Google Handwriting Input
கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லட் கணினிகளில் கருவிகளில் வழமையான தொடுகை கீபோர்டுக்குப் பதிலாக நாம் உள்ளீடு செய்யம் விரும்பும் டெக்ஸ்டை டச் பேடில் (touch-pad) கை விரலால் எழுதுவதன் (வரைவதன்) மூலம் இலகுவாக உள்ளீடு செய்யும் வசதியைத் தருகிறது மிக அண்மை யில் கூகில் அறிமுகப் படுத்தியுள்ள Handwriting Input எனும் அண்ட்ரொயிட் எப்லிகேசன். அதாவது உங்கள் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது இந்த எப்லிகேசன். இந்த வசதி ஆங்கிலத்தில் மாத்திரமன்றி மொத்தம் 82 மொழிகளில் கிடைக்கிறது. தமிழிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத் தக்கது.
அனூப்