Home / General / Google Crowdsource மூலம் நீங்களும் கூகுலிற்கு உதவலாம்?
crowdsource 45

Google Crowdsource மூலம் நீங்களும் கூகுலிற்கு உதவலாம்?

Google Crowdsource : கூகுல் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்  அதன் இயந்திர கற்றல் வழிமுறைகளை (Machine Learning Algorithms) பயனர் பின்னூட்டங்கள் (feedback) மூலம் பயிற்சியளிப்பதற்காக ஆரம்பித்திருக்கும் ஒரு செயற் திட்டம்தான் கூகுல் க்ரவுட் சோர்ஸ் Google Crowdsource. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

Google Crowdsource

உதாராணமாக கூகுல் ட்ரான்ஸ்லேட்டர் (translator) பயன்படுத்தி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ மொழி மாற்றம் செய்யும் போதும் மிகச் சரியான துல்லியமான வெளியீடு கிடைப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது தமிழ் மொழியில் மட்டுமன்றி கூகுல் ஆதரவு வழங்கும் பல மொழிகளிலும் மொழி மாற்றும் செயற்பாடு இதே தரத்தில் தான் இருக்கிறது.

அதேபோல் படங்களை அடையாளமிடுதல் (image identification) போன்ற சில பணிகளில் கூகுல் பயன்படுத்தும் வழிமுறைகள் ”மனிதரைப்” போல் சிறந்த முடிவுளைத் தருவதில்லை.

google crowdsourcing

ஒரு படத்திலிருக்கும் ’உருவம்’ என்ன என்பது உங்களுக்குத் தெரியாது என வைத்துக் கொள்வோம்.நீங்கள்  அதைப் பற்றி அறிய கூகுல் போட்டோஸ் செயலியிலுள்ள ’லென்ஸ்’ பயன் படுத்தித்   தேடுகிறீர்கள்.  கூகுள் உங்கள் தேடலுக்குப்  பொருத்தமற்ற படங்களையும் சேர்த்து பல படங்களை தேடல் முடிவுகளாக்க காண்பிக்கிறது.  அப்போது நீங்கள் ஒரு தவறான தகவலைப் பெறுவீர்கள். இவ்வாறு நடப்பதை யாரும் விரும்புவதில்லை.

இது போன்ற  சிக்கலைத் தீர்ப்பதற்காகப் பயனர்களின் “கூட்டு பங்களிப்பைப் ” (collaborative contribution) பெற உருவாக்கப்பட்டிருப்பதே Google Crowdsource எனும் செயலி.

மேலும் AI (Artificial Intelligence -செயற்கை நுண்னறிவு) சார்ந்த மென்பொருட்கள் சிறப்பாக செயற்பட அதிகளவு தரவு தேவைப்படுகிறது. ஒரு AI நிரல் (programs) எவ்வளவு அதிகமான தரவைப் பெறுகிறதோ, அப்போது அந்நிரலின் வெளியீடு மிகவும் துல்லியமாக இருக்கும். எனினும் மென்பொருள் உருவாக்குநர்கள் (developers) அத் தரவை வழங்குவது கடினமான பணியாக இருப்பதால், அவர்கள் பயனர்களிடமிருந்து தரவை எதிர்பார்க்கிறார்கள்.

க்ரவுட் சோர்ஸ் பல்வேறு வகையான பணிகளை உள்ளடக்கியது, மேலும் அவை ஒவ்வொன்றும் கூகுலின் இயந்திர கற்றல் வழிமுறைகளுக்கு பயிற்சித் தரவாக வழங்கக்கூடிய வெவ்வேறு தகவல்களை வழங்குகின்றன.

க்ரவுட் சோர்ஸ் திட்டத்தில் நீங்கள்பங்களிப்பாளராகச் சேர, முதலில் Google Crowdsource செயலியை மொபைலில் நிறுவ வேண்டும். செயலியை நிறுவியவுடன், நீங்கள் சரளமாக இருக்கும் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் படி கேட்கிறது. பின்னர் நீங்கள் பங்களிக்கக்கூடிய கூகுல் கருவிகள் தொடர்பான ஆறு வெவ்வேறு பிரிவுகளைக் காட்டுகிறது.

நீங்கள் விரும்பும் பிரிவைத் தேர்ந்தெடுத்து அப்பிரிவு தொடர்பான பங்களிப்புகளைச் செய்ய முடியும்

  • Image Label Verification: படங்கள் சரியாக அடையாளமிடப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்
  • Image Capture: உங்கள் பிரதேச புகைப்படங்களை சேகரித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • Translation: சொற்களையும், சொற்றொடர்களையும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தல்
  • Translation Validation: சொற்கள், சொற்றொடர்கள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்
  • Handwriting Recognition கையெழுத்தைப் பார்த்து நீங்கள் பார்க்கும் உரையைத் தட்டச்சு செய்தல்.
  • Sentiment Evaluation: உங்கள் மொழியில் ஒரு வாக்கியம் நேர்மறையானதா, எதிர்மறையானதா அல்லது நடுநிலையானதா என்பதைத் தீர்மானித்தல்.
  • Landmarks : படங்களில் உள்ள முக்கிய இடங்களைக் கண்டறிதல்
  • Smart Camera : ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி, அது என்ன என்பதை கேமராவால் யூகிக்க முடிகிறதா எனப் பார்த்தல்
SEE MORE  பிரபலமாகும் Dark Mode
1292793533668786176

கூகுல் க்லவுட் சோர்ஸில் நீங்கள் வழங்கும் தகவல்களுக்குப் பிரதியுபகாரமாக கூகுல் உங்களுக்குப் “பணம்” தரும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இது முற்றிலும் தன்னார்வ சேவை. கூகுல் மொழிமாற்றி -translator, லென்ஸ் -lens, ஜிபோர்டு Gboard, தேடல் – search போன்ற பயன்பாடுகளை மேம்படுத்துவதில் உதவியதற்காக உங்களுக்கு ஒரு மனத் திருப்தி அளிக்கும்.

இருந்தாலும் நீங்கள் வழங்கும் பங்களிப்புகளின் எண்ணிக்கையை கணக்கில் வைத்து அவற்றிற்கு கூகுல் புள்ளிகள் வழங்கும். அதிகமான பங்களிப்பு வழங்குபவர்களுக்கு அவ்வப்போது வெகுமதிகளையும் அனுப்பி வைக்கும். சில வேளை அவர்களின் சமூக நிகழ்வுகளுக்கு உங்களை அழைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Google Crowdsource செயலியை நிறுவ

About admin

Check Also

dropshippi

What is Dropshipping?

What Is Dropshipping? டிராப்ஷிப்பிங் என்பது ஓர் இணையவழி வணிக மாதிரியாகும் (online business model). இங்கு நீங்கள் பொருட்களைக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!