Home / General / Green Computing பசுமைக் கணிமை

Green Computing பசுமைக் கணிமை

கணினி மற்றும் கணினி தொடர்பான சாதனங்களை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல்.  உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்படுதலை பசுமைக் கணினி (Green Computing)  எனப்படுகிறது.  பசுமைக் கணினி திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்?

  • கணினி மற்றும் துணைக்கருவிகளை பயன் படுத்தாத நேரங்களில் மின் இணைப்பைத் துண்டியுங்கள்
  • கணினித் திரையைப் பயன் படுத்தாத நிலையிலும் ; ஸ்க்ரீன் சேவரை இயக்காமல் மின் இணைப்பைத் துண்டியுங்கள்.
  • CRT வகை கணினித் திரைப் பாவனையின் போது இருள் வண்ணப் பின்னணி கொண்ட படங்களைப் பயன் படுத்துங்கள் ஏனெனில் பிரகாசமான நிறங்களைக் கொண்ட பின்னணி படங்கள் அதிக மின் சக்தியை நுகரும். எனினும் டுஊனு திரை இதற்கு நேர் மாறானது.
  • கணினியிலுள்ள வலு முகாமை (power management) வசதியைப் பயன் படுத்துங்கள்.
  • அச்சுப் பொறிகளை வலையமைப்பினூடாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • மிக அவசியமான ஆவணங்களை மட்டும் அச்சிடுங்கள்.
  • கடிதம், தொலை நகலுக்குப் பதிலாக மின்னஞ்சலைப் பயன் படுத்துங்கள்
  • அச்சிடும் போது முடிந்தளவு காகிதத்தின் இரண்டு பக்கங்களையும் பயன் படுத்துங்கள்.
  • பழைய கணினி மற்றும் துணைச் சாதனங்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துங்கள்.
  • டெஸ்க்டொப் கணினிகளுக்குப் பதிலாக மடிக் கணினிகளைப் பயன் படுத்துங்கள்.
  • கணினித் திரையின் பிரகாசத்தை முடிந்தளவு குறையுங்கள். அதிக பிரகாசம் = அதிக மின்நுகர்ச்சி

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply