‘Home’ Key / ‘End’ Key என்ன செய்யும்?
விசைப் பலகையில் Home , End என இரு விசைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் மிக அரிதாகவே அவற்றைப் பயன் படுத்தியிருப்பீர்கள் Home மற்றும்End விசைகள் நீங்கள் பயன் படுத்தக் கூடிய சில இடங்களை இங்கு குறிப்பிடுகிறேன். எம்.எஸ்.வர்ட் போன்ற மென்பொருள்களில்End விசையை அழுத்தும்போது தற்போது கர்சர் உள்ள வரியிலிருந்து அதன் இறுதிப் பகுதிக்கு கர்சரை நகர்த்தும். அவ்வாறே Home விசையை அழுத்தும் போது அவ்வரியின் ஆரம்பத்தில் கர்சரை நிறுத்தும். (Ctrl) கண்ட்ரோல் விசையுடன் இணைத்து Home , End விசைகளைஅழுத்தும் போது அந்த ஆவணத்தின் ஆரம்பப் பகுதிக்கும் , இறுதிப் பகுதிக்கும் கர்சரை முறையே நகர்த்தும். மேலும் ஒரு வெப் பிரவுசரில் இந்த விசைகளை அழுத்தும் போது ஒரு இணைய பக்கத்தின் ஆரம்பப்பகுதியையும் இறுதிப் பகுதியையும் காண்பிக்கும். எனினும் இங்கு Ctrl விசையை சேர்த்து அழுத்த வேண்டியதில்லை.
அனூப்