Home / Software / HotKeyz

HotKeyz

HotKeyz
விசைப்பலகையில்  சுருக்கு விசைகள் உருவாக்குவதன் மூலம் இலகுவாகவும் விரைவாக வும் கணினியில் பணியாற்ற முடியும். விண்டோஸ் கணினியில் சில பணிகளுக்கு சுருக்கு விசைகள் ஏற்கனவே பயன் படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அது போன்ற சுருக்கு விசைகளை உருவாக்கிப் பயன் படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது HotKeyz  எனும் ஒரு சிறிய மென்பொருள் கருவி. இதன் மூலம் கணினியில் வெவ்வேறு பணிகளுக்கென விசைப் பலகைச் சேர்மானங்களை இலகுவாக  நீங்களாகவேஉருவாக்கிப் பயன் படுத்தலாம்.

விண்டோஸ்இயங்கு தளத்தில் ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்கு ஸ்டாட் பட்டனில் க்ளிக் செய்து All Programs தெரிவு செய்து அதிலிருந்து தேவையான ப்ரோக்ரம் பெயரைக் கண்டு பிடித்து அதனை க்ளிக் செய்து திறக்க வேண்டும். இதுவும் ஒரு இலகுவான வழிதான். எனினும்அப்போது உங்கள் பார்வை கணினியிலேயே இருக்க வேண்டும். இந்த HotKeyz பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் திறக்க விரும்பும் ப்ரோக்ரமை நீங்களாக  நிர்ணயித்த விசைகளை அழுத்தித் திறந்து கொள்ளலாம். மேலும் உங்கள் ஹொட்கீஸ் அனைத்தையும்  வகைப்படுத்தி வைக்கவும் முடிகிறது. பயனுள்ள இந்த மென்பொருள் கருவியை http://win7dwnld.com/  எனும் இணைய தளத்திலிருந்து தறவிறக்கம் செய்யலாம்
அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *