Home / General / How to change OEM logo in Windows?

How to change OEM logo in Windows?

OEM   லோகோவினை  நீங்களும் மாற்றியமைக்கலாமே!
டெஸ்க்டொப்பில் மை கம்பியூட்டர் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யும் போது வரும் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் ஜெனெரல் டேபின் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம். (படம் -1)

இவற்றில் கணினி தயாரிப்பு நிறுவனம், கணினியின் மாதிரி இலக்கம், அதனுடன் இணைந்த சிறிய படம் (இலட்சினை), மற்றும் அதன் கீழ் காணப்படும் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸில் (படம்-2) தோன்றும் விவரங்கள் போன்றவற்றை OEM தகவல்கள் எனப்படும்.

OEM என்பது Original Equipments Manufacturer என்பதன் சுருக்கமாகும். ஏதேனுமொரு பொருளை உற்பத்தி செய்யும் (வன்பொருள் / மென்பொருள்) முதன்மை நிறுவனம் அப்பொருளை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லாமல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடும். இரண்டாவது நிறுவனம் அப்பொருளை மேலும் மேன்படுத்தி தனது பெயரில் பொதி செய்து வாடிக்கையாளர்களை அடையச் செய்யும். எனி னும் நேர்மாற்றமாக OEM என்பது இரண்டாவது நிறுவனத்தையே குறித்து நிற்கிறது.

இவ்; ழுநுஆ தகவல்கள் அனைத்தும் .ini • பைலாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதனை நோட்பேட் போன்ற டெக்ஸ்ட் எடிட்டர் கொண்டு மாற்றியமைக்கலாம்.

இந்த •பைலானது [General] , [Support Information] எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். [General] பகுதி

Manufacturer=
Model=

போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.

இரண்டாம் பகுதி, [Support Information] என்பதாகும். இதனை விரும்பினால் மாற்றலாம். இப்பகுதியின் தகவல்கள் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்யும் போது வரும் வேறொரு டயலொக் பொக்ஸில் காட்டும். இங்கு அளிக்கப்படும் தகவல்களை [Support Information] எனும் தலைப்பின் கீழ்

Line1=
Line2=
Line3=

என்ற வடிவத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு அதனை oeminfo எனும் பெயரில் .ini எனும் •ஃபைல் வடிவில் சேமித்து விண்டோஸ் போல்டரில் உள்ள சிஸ்டம்32 (விண்டோஸ் எம்.இ, எக்ஸ்பீ ) எனும் சப் போல்டருக்குள் சேமிக்க வேண்டும். விண்டோஸ் 98, மற்றும் 2000 பதிப்பாயின் சிஸ்டம் எனும் போல்டருக்குள் சேமிக்க வேண்டும்.

அதனுடன் உங்கள் நிறுவன இலட்சினை (லோகோ) தோன்றச் செய்ய வேண்டுமாயின் ஏதேனுமொரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் கொண்டு நீங்கள் போட விரும்பும் படத்தின் அளவு 120 X 120 பிக்ஸலில் இருக்கத்தக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை oemlogo எனும் பெயரில் . .bmp (bitmap) •போமட்டில் சேமித்து அதனைக் கட் & பேஸ்ட் செய்து மேற் சொன்ன அதே சிஸ்டம்32 போல்டருக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இப்போது கீ போர்டில் வின் கீயுடன் + Break கீயை அழுத்த சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் உங்கள் கை வரிசையைக் காணலாம்.

நோட்பேடைத் திறந்து கீழுள்ளதை மாதிரியாகக் கொண்டு டைப் செய்து (படம்-3) oeminfo.ini எனும் பெயரில் C:windowssystem32 எனுமிடத்தில் சேமிக்கவும்.

– அனூப் –

About Imthiyas Anoof

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

One comment

  1. how to change oem logo in windows7

Leave a Reply