Home / General / How to convert audio cassettes into digital format?

How to convert audio cassettes into digital format?

ஓடியோ கேசட்டிலுள்ள பாடல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவோமா?

சிடி (CD) எனப்படும் கொம்பேக்ட் டிஸ்க்கி‎ன் (Compact Disk) வருகையின் பின்னர் ஓடியோ கேசட்டுகளின் (Audio Cassette) பாவனை தற்போது குறைந்து வருவது நீங்கள் அறிந்ததே; குறைந்து வருகிறது என்பதைவிட முற்றாக இல்லாமல் போய் விட்டதென்றே சொல்லலாம். எனினும் தொழில் நுட்ப வளர்ச்சியி‎‎‎‎‎ன் காரணமாக ஒலிப்பதிவு செய்வதற்கென தற்போது பல்வேறு சாதனங்கள் வந்து விட்டாலும்கூட வானொலியில் ஒலிபரப் பாகும் ஒரு பாடலை, ஒரு அறிவித்தலை அல்லது வீட்டில் நடக்கும் உரையாடல்களை அல்லது ஒரு அரங்கில் நடைபெறும் சொற்பொழிவுகள் போன்றவற்றை இலகுவாக ஒலிப்பதிவு செய்து மறுபடியும் அவற்றைக் கேட்பதற்கு ஓடியோ கேசட்டுகளையே பலரும் நாடுகிறார்கள். இது ஓடியோ கேசட்டுகளுக்கேயுரிய தனிச் சிறப்பு எனலாம்.

சீடிக்களின் ஆக்கிரமிப்பினால் நீங்கள் முன்னர் சிரமப்பட்டுப் பதிவு செய்து வைத்திருந்த பாடல் கேசட்டுக்கள் எல்லாம் இப்போது கவனிப்பாரற்றுக் கிடக்கும். ஓடியோ கேசட்டிலிருக் கும் அப்பாடல்களை அல்லது பேச்சுக்களை கணினிக்கு மாற்றி விட்டால் அதனை மீண்டும் CD யில் பதிவு செய்து கொள்ளவோ அல்லது மின்னஞ்சல் மூலம் பரிமாறிக் கொள்ளவோ முடியும். அது மட்டுமன்றி சீடீயிற்கு மாற்றுவதன் மூலம் நீண்ட காலம் அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். கேசட்டிலிருந்து கணினிக்கு மாற்றும் போது அவற்றை MP3, WAV, WMA எனப் பல பைல் போமட்டுக்களில் சேமித்துக் கொள்ளலாம். அதற்கெனப் பல மென்பொருள்களும் வந்துள்ளன. கணினியில் ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை இயக்கவல்ல அனேக மான மீடியா ப்ளேயர் மென்பொருள்களில் இவ்வசதி சேர்க்கப் பட்டுள்ளது. இவற்றில் Music Match Jukebox, Audacity மற்றும் Jet Audio என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

இங்கு Music Match Jukebox பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். இதன் மூலம் பல வகையான பைல் போமட்டுக் களிலுள்ள ஓடியோ பைல்களை இயக்க முடிவதுடன் சிடிக்களை பதிவு செய்தல் (burn), சீடி லேபல் தயாரித்தல், பைல் வகை மாற்றுதல், புறச் சாதனங்களிலிருந்து ஒலிப்பதிவு செய்தல் எனப் பல வசதிகளும் அடங்கியுள்ளன. Music Match Jukebox ன் அண்மைய பதிப்பு 10 தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் நான் இங்கு Jukebox 7.5 பற்றியே விவரிக்கிறேன். இருந்தாலும் இரண்டுக்குமிடையில் பெரிய மாறுதல் இல்லை.

ஓடியோ கேசட்டிலிருந்து பாடல்களைக் கணினிக்கு மாற்றுவதற்கு உங்களுக்குத் தேவையானது கேசட் ப்ளேயரையும் கணினியையும் இணைப்பதற்கான ஒரு கேபல் மாத்திரமே. இதில் இரு விதமான கேபல்கள் உள்ளன; Stereo Output ( L & R ) செய்யக் கூடிய (RCA) இரட்டைக் கேபல், மற்றும் ஒற்றைக் கேபல்.

உங்கள் கேசட் ப்ளேயரில் Stereo Output ( L & R ) செய்யக் கூடிய இரண்டு jack இருந்தால் அவற்றை இரட்டைக் கேபலின் ஒரு முனையைக் கொண்டும் மறுமுனையைக் கணினியின் Sound Card லுள்ள Line In போர்ட்டிலும் (port) இணைத்துக் கொள்ளுங்கள். கேசட் ப்ளேயரில் Stereo Output செய்யக் கூடிய ஜெக் இல்லாவிட்டால், கேசட் ப்ளேயரிலுள்ள Earphone ஜெக்கையும் கம்பியூட்டரின் சவுன்ட் கார்டில் லைன் இன் போர்டையும் Stereo Output செய்யக் கூடிய ஒற்றைக் கேபல் மூலம் இணைத்துக் கொள்ளவும். இவ்வாறு இணைப்பதன் மூலம் ஓடியோ கேசட்டை மாத்திரமன்றி வானொலி நிகழ்ச்சிகளையும் கூட கணினியில் பதிவு செய்ய முடியும்.

அடுத்து, System tray யில் உள்ள சிறிய ஸ்பீக்கர் ஐக்கன் மேல் ,ரட்டைக் க்ளிக் செய்து Windows Mixer ஐ திறந்து கொள்ளுங்கள். அதில் Options மெனு வில் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். வரும் டயலொக் பொக்ஸில் Adjust Volume for என்பதன் கீழ் வரும் Recording என்ற ரேடியோ பட்டனை தெரிவு செய்து அதில் Recording Control, Line In ஆகிய இரண்டு Check box களையும் தெரிவு செய்து OK க்ளிக் செய்துவிடுங்கள். ‏இப்போது Recording Control பேனலில் திரையில் பார்க்கலாம். அதனை மினிமைஸ் செய்து வையுங்கள். இதன் மூலம் Recording அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

இப்போது MusicMatch Jukebox ஐ இயக்கவும். ஜூக்பொக்ஸ் விண்டோவில் Options மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் செட்டிங்ஸ் டயலொக் பொக்ஸில் Recorder டேபில் க்ளிக் செய்யவும். Recording quality என்பதன் கீழ் Recording format ஆக MP3 என்பது தெரிவாகியிருக்கும். விரும்பினால் WAV, WMA, MP3pro என பைல் போமட்டை மாற்றிக் கொள்ளலாம். எனினும் MP3 பைலாக மாற்றுவது நல்லது. MP3 போமட்டிலும் பல வித ஒலித் தரங்களில், bit-rate களிலும் ஒலிப்பதிவு செய்யலாம். எனினும் 128 Kbps bit-rate ல் பதிவு செய்வதே சிறந்த ஒலித்தரம் கொண்டிருக்கும்.

விரும்பினால் bit-rate ஐ குறைக்கவோ, கூட்டவோ முடியும். பிட் ரேட்டைக் குறைப்பதன் மூலம் ஒலியின் தரம் குறைந்தாலும் அதன் பைல் அளவும் (file size) கணிசமான அளவு குறைவது ஒரு அனுகூலமான விடயமாகும். பைல் அளவு குறைவதனால் ஹாட் டிஸ்கில் நிறையப் பாடல்களை சேமிக்க முடிவதுடன் அவற்றை மின்னஞ்சலிலும்கூட attachment ஆக அனுப்பலாம்.

அடுத்து Recording Source என்பதன் கீழ் Line In என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் Tracks Directory எனும் பட்டனில் க்ளிக் செய்ய New Tracks Directory Options எனும் டயலொக் பொக்ஸ் திறக்கப்படும். அதில் Directory For New எனுமிடத்திலுள்ள பட்டனில் க்ளிக் செய்து பதிவு செய்யப்படும் பாடலை ஹாட் டிஸ்கில் எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். Make sub-path using என்பதில் Artist, Album என்பன தெரிவு நிலையிலிருந்தால் அவற்றை நீக்கி விடவும். (விரும்பினால் வைத்துக் கொள்ளலாம்) ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் போல்டருக்குள் மேலும் இரண்டு போல்டர்களை இப்பெயர்களில் ஜூக் பொக்ஸ் தானாக உருவாக்கி அதற்குள்ளேயே பாடலை சேமிக்கும். அடுத்து Name track file using என்பதில் சேமிக்கப்படும் பைல் பெயராக எவற்றையெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ அவற்றைத் தெரிவு செய்து Ok க்ளிக் செய்யவும்.

அடுத்து Recorder பட்டனில் க்ளிக் செய்ய Recorder விண்டோ திறக்கப்படும். அதில் Record பட்டனில் க்ளிக் செய்வதோடு கேசட் ப்ளேயரையும் இயக்குங்கள். இணைப்புக்கள் சரியாக இருந்தால் கேசட் ப்ளேயரை இயக்கும் போது கணினியிலுள்ள ஸ்பீக்கரில் ஒலியைக் கேட்கக்கூடியதாகவிருக்கும். இப்போது கணினியில் ஒலிப்பதிவு செய்யும் பணியும் ஆரம்பிக்கப்படும். ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் MP3 வடிவில் ஹாட் டிஸ்கில் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட போல்டருக்குள் தெரிவு செய்த பைல் பெயரின்படி சேமிக்கப்பட்டிருக்கும். இதனை ஜூக் பொக்ஸ் கொண்டே இயக்கியும் பார்க்கலாம். இல்லை.. இல்லை கேட்கலாம்!

– அனூப் –

About Imthiyas Anoof

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply