Home / Android / Google Phone app can now announce the caller ID for incoming calls

Google Phone app can now announce the caller ID for incoming calls

Google Phone app can now announce the caller ID உள்வரும் தொலைபேசி அழைப்புகளுக்கான அழைப்பாளர் ஐடியை கூகுல் ஃபோன் செயலி  இனி  சப்தமிட்டு  அறிவிக்கும்.  இந்த வசதி மூலம் தொலைபேசி அழைப்பு வரும்போது  உங்கள் தொலைபேசியைக் பார்க்காமலேயே யார் அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.  இந்தப் புதிய வசதி  கூகுல் ஃபோன்  செயலியைப்  பயன்படுத்தும் அனைத்து அண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கும் உலகளவில் கிடைக்கிறது.

அழைப்பாளர் ஐடி அறிவிப்பு என்பது  மிகப்பெரிய விடயமாக இல்லாவிட்டாலும்  இது பல சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும். குரல் கட்டளைகளை நம்பியிருக்கும் பார்வையற்றோருக்கு இது  மிகவும் பயனுள்ள அம்சம்.

Google Phone app can now announce the caller ID for incoming phone calls
Google Phone app can now announce the caller ID for incoming phone calls

பெரும்பாலானவர்கள் தங்கள் தொலைபேசி கையில்  இருந்தால் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பதற்கு முன்பு அழைப்பாளர் யார் என்பதைப் பார்ப்பது வழக்கம்.

சில சமயங்களில் உங்கள் தொலைபேசி அறையின் மறுமுனையில் இருக்கும்போது அல்லது நீங்கள் வேறு ஏதாவது வேலையிலீடுபட்டிருக்கும்போது தொலைபேசி அழைப்பொலி கேட்கும்போது   நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை  நிறுத்திவிட்டு அழைப்பது யாரென்பதைப் பார்க்க ஓட வேண்டியிருக்கும்.  அல்லது ஐடியைப் பார்ப்பதைப் புறக்கணிப்பதன் மூலம் முக்கியமான அழைப்பைத் தவறவிடவும் கூடும்.

மூன்றாம் தரப்பு செயலிகள் பயன்படுத்தாமல்  அண்ட்ராய்டு தொலைபேசி அழைப்பு செயலியிலெயே இதை உள்ளடக்கியிருப்பது இன்னும் வசதியாக இருக்கிறது.

Android இல் அழைப்பாளர் ஐடி அறிவிப்புகளை எவ்வாறு இயக்குவது

முதலில், கூகுல் ஃபோன்  Google Phone செயலியின் சமீபத்திய பதிப்பை ப்லே ஸ்டோரிலிருந்து நிறுவிக் கொள்ளுங்கள்.  ஏற்கனவே நிறுவியிருந்தால் அதனை அப்டேட்  செய்துகொள்ளுங்கள்.   

அடுத்து நிறுவிய கூகுல் ஃபோன் செயலியைத் திறந்து கொள்ளுங்கள்.

அங்கு மூன்று-புள்ளி ஐகானில் தட்டி  Settings > Caller ID announcement என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

பின்னர் கீழுள்ள விருப்பங்களில் ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். Always = எப்போதும், Only when using a headset – ஹெட்செட்டைப் பயன்படுத்தும்போது மட்டும், Never – தெரிவு செய்தால் ஒருபோதும் அறிவிக்காது.

அடுத்த முறை உங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வரும்போது, ​​அழைப்பாளர் பெயரை  உரக்கச் சொல்லக் கேட்கலாம்.  

Google phone App

About admin

Check Also

Hoote-Voice Based Social Media App

Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *