Home / General / High-speed internet via airborne beams of light

High-speed internet via airborne beams of light

High-speed internet via airborne beams of light கூகுலின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட் லூன் (Project Loon) எனும் தனது பிரமாண்ட பலூன் மூலம் இண்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தைக் கைவிட்டது. கூகுல் லூன் திட்டம வெற்றிகரமாக நிறைவேறினாலும் அதிக பராமரிப்புச் செலவு காரணமாக அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது.

ஆனாலும் கூகுல் லூன் முயற்சியிலிருந்து கற்றுக்கொண்ட அறிவை வீணாக்க ஆல்ஃபாபெட் விரும்பவில்லை. லூனுக்காக முதலில் உருவாக்கப்பட்ட அதிவேக வயர்லெஸ் ஆப்டிகல் லிங்க் தொழில்நுட்பத்தைத் தற்போது ப்ராஜெக்ட் டாரா (Project Taara) எனும் மற்றுமொரு திட்டத்திற்குப் பயன் படுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்த முயற்சியில் வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (Wireless Optical Communications (WOC) இணைப்புகள்மூலம் இப்போது ஆபிரிக்க நாடான காங்கோ ஆற்றின் குறுக்கே அதிவேக இணைய இணைப்பை வழங்குகிறது.

லூன் திட்டத்தில் வெற்றிகரமாக 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரு பலூன்களுக்கு இடையில் இணைப்பை உருவாக்க WOC ஐப் பயன்படுத்தியபோதே டாரா திட்டத்திற்கான யோசனை அல்ஃபாபெட்டிற்குப் பிறந்தது.

உயரே பறக்கும் பலூன் திட்டத்தில் பயன் படுத்திய அதே தொழிநுட்பத்தை தரையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்ய விரும்பியது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, காங்கோ குடியரசில் பிரஸ்ஸாவில் (Brazzaville in the Republic of the Congo) மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் கின்ஷாசா (Kinshasa in the Democratic Republic of Congo) இடையே இணைய இணைப்பை வழங்கி டாரா திட்டக் குழுவினர் வெற்றி கண்டனர். (இந்தியா மற்றும் கென்யாவிலும் கூட இந்த ப்ராஜெக்ட் டாரா சோதனையை நடாத்தியுள்ளது. ஆனால் அவை பற்றிய விவரங்களை அறிய முடியவில்லை)

இந்த இரு நகரங்களும் காங்கோ நதியால் பிரிக்கப்பட்டு 4.8 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ளன. இருப்பினும், கின்ஷாசாவில் இணைய இணைப்பிற்கு அதிக செலவாகிறது. ஏனெனில் வழங்குநர்கள் காங்கோ நதியைச் சுற்றி 400 கிலோமீட்டர் தூரம் தரைவழியே ஃபைபர் கேபலை இட்டே அடுத்த கரையை அடைந்து இணைப்பை வழங்க வேண்டும். எனினும் டாரா திட்டத்தில் ப்ராஸாவில் முதல் கின்ஷாசா வரை ஆற்றின் குறுக்கே அதிவேக இணைய சேவை வழங்கக்கூடிய இணைப்புகளை வெற்றிகரமாக நிறுவியது டாரா குழு.

வளர்ந்த நாடுகளில், அதிவேக இணைய அணுகல் ஃபைபர்-ஆப்டிக் கேபள்களால் வழங்கப்படுகிறது. ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களில் ஒளி வடிவில் சமிக்ஞைகள் நீண்ட தூரம் செல்கின்றன. இந்த அமைப்புகள் மிகவும் பயனுள்ளவை, ஆனால் அவை மிகவும் செலவு மிக்கவை.

இதன் காரணமாக, உலகின் பல பகுதிகள்-குறிப்பாக கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகள்-ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க்குகளை அமைக்கவோ இயக்கவோ முடியவில்லை. சில நகரச் சூழல்களிலும் இந்தச் செயல்முறை அதிக செலவு மிக்கதாகவும் சிக்கலானதாகவும் உள்ளன. இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைச் சிறந்த இணைய அணுகலைப் பெறுவதைத் தடுக்கிறது.

எற்கனவே ஃபைபர் இணைப்பு இருக்குமிடத்திலிருந்து இணைய இணைப்பு இல்லாத இடத்திற்கு கேபல் பயன்படுத்தாமல் அதி வேக இணைய இணைப்பு வழங்குவதே டாரா திட்டத்தின் நோக்கம்

ஃபைபர்-ஆப்டிக்ஸ் (fiber-optics) அமைப்பில் அதிவேக இணைய சிக்னல்களை எடுத்துச் செல்ல ஒளியைப் பயன்படுத்துகிறது. ஆனால் ஒளியானது ஒளி நார் அல்லது கேபல்கள் (fiber or cables) துணையின்றி காற்றின் வழியே (லேசர்) ஒளிக்கற்றைகளாகவும் பயணிக்க முடியும். இந்த ஒளிக் கற்றைகளைப் பயன் படுத்தி இரண்டு புள்ளிகளுக்கிடையில் அதிவேகத்தில் தரவை அனுப்ப முடியும். இந்தத் தொழிநுட்பம் ஃப்ரீ ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (FSOC Free Space Optical Communications) என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இங்கு இரண்டு சாதனங்களுக்கிடையே ஒரு நேரடி பார்வை (direct line of sight) இருந்தால் மாத்திரமே இந்தத் தரவுப் பரிமாற்றம் சாத்தியமாகும். மேலும் இத்தரவுப் பரிமாற்றம் சுமார் 20 கிமீ தொலைவிற்குள் 20 Gbps வேகத்தில் நடை பெறுகிறது. எதிர் காலத்தில் இந்த வேகம் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

கடுமையான மூடுபனி, அல்லது பறவைகள் மற்றும் பிற விலங்குகள் உபகரணங்களுக்கு அருகில் செல்வது போன்ற காரணங்களால் இந்த அமைப்பு பாதிக்கப்படலாம். ஆனால் எந்தவொரு சேவைத் தடைகளையும் தவிர்ப்பதற்காக அத்தகைய சூழல்களுக்கு ஏற்றவித்தில் தானியங்கி முறையில் மாற்றிக் கொள்ளக் கூடியதாக இந்த அமைப்பைப் உருவாக்குவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறது ப்ராஜெக்ட் டாரா குழு. மேலும் எதிர்காலத்தில், தாராவின் Wireless Optical Communications (WOC) தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படும் இடங்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய நெட்வொர்க் திட்டமிடல் கருவிகளை (network planning tools) கருவிகளைப் உருவாக்கியுள்ளது டாரா.

நாம் அதி வேக இணைய சேவையைப் பயன் படுத்தினாலும் முறையான இணைய வசதி எதுவுமற்ற ஏராளமான கிராமப் புற பிரதேசங்கள், வளர்ச்சி பெறாத தொலை தூர இடங்கள் நமது நாட்டிலும் (இலங்கை மற்றும் இந்தியா) இன்னும் இருப்பதை ஆன்லைன் வகுப்புக்களில் பங்கேற்க மாணவர்கள் தொலை தூரம் நடந்து செல்வதையும் மரங்களில் ஏறி நிற்பதையும் சமூக வலைத்தளங்களில் எம்மால் பார்க்க முடிந்தது.

அல்ஃபாபெட்டின் இந்த Wireless Optical Communications (WOC) இணைப்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லின்க் (starlink) எனும் செயற்கை கோள் இணையம், மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் Internet.org / Free Basics (இந்தியாவில் முன்னர் பயன் பாட்டில் இருந்தது) என்பன நமது நாட்டிற்கும் சீக்கிரமே வருமானால் வளர்ச்சி பெறாத தொலை தூர இடங்களில் உள்ள மக்களுக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

High-speed internet via airborne beams of light

About admin

Check Also

WhatsApp added Polls feature on Android and iOS

அண்ட்ராய்டு -Android மற்றும் ஐ-ஓ-எஸ் iOS பயனர்களுக்காக வாட்சப் Polls (போல்ஸ்) எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் …

Leave a Reply