Home / How to..? / How to see blocked websites?

How to see blocked websites?

தடை செய்த இணைய தளங்களைப் பார்வையிட
சில நாடுகளில் மக்களின் சமூக அமைப்பிற்குப் பொருந்தாத அல்லது அரசுகளின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களைத் தாங்கி வரும் இணைய தளங்ளை அந்நாடுகளில் தடை செய்து விடுவார்கள். இலங்கையிலும் சில இணைய தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன. இவ்வாறு சில நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் கூட தமது கணினி வலையமைப்பில்  சில இணைய தளங்களைகுறிப்பாக பேஸ்புக் போன்ற இணைய தளங்களைப் பார்வையிடாத முடியாதவாறு தடை (Block) செய்திருப்பார்கள்இணைய உலாவிகள்  தடை செய்யப்பட்ட இணைய தளங்களைக் காண்பிக்காது. எனினும் தடை செய்யப் பட்ட இணைய தளங்களைப் பார்வையிடவும்  பல வழிகள் உள்ளன.
அவற்றில்முதலாவது வழி ஒரு Proxy Serverப்ரொக்ஸி சேர்வரைப் பயன் படுத்தலாகும். ப்ரொக்ஸி சேர்வர் ஊடாக தடை செய்யப்பட்டுள்ள தளங்களை அடையலாம். ப்ரோக்ஸி சேர்வரைக் கொண்ட பல இணைய தளங்கள் உள்ளன. அவ்வாறான ஒரு ப்ரொக்ஸி சேர்வர் தளத்தை கூகில் தேடலில் கண்டறியலாம். எனினும் சில நிறுவன வலையமைப்புக்களில் இந்த ப்ரோக்ஸி சேர்வர்களையும் தடை செய்திருக்க முடியும்

இரண்டாவதுவழி, ஒன்லைனில் மொழி மாற்ற சேவை தரும் தளங்களை அணுகி அதன் மூலம் தடை செய்த தளங்களைப் பார்வையிடுவதாகும். உதாரணமாக GoogleTranslate, Microsoft Translate ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அனூப்


About Imthiyas Anoof

Check Also

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ …

Leave a Reply