பென் ட்ரைவ் வைரஸை ஒழிப்போமா?

ஒரு பென் ட்ரைவை கணினியில் பொருத்தும் போதே தானாக திறந்து கொள்ளும் வகையில் விண்டோஸில் டிபோல்டாக செட்டிங் செய்யப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பென் ட்ரைவை பொருத்தும் போது படத்திலுள்ளது போன்ற ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அந்த டயலொக் பொக்ஸில் ஓகே பட்டனில் க்ளிக் செய்து செய்து விடாமல் அதனை கேன்சல் செய்து மூடி விடுங்கள்.
அடுத்து ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்ப்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பென் ட்ரைவுக்குரிய ட்ரைவ் எழுத்தை (உதாரணமாக d:) டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். (இந்த ட்ரைவ் லெட்டர் கணினிக்கு கணினி வேறுபடலாம்) அடுத்து dir /w/a என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது பென் ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களையும் பட்டியலிட்டுக் காண்பிக்கும். அங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனுமொரு பைல் இருந்தால் உங்கள் பென் ட்ரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
Autorun.inf
Ravmon.exe
New Folder.exe
svchost.exe
Ravmon.exe
New Folder.exe
svchost.exe
அடுத்து கமாண்ட் ப்ரொம்ப்டில் attrib -r -a -s -h *.* என டைப் செய்து எண்டர் செய்யுங்கள். இதன் மூலம் பென் ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களினதும் Read Only, Archive, System, Hidden பண்புகள் அகற்றப்படும். அடுத்து கமான்ட் ப்ரொம்ப்டில் del filename (உதாரணம்: del autorun.inf) என டைப் செய்து சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு பைலையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள்.
உங்கள் கணினி ஏற்கனவே இந்த வகை வைரஸால் பாதிக்கப் பட்டிருந்தால் இந்த வழி முறைகள் பலனளிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.