எம்.எஸ்.வர்டில் கிடைக் கோடிட இலகு வழி
எம்.எஸ். வர்டில் Format மெனுவில் Boarders and Shading கட்டளை தெரிவு செய்து விரும்பிய வடிவில் கிடையாக ஒரு நேர் கோடு இடலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதனை விட இலகுவாக கீபோர்ட் மூலமாகவும் கிடைக் கோடுகளை வரையக் கூடிய வசதி எம்.எஸ்.வர்டில் உள்ளது. இதனை எம்.எஸ். வர்ட் 2003 மாத்திரமன்றி அண்மைய பதிப்புகளான 2007 மற்றும் 2010 லும் கூட செயற்படும்.
உதாரணமாக Underscore ( _ ) விசையை (ஷிப்ட் விசையுடன் – குறியீட்டை அழுத்திப் பெறுவது) மூன்று முறை டைப் செய்து விட்டு Enter விசையை அழுத்தும்போது ஒரு ஒற்றைக் கிடைக் கோடு கிடைக்கப் பெறும். அதேபோன்று = (equal sign) சமன் அடையாளத்தை மூன்று தடவை டைப் செய்து விட்டு எண்டர் விசையை அழுத்தும் போது ஒரு இரட்டைக் கிடைக் கோடு கிடைக்கப் பெறலாம். ~ (tilde) விசையை மூன்று முறை அழுத்தி விட்டு எண்டர் விசையை அழுத்த அலை வடிவில் ஒரு கோட்டைப் பெறலாம். * (asterisk) விசையை மூன்று தடவை டைப் செய்து விட்டு எண்டர் விசையை அழுத்துங்கள். ஒரு புள்ளிக் கோட்டைப் பெற முடியும்.
