Home / General / Google Drive

Google Drive

வந்தாச்சு Google Drive?

இணைய  உலகின் ஜாம்பாவானாகிய கூகில் நிறுவனம் தனது  கூகில் ட்ரைவ் சேவையைக்  கடந்த ஏப்ரல் மாத  இறுதியில் ஆரம்பித்தது

Driveகூகில் ட்ரைவ் என்பது இணய வெளியில் பைல்களை தேக்கி வைக்கக் கூடிய  ஒரு சேவை யாகும். இதனை ஆங்கிலத்தில்  cloud storage எனப்படுகிறது. எம்.எஸ்.வர்ட், எக்சல் போன்ற ஆவணங்கள், படங்கள் வீடியோ கிரபிக்ஸ் என எவ்வகையான பைல்களையும் இந்த கூகில் ட்ரைவில் பாதுகாப்பாகக் களஞ்சியப் படுத்தி வைக்க முடிவதோடு அவற்றை  எப்போதும்  எங்கிருந்தும் இணையம் வழியே அணுகக் கூடியதாகவும் இருக்;கும். மேலும் அந்த பைலை உரிய மென்பொருள்களைக் கணினியில் நிறுவாமலேயே திறந்து பார்க்கவும் மாற்றங்கள செய்யவும் முடிகிறது. இவ்வாறு  30 ற்கும் மேற்பட்ட பைல் வகைகளை கூகில் ட்ரைவ் ஆதரிக்கிறது

ஏற்கனவே கூகில் நிறுவனம் Google Docs எனும் பெயரில் இது போன்ற ஆவணங்களைத் தேக்கி வைப்பதற்கான சேவையை வழங்கி வருகிறது . அந்த கூகில் டொக்ஸின் புதிய வடிவமே இந்த கூகில் ட்ரைவ்.

இந்த கூகில் ட்ரைவை கணினி செல்லிட  தொலைபெசி மற்றும் கையடக்கக்  கருவிகளின் மூலமும் அணுக முடியும். அதே போன்று கூகில் ட்ரைவில் சேமிக்கப் பட்டுள்ள  ஆவணமொன்றில்  மாற்றம் செய்து சேமித்த பிறகு வேறு சாதனங்களினூடாக அதே பைலை அணுகும் போது பிற கருவிகளிலும் அதே மாற்றத்தோடு காண்பிக்கும் வகையில் அந்த பைல் (Synchronize)   சமப்படுத்தப்படும்..

மேலும் ஒரு பைலில் மாற்றம் செய்து சேமித்த பின்னரும் கூட கடந்த 30 நாட்களுக்குள் அந்த பைல் என்னென்ன மாற்றங்ங்களுக்குள்ளானது என்பதையும் கூட பார்க்கக் கூடிய வசதியை கூகில் டரைவ் தருகிறது.

இந்த க்லவுட் ஸ்டொரேஜ் சேவையில்  5புடீ அளவிலான இடத்தை  இலவசமாகவே வழங்குகிறது. கூகில்அதற்கு மேலும் உங்களுக்கு இடவசதி அவசியமெனின்  கட்டண்ம் செலுத்துவதன் மூலம் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த கலவுட் ஸ்டொரேஜ் சேவையை கூகில் தான் முதலில் ஆரம்பித்தது எனச் சொல்ல முடியாது. கூகில் இந்த சேவையில் மிகத் தாமதமாகவே பிரவேசித்துள்ளதுஇது போன்ற க்லவுட் ஸ்டொரேஜ் சேவையை ஏற்கனவே Dropbox, Microsoft  SkyDrive,  Apple iCloud Amazon Cloud Drive என்பன வழங்கி வருகின்றன. ஆனால் இவை சிறிய அளவிலான இடத்தையே வழங்கி வருகின்றன

தற்போது க்லவுட் ஸ்டொரேஜ் சேவையில் முன்னணியில் இருக்கும் ட்ரொப் பொக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு  2GB அளவிலான இடத்தையே வழங்கி வருகிறது. அதே போன்று ஆப்பில் க்லவுட் iOS இயங்கு தள பாவனையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்குகிறது.

Google%2BDriveகூகில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே பாய்ச்சலில் 5 கிகா பைட் அளவு இடத்தை ஒதுக்குகிறது. ஏற்கனவே தனது மின்னஞ்சல் (gmailவாடிக்கையாளர்களுக்கு 7 கிகா பைட் அளவிலான இடத்தை தருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். .

இந்த கூகில் டரைவ் விண்டோஸ் மேக் லினக்ஸ் என எந்தவொரு கணினி இயங்கு தளத்திலும் மேலும் அன்ட்ரொயிட் ஐஓஎஸ் என எந்த மொபைல் கருவிகளிலும் பயன் படுத்தக் கூடியவாறு உருவாக்கப் பட்டிருப்பது இதன்  சிறப்பம்சம்hகும்.

படங்கள் வீடியோ போன்ற அதிக பைல் அளவு கொண்ட பைல்களை மின்னஞ்சல் வழியே இனி இணைத்து அனுப்ப வேண்டியதில்லை. உங்கள் பைலை கூகில் ட்ரைவில் அப்லோட் செய்து விட்டு அதற்குரிய லிங்கை மாத்திரம் நண்பருக்கு அனுப்பி விடலாம். அவர் அதனை தனது கணினிக்கு டவுன் லோட் செய்யாமலேயே பார்க்கக் கூடிய வசதியையும் இந்த கூகில் ட்ரைவ் தருகிறது

மேலும் பென் ட்ரைவ்களையும் இனி கையிலெடுத்துச் செல்ல வேன்டிய அவசியமில்லை. நீங்கள் செல்லுமிடத்தில் இணைய வசதி இருக்குமானால் பென் ட்ரைவில் எடுத்துச் செல்ல வேண்டிய பைல்களை உங்கள் வீட்டுக் கணினியில் கூகில் டரைவில் அப்லோட் செய்து  விடுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும்  அந்த பைலைப் பார்க்க முடிகிறது

இந்த கூகில் ட்ரைவ் சேவையைப் பெற drive.google.com எனும் இணைய தளத்தின் மூலம் அணுகி அதற்குரிய எப்லிகேசனை நிறுவிக் கொள்ள வேண்டும்.. மேலும் உங்களிடம் ஒரு கூகில் கணக்கும் இருக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்

இணைய வெளியில் கூகில் மைக்ரோஸொப்ட், ஆப்பில் போன்ற இமாலய நிறுவனங்கள் நடாத்தும் வியாபாரப் போட்டியின் காரணமாக சாதாரண இணையப் பயனருக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான்.

-அனூப்-


About Imthiyas Anoof

Check Also

140015606 475183587208466 4218723517675140001 o

Freesat Satellite Television Service to be launched in Sri Lanka soon

Freesat Satellite Television Service Freesat எனும் பெயரில் இலவச செய்மதி தொலைக் காட்சி சேவையொன்று விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!