Home / How to..? / How to change the text size in Windows

How to change the text size in Windows

விண்டோஸில் எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்க..

உங்கள் கணினித் திரையின் தெளிவுத்திறன் (resolution-ரெசலுயூசன்) அளவை அதிகரிக்கும் போது திரையில் தோன்றும் எழுத்துக்கள் மற்றும் ஐக்கன்களின் அளவு சிறிதாக மாறி விடுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். எழுத்தின் அளவு சிறிதாகி விட்டால் அதனை வாசிப்பது கடினமாகி விடும். அதற்காக ரெசலுயூசன் அளவைக் குறைத்து விடுவது தீர்வாகாது. ரெசலுயூசன் அளவு குறையும் போது ஒரெ நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறந்து பணியாற முடியாது போய் விடும்.,

உயர் தெளிவுத் திறனில் எழுத்தின் அளவு குறைந்தாலும் ரெசலுயூசனைக் குறைக்காமல் எழுத்தின் அளவை அதிகரிப்பதற்கான வசதியை விண்டோஸ் தருகிறதுவிண்டோஸ் 7 மற்றும்  8 பதிப்புகளில் எழுத்தின் அளவை மாற்ற பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். கண்ட்ரொல் பேணலில் Display தெரிவு செய்யுங்கள்.  தோன்றும் சிறிய விண்டோவில் மூன்று வெவ்வேறு அளவுகள் காண்பிக்கப்படும். அங்கு Larger தெரிவு செய்து எழுத்தின் அளவை (50 வீதம்) அதிகரிக்கலாம். இன்னும் அதிகரிக்க விரும்பினால் Display  விண்டோவின் இடப் புறம் தோன்றும் Set custom text size என்பதில் க்ளிக் செய்து அதிகரிக்கலாம். விண்டோஸ் 8 பதிப்பில் Larger என்பதன் கீழ் Custom sizing options  காணப்படுகிறது.  விண்டோஸ் 10 பதிப்பில் எழுத்தின் அளவை மாற்ற ஸ்டாட் பட்டனில் க்ளிக் செய்து Settings ஊடாக  System தெரிவு செய்யுங்கள்.  அங்கு Display இல் எழுத்தின் அளவை மாற்றுவதற்கன ஒரு ஸ்லைடர்  slider தோன்றும் .  அதனை விரும்பிய அளவில் இழுத்து எழுத்தின் அளவை மாற்றிக் கொள்லலாம். -அனூப்-

About Imthiyas Anoof

Check Also

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ …

Leave a Reply