Home / Tips / Google Chrome Browser tips

Google Chrome Browser tips

Google Chrome Browser tips கூகுல் க்ரோம் ப்ரவுஸர்அறிந்ததும் அறியாததும்
 

கூகுல் க்ரோம் இணைய உலாவி குறுகிய காலத்தில் இணைய பயனர் மத்தியில் பிரபல்யம் பெற்று முன்னிலை வகிக்கிறது. இவ்விணைய உலாவி பல்வேறு வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். இவ்வசதிகள் மூலம் நேரம் விரயமாக்கப் படுவது தவிர்க்கப் படுவது டன் எமது வேலைகளும் இலகுவாகிவிடுகின்றன. கூகில் க்ரோம் ப்ரவுஸர் தரும் சில வசதிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  

1. நீங்கள் திற்ந்திருக்கும் ஒரு டேபை மூடிவிட க்லோஸ் பட்டனில் க்ளிக் செய்துதான் மூட வேண்டும் என்பதிலை. மூட வேண்டிய டேபின் மேல் மவுஸை மிட்ல் க்ளிக் செய்வதன் மூலமும் மூடிவிடலாம். அதாவது ஸ்க்ரோல் பட்டனை க்ளிக் செய்தும் மூடலாம்.  

2. திறந்திருக்கும் ஒரு டேபை ட்ரேக் எண்ட் ட்ரொப் முறையில் இழுத்து ஒரு புதிய விண்டோவைத் திறந்து கொள்ளவும் மறுபடி அந்த விண்டோவை முன்னர் இருந்த விண்டோவினுல் டேபாகவும் இழுத்துப் போடலாம்.  

Google Chrome Browser tips

3. பிரவுஸர் விண்டோவிலுள்ள் ஒரு ஹைபலிங்கில் மிட்ல் க்ளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய டேபில் அந்தப் பக்கம் திறந்து கொள்ளும்.  

4. எட்ரஸ் பாரில் ஒரு இணைய தள முகவரியையோ அல்லது தேடற் சொல்லையோ டைப் செய்து விசைப்பலகையில் Alt + Enter  விசைகளைத் தட்டும்போது ஒரு புதிய விண்டோவில் அந்தப் பக்கம்  தோன்றும்.  

5. திறந்திருந்த ஏதேனும் ஒரு டேபை அவசரத்தில் அறியாமல் க்லோஸ் செய்து விட்டீர்களா? கவலை வேண்டாம்.  Ctrl+Shift+T  விசைகளைஒரே தடவையில் அழுத்த மறுபடியும் அந்த டேப் திறந்து கொள்ளும். இதே விசைகளை மேலும் மேலும் அழுத்த முன்னர் மூடிய ஒவ்வொரு டேபும் அவை மூடிய ஒழுங்கில் திறந்து கொள்ளும். 

  6. Ctrl+H  விசைகளை ஒன்றாக அழுத்த நீங்கள் இதுவரை காலமும் பார்வையிட்ட தளங்களின் (history) பட்டியலைக்காண்பிக்கும்.   7. பார்வையிடும் ஒரு இணைய பக்கத்திலுள்ள ஓர் சொல்லை தெரிவு செய்து ரைட் க்ளிக் செய்யும் போது கிடைக்கும் மெனுவில் அந்த சொல் சார்ந்த தேடலை கூகில் தளத்தில் ஆரம்பிக்கலாம்.  நீங்கள் தெரிவு செய்தது ஒரு இணைய தள முகவரியாயின் அத்தளத்தினுள் பிரவேசிக்கலாம்.

  8. Ctrl + P விசைகளை அழுத்தி ஒரு பக்கத்தை அச்சிட்டுக் கொள்ளவோ அல்லது ஒரு pdf பைலாக சேமிக்கவோ முடியும்.  

9. திறந்திருக்கும் பல டேப்களை ஒவ்வொன்றாகப் பார்வையிட விசைப் பலகையில் Ctrl விசையை அழுத்தியவாறு 1, 2, 3, 4 என இலக்கங்களை டைப் செய்தும் பக்கங்களைப் பார்வையிடலாம்.  

10. Save to Google Drive எனும் க்ரோம் நீட்சியை extension பிரவுஸரில்பொருத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் பார்வையிடும் பக்கங்களையும் பைல்களையும் கூகில் ட்ரைல் இலகுவாக சேமித்துக் கொள்ளலாம்.  

11. எட்ரஸ் பாரில் C: >  D:>   E:  என டைப் செய்வதன் மூலம் கணினியில் ஓவ்வொரு ட்ரைவிலுமுள்ள பைல்களையும் போல்டர்களையும் பார்வையிட முடியும்.  

12. .com என முடிவடையும் இனைய தளப் பெயர்களை முழுவதும் டைப் செய்யாமல் நடுவிலுள்ள பகுதிய மட்டும் டைப் செய்து Ctrl மற்றும் Enter  விசைகளைஒரே நேரத்தில் அழுத்தி www, .com பகுதிகளைசேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக www.google.com  எனும் இணைய தளத்தின் பெயரில் google மாத்திரம் டைப் செய்து Ctrl மற்றும் Enter விசைகளைத் தட்டுங்கள்.

  13. எட்ரஸ் பாரில் டைப் செய்துள்ள ஒரு இணைய தள முகவரியை தெரிவு செய்து ட்ரேக் அண்ட் ட்ரொப் முறையில் டெஸ்க் டொப்பில் ஒரு சோர்ட்கட்டாக  இழுத்துப்போடலாம்.  

14. கண்ட்ரோல் விசையுடம்  ‘+’ குறியீட்டையும் ‘-‘ குறியீட்டையும்  முறையே அழுத்துவதன் மூலம் ஒரு பக்கத்தின் காட்சித் தோற்றதைப் பெரிதாக்கவும் (Zoom In) சிறிதாக்கவும் (Zoom Out)  முடியும்.    

அனூப்

கோராவில்

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *