Home / How to..? / How to create a folder without a name

How to create a folder without a name

பெயரில்லாமல் ஒரு போல்டர்!

பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்க்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் ‘alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255’ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்? அதுதான் எனக்கும் புரியவில்லை.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Read WhatsApp messages without opening the App

Read WhatsApp messages without opening the App மொபைலில் வாட்சப்  செயலியைத்  திறக்காமல் செய்திகளைப் படிப்பது எப்படி? வாட்சப்பில்  …

3 comments

  1. i created but i can’t remove the folder.pls help me

  2. சுனிதா,
    வழமையான முறையில் போல்டரை அழிக்கவும் முடியும்; பெயரை மாற்றவும் முடியும்? உங்கள் ப்ராப்ளம் வித்தியாசமாயிருக்கிறது.

    -அனூப்-

  3. Still I can’t delete the folder.

Leave a Reply