Home / Hardware / Google Glass

Google Glass

வருகிறது கூகில் கண்ணாடி

செல்லுமிடமெல்லாம் கணினிப் பயன்பாடு எனும்கனவை நணவாக்க விரைவில் வெளிவருகிறதுகூகில் நிறுவனம் அறிமுகப் படுத்தவுள்ள (Google Glass) கூகில் கண்ணாடி. இது டெஸ்க்டொப் கணினிகளிலிருந்தும் கையடக்கக் கணினிகளிலிருந்தும் உங்கள் முக்கிய தகவல்களை  விடுவித்து உங்கள் கன்ணேதிரெ நீங்கள் செல்லுமிட மெங்கும் உங்களோடு வர வைக்கிறது.

முகத்தில்அணியும் வழமையான மூக்குக் கண்ணாடிஅமைப்பிலான இந்த விசேட கூகில்கண்ணாடி குரல் வழி கட்டளைகள்(voice commands) மூலம் இயக்கப் படுகிறது உங்கள்குரல் வழி கட்டளைகளுக்கேற்றவாறு பல் வேறுபணிகளைச் செய்து முடிப்பதோடு இணைய வசதியையும் கொண்டிருக்கிறது.

குரல் வழி கட்டளை மூலம்ஏராளமான் பணிகளை கூகில் கண்னாடி நிறை வேற்றுகிறது. உதாரணமாக

  • OK glass எனும்போது தற்போதைய நேரத்தைக் காண்பிக்கிறது
  • OK glass take a pictureஎனும் கட்டளைக்கு முன்னால் தெரியும் காட்சியைப் புகைப்படம் எடுக்கிறது
  • OK, glass, record a video   எனும்போது கேமராவைக்  கைகளால் தொடாமலேயே முன்னால் தெரியும் காட்சியை வீடியோபடம் எடுக்கிறது.

மேலும் வலது கண்னின் மேல்பகுதி ஓரத்தில் மிகச் சிறிய திரையொன்றுபொருத்தப் பட்டுள்ளது. உங்கள் காண் பார்வைக்குத் தடஙள் இல்லா வண்ணம், எட்டு அடி தூரத்திலிருந்து 25 அங்குள அளவிளான திரையில் பார்ப்ப்து போன்று அத்திரையில்காட்சிகள் உருப் பெருக்கிக் காண்பிக்கப்படுகிறது.  இத்திரையில் தொடர்ச்சியாக தகவல்கள் காண்பிக்கப் படுவதோடுதிரையில் தோன்றுவதைக் காண்பதற்குப்  பார்வையை சற்று மேல் நோக்கி யர்த்திப்  பார்க்க வேண்டும்


கூகில் கண்ணாடியில் கிடைக்கும் மேலும் சில வசதிகளாவன:
  • கேமராவில் எடுத்த வீடியோவை  நேரடியாக இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்ள் முடிகிறது.
  • வாகனமொன்றைச் செலுத்தும் போது உங்களுக்கு வழிகாட்டியாகவும் கூட அது செயற்படுகிறது. .
  • செய்திகளை அனுப்பவும் பெறவும் முடிகிறது
  • உங்கள குரலைபல்வேறு மொழிகளுக்கு மாற்றிப் பெறவும் முடியும்.
  • நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறது.  உதாரணமாக நீங்கள் ஒரு விமான நிலையத்தில் இருக்கும் போது அந்த விமான நிலையதின் நேர அட்டவணையைக் உங்களுக்குக் காண்பிக்கிறது.
இவ்வாறு  ஏராளமான வசதிளைக் கொண்டுள்ள கூகில் கண்ணாடிக்கு  $1500 டாலர் என விலை நிர்ணயித்துள்ளதுடன் இன்னும் பரீட்சார்த்த நிலயிலுள்ள கூகில் கண்ணாடி அடுத்த வருட நடுப்பகுதியளவில் பொது மக்கள பாவனைக்காக வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply