பாஸ்வர்ட் மறந்து விட்டதா?
முதலில் விண்டோஸ் டிவிடியிலிருந்ய்து கணினியை (பூட்) செய்யுங்கள்.. அப்போது தோன்றும் மெனுவில் “Repair your computer”என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பின்னர் படத்தில் உள்ளது போன்ற திரை தோன்றும் வரை காத்திருங்கள். அத்திரையிலிருந்து Command Prompt என்பதைத் தெரிவு செய்யுங்கள். அந்த கமான்ட் ப்ரொம்ப்டில் கீழுள்ள வரியை டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள்.
copy c:windowssystem32sethc.exe c: அடுத்து
copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe
எனும் வரியையும் டைப் செய்து எனடர் விசையைத் தட்டுங்கள். பின்னர் கணினியின் இயக்கத்தை மறுபடி ஆரம்பியுங்கள். ஒரு லொகின் திரை தோன்றும். அங்கு Shift விசையை ஐந்து தடவை மேலும் மேலும் அழுத்துங்கள். அப்போது மறுபடியும் ஒரு கமாண்ட் ப்ரொம்ப்ட் திரை தோன்றும். அங்கு கீழே காட்டியுள்ள வடிவில் ஒரு பயனர் பெயரோடு கடவுச் சொல்லையும் வழங்குங்கள் net user newusername newPassword
இனி உங்கள் பயனர் கணக்குனுள் லொகின் செய்யலாம். எனினும் இன்னும் ஒரே ஒரு வேலை பாக்கி.இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் பிரதி செய்த sethc.exe பைலை மறுபடியும் விண்டோஸ் போல்டரினுள் இட வேண்டும். அதற்கு ஆரம்பத்தில் சொன்ன வழி முறையிலேயே விண்டோஸ் சிடியுடன் பூட் செய்து கமான்ட் ப்ரொம்டில் கீழுள்ள கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வழஙகி செயற்படுத்த வேண்டும். c:sethc.exe, c:windowssystem32sethc.exe. அவ்வளவுதான்.
-அனூப்-