Home / GIT Online Exam / DBMS-GIT Pastpaper Questions 2010-2017

DBMS-GIT Pastpaper Questions 2010-2017

GIT-2010

(i) உமது வகுப்பில் உள்ள மாணவர்களின் தகவல்களை வைத்திருப்பதற்கான ஒரு தரவுத்தள (database) அட்டவணையை நீர் படைப்பதாகக் கொள்க. பின்வரும் தகவல்களை வைத்திருப்பதற்கு உகந்த தரவு வகையை எழுதுக.

1. அனுமதி எண்

2. பெயர்

3. பிறந்த திகதி

4. வசதிக் கட்டணங்களாகக் கொடுக்கப்படும் பணம்

5. விடுதியில் தங்கி இருப்பவரா இல்லையா?

6. நடுத்தவணைச் சோதனைக்கான சராசரிப் புள்ளிகள்

(ii) மேற்குறித்த அட்டவணையில் முதல்நிலைச் சாவியாக (primary key) ஒரு தகுந்த புலத்தைப் பெயரிட்டு, முதல்நிலைச் சாவிக்காக நீர் ஏன் இப்புலத்தைத் தெரிவு செய்தீர் என்பதை விளக்குக.

GIT-2011

(i) உறுப்பினர்களின் தகவல்களை வைத்திருக்க நீங்கள் ஒரு தரவுத்தள அட்டவணையை உருவாக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம்

உங்கள் பள்ளியில் உள்ள நாடக சங்கத்தின். பின்வரும் ஒவ்வொரு புலத்திற்கும் மிகவும் பொருத்தமான தரவு வகையை எழுதவும்:

(1) உறுப்பினர் எண் (எ.கா. N001)

(2) பெயர்

(3) இணைந்த தேதி

(4) உறுப்பினர் கட்டணம் செலுத்தப்பட்டது (ரூபாயில்)

(5) உறுப்பினர் முன்பு நாடகத்தில் நடித்தாரா இல்லையா என்பது

(ii) முதன்மை விசையின் நோக்கத்தை சுருக்கமாக விளக்கி, மேலே உள்ள தரவுத்தள அட்டவணைக்கு மிகவும் பொருத்தமான முதன்மை விசையைத் தேர்ந்தெடுக்கவும்.

GIT-2012

(b) உமது பாடசாலையின் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் விளையாட்டு வீரர்கள் பற்றிய தரவுகளை வைத்திருப்பதற்குப் பின்வரும் புலங்களுடன் (fields) ஒரு தரவுத்தள அட்டவணையை (database table) உருவாக்குமாறு உமது பாடசாலையில் விளையாட்டுகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் உம்மிடம் கேட்டுள்ளாரெனக் கொள்க.

புலம்விவரணம்உதாரணம்
எண்போட்டியாளரின் எண் (1 இற்கும் 1000 இற்குமிடைப்பட்ட எண்)19
பெயர்போட்டியாளரின் பெயர்நிமல் பெரேரா
நிகழ்ச்சிதட/கள நிகழ்ச்சி4 × 100 அஞ்சல்
DOBபிறந்த தேதி03.05.1998
கட்டணம்பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா இல்லையாஆம்
  • மேற்குறித்த புலங்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொருத்தமான தரவு வகையை (data type) இனங்காண்க.

  • விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் அனைவரினதும் பெயர்களின் பட்டியலை உருவாக்குவதற்குத் தரவுத்தள முகாமை மென்பொருளினால் (DBMS) வழங்கப்படும் கூறைப் (object) பெயரிடுக.

GIT-2013

ஆரம்ப பாடசாலை மாணவர்களின் உடல்நலம் பற்றிய தகுநிலையைத் துணிவதற்கு ஒரு கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான தகவல்களைத் தேக்கி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் தரவுத்தள அட்டவணையின் ஒரு பகுதி கீழே காட்டப்பட்டுள்ளது.

அட்டவணையில் ஒவ்வொரு பதிவுகளிலும் Child_ID ஆனது தனித்துவமானது (unique) எனக் கொள்க.

Child IDNameDoBHeight  WeightPolio_vaccinationMeasles vaccination
1Pium Wijesiri25/02/200410235YESYES
2Meera Jayaratnam15/04/200411034YESNO

 (i) Child ID, Name, DoB, Weight, Measles_vaccination ஆகிய புலங்களிற்குரிய தரவு வகைகளை எழுதுக.
 (ii) மேலுள்ள அட்டவணைக்கு முதன்மைச் சாவியாகப் (primary key) பயன்படுத்தக்கூடிய மிகப் பொருத்தமான புலத்தினை (field) கண்டறிக.

GIT-2014

(ஆ) குறித்த ஒரு பாடசாலையிலுள்ள நூலகத்தில் உள்ள சில புத்தகங்கள் பல பிரதிகளைக் கொண்டுள்ளன. மாணவனொருவனுக்கு ஒரு தடவையில் இரண்டு புத்தகங்களை இரவலாகப் பெற முடிவதோடு அதனை இரு வாரங்களுக்கு வைத்திருக்கவும் முடியும்.

(i) புத்தகம் தொடர்பாக நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய தரவு வகைகள் (data items) இரண்டை எழுதுக.

(ii) மாணவனொருவன் புத்தகமொன்றை இரவலாகப் பெறும்போது நூலக உத்தியோகத்தர் குழுவினால் பதிவுசெய்து வைத்திருக்க வேண்டிய முக்கிய தரவு வகைகள் மூன்றை எழுதுக.

(iii) கடந்த மாதத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் இரவலாகப் பெற்ற புத்தகங்களின் பட்டியலை நூலகர் கைமுறையாக (manually) தயாரிக்கிறார். இந்நிகழ்வில் ‘தரவு’, ‘தகவல்’களை கண்டறிந்து எழுதுக.

(iv) தற்போது புத்தகங்களை இரவலாகப் பெறுதலும் திருப்பிக் கொடுத்தலும் பற்றிய தரவுகள் கைமுறையாக நடைபெறுவதாகக் கொள்க:

தற்போதுள்ள கைமுறைமையை (manual system) கணினி மயப்படுத்துவதிலுள்ள நன்மைகள் மூன்றைப் பட்டியலிடுக.

GIT-2015

(b) XYZ Sports என்பது விளையாட்டுப் பொருள்களை விற்கும் ஒரு கடையாகும். அது விளையாட்டுப் பொருள்கள், வழங்குநர்கள், வாடிக்கையாளர்கள், வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் என்பன பற்றிய தரவுகளை ஒரு தரவுத்தள முகாமை முறைமையில் பேணுகின்றது.

(i) ஒரு வழங்குநரிடமிருந்து ஒரு விளையாட்டுப் பொருளின் இருப்பு கிடைக்கும்போது பதிவு செய்யப்பட வேண்டிய தரவின் இரண்டு அத்தியாவசிய உருப்படிகளைப் பட்டியற்படுத்துக.

(ii) வாடிக்கையாளர் ஒருவர் ஒரு கொள்வனவைச் செய்யும்போது பதிவு செய்யப்பட வேண்டிய தரவின் மிகவும் அத்தியாவசியமான உருப்படிகள் இரண்டினைப் பட்டியற்படுத்துக.

(iii) உரிமையாளர் விற்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கையை அடிப்படையாய்க் கொண்டு கடந்த மூன்று மாதங்களுக்கான மிகவும் பிரபலமான மூன்று விளையாட்டு பொருட்களை அறிய விரும்புகின்றார். இக் காட்சியில் ‘தரவு’,’தகவல்’ ஆகியவற்றை இனங்கண்டு எழுதுக.

GIT-2016

(b) ஒரு குறித்த புத்தகக் கடை புத்தகங்களையும் புத்தகங்களை வழங்குபவர்களையும் பற்றிய பதிவேடுகளைப் பேண விரும்புகின்றது. அதன் முகாமையாளர் இந்நோக்கத்திற்காக ஒரு தரவுத்தள முறைமையை உருவாக்குவதற்கு உமது உதவியை நாடியுள்ளார்.

நீர் உருவாக்கியுள்ள புத்தக அட்டவணையின் பகுதி கீழே காணப்படுகின்றது.

(i) ISBN, புத்தகத்தின் பெயர் (Title), பதிப்பு (Edition), விலை(Price) ஆகியவற்றுக்குப் பொருத்தமான தரவு வகைகளை எழுதுக.

(ii) முதற் சாவிக்குப் பொருத்தமான ஒரு புலத்தை எழுதுக.

(iii) பின்வரும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய தரவுத்தளக் கூறை (object) எழுதுக.

{iii} ஃபோல்ட்விர்க் பணிகளுக்கு அவர் எந்த தரவுத்தள கூறுகளைப் பயன்படுத்தினார் என்பதை எழுதுங்கள்:
{t) புத்தக அட்டவணையின் தரவை உள்ளிடவும் அல்லது தரவைத் திருத்தவும்
{2} வெளியீட்டாளர்களின் புத்தகங்களின் மொத்த விற்பனையைப் பற்றிய ஃபார்மேட் செய்யப்பட்ட வெளியீட்டைக் காட்டு
{3) புத்தக ஆசிரியராக ‘Laudon’ என்பவரை மட்டும் காண்பி

GIT-2017

(b) ஒரு பாடசாலை நூலகம் மாணவர்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக Book_Details, Student_Details, Borrowing_Details என்னும் மூன்று அட்டவணைகளைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தைப் பேணுகின்றது. மூன்று அட்டவணைகளிலும் உள்ள தரவு மாதிரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

(i) நூலகம் ஜனகதா 1 (Jana Katha 1) நாலின் வேறொரு பிரதியைப் பெற்றுள்ளது.

இப்புதிய பிரதி Book_Details அட்டவணையிற் சேர்க்கப்படும்போது Book_Code ஆக T0013 ஐ ஏன் பயன்படுத்தமுடியாதென விளக்குக.

(ii) முதற் சாவியாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய Book_Details அட்டவணையில் உள்ள ஓர் உகந்த புலத்தைத் தருக. ஜனகதா 1 (Jana Katha 1) இன் புதிய பிரதி Book_Details அட்டவணையிற் சேர்க்கப்பட்டுள்ளதெனக் கொள்க.

(iii) முதற் சாவியாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய Student_Details அட்டவணையில் உள்ள ஓர் உகந்த புலத்தைத் தருக.

(iv) ஸ்ரீஸ்கந்த 22/07/2017 இல் குமாரோதய 1 (Kumarodaya 1) நூலை இரவலாகப் பெறுகின்றார். அதற்காக Borrowing_Details அட்டவணையில் சேர்க்கப்பட்ட பதிவைக் காட்டுக.

(v) 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளியிடப்பட்ட எல்லா நூல்களையும் பட்டியற்படுத்துவதற்குப் பின்வரும் வினவல் (query) நிறைவேற்றப்படுகின்றது (execute).

List Book_Code of Book_Details table having Published_Year less than 2000.

இவ்வினவலின் வெளியீடு (output) யாது?

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply