![]() |
App Store |
சில வேளைகளில் உங்கள் எண்ட்ரொயிட் கையடக்கத் தொலைபேசி மந்த கதியில் இயங்கும் போது அதனை Factory Reset செய்து மறுபடி முன்னர் போன்று வேகமாக இயங்க வைக்கலாம். அவ்வாறு Reset செய்யும் போது நீங்கள் அழைத்த இலக்கங்கள், உங்களுக்கு வந்த அழைப்புக்கள், குறுஞ் செய்திகள், நண்பர்களின் தொலைபேசி இலக்கப் பட்டியல், அப்லிகேசன்கள் என ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். பல முக்கியமான பைல்களை நீங்கள் இழக்க வேண்டி வரலாம்.
![]() |
Super Backup |
எனவே அவ்வாறு Reset செய்வதற்கு முன்னர் அந்த ஃபைல்களை Backupசெய்து விட்டால் ஃபைல் இழப்புக்கள் ஏதும் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம். இவ்வாறு பைல்களை Backup செய்வதற்கென எண்ட்ரொயிட் கருவிகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு எப்லிகேசனே Super Backup. இதன் மூலம் அப்லிகேசன்கள், குறுஞ் செய்திகள், அழைப்புக்களின் பதிவுகள் (call logs) என பல விடயங்களை இலகுவாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் SD card இல் சேமித்து விடவோ அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடவோ முடியும்.