் எக்ஸ்ப்லோரர் போன்ற வேறு பிரவுஸர்களிலிருந்து பயபொக்ஸ¤க்கு மாறும் போது அந்த பிரவுசரில் பயன்படுத்Aய புக்மார்க், மற்றும் பாஸ்வர்ட் போன்றவற்றை பயபொக்ஸிற்கு import செய்து கொள்ளவும் முடியும். அத்தோடு ஒரு இணைய தளத்தைப் பார்வைIட்டுக் கொண்டிருக்கும்போது பிரவுசர் சடுதியாக மூடிக் கொண்டால் அதனை மீள ஆரம்பிக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த அதே தளத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.

இவ்வாறு பயபொக்ஸில் ஏராளமான வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன. இன்டனெட் எக்ஸ்ப்லோரருக்கு சவாலாக வெளிவந்துள்ள ஒரே இணைய உலாவி இந்த மொஸில்லா பயபொக்ஸ்தான்.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

WhatsApp now allows you to preview voice messages

குரல் செய்திகளைப் அனுப்புவதற்கு முன் அவற்றைச் சரி பார்க்கும் வசதியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப். வழமையாகக் குரல் செய்தியைத் தயார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *