இணையத்தில் ஒலி வடிவில் உள்ள பைல்களைப் பகிர்ந்து கொள்ள போட் காஸ்டிங் (Podcasting) எனும் ஒலிபரப்பு முறை பயன்பாட்டில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். போட்காஸ்டிங் முறையில் ஒலிபரப்பைக் கேட்பதாயின் உரிய பைலை முழுமையாக் எமது கணினிக்கு டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக போட்காஸ்டிங் முறையில் ஒரு பாடலைக் கேட்க விரும்பினால் அந்தப் பாடலை முழுமையாக எமது கணினிக்கு டவுன்லோட் செய்த பிறகே கேட்க முடியும்.
இணைய வானொலிகளைச் செவி மடுக்க அதிவேக ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. அத்தோடு கணினியில் ஸ்ட்ரீமிங் ஒலிபரப்பைச் செவி மடுப்பதற்கான மென்பொருளும் அவசியம். இதற்கு விண்டோஸ் மீடிய ப்ளேயர் மென்பொருளே போதுமானது. எனவே அதற்குப் புதிதாக வேறு மென்பொருள்களை நிறுவ வேண்டியதில்லை.
இணைய வானொலி ஒலிபரப்பில் Encoder, Server, Player என மூன்று வெவ்வேறு விதமான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கோடிங் மென்பொருள் ஒலியை (டேட்டாவை) சுருக்கி சேர்வருக்கு Streaming வடிவில் அனுப்புகிறது. அதனைப் பெற்றுக் கொள்ளும் சேர்வர் மென்பொருள் அதனை பயனர் கணினியிலுள்ள ப்லேயர் மென்பொருளுக்கு (Relay) மறுபடியும் அனுப்பி வைக்கிறது. இதற்குப் பயன் படுத்தப்படும் ரேடியோ சேர்வரானது இணைப்பை ஏற்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒலிபரப்பை வழங்கக் கூடிய செயல்திறனுடையதாக கூடிய பேண்ட்வித்தைக் (Bandwidth) கொண்டிருக்க வேண்டும்.
ஒரு வானொலி நிலையம் ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயமல்ல. அரசிடம் முறையான அனுமதியைப் பெறுவதோடு அதற்கு அதிக மூலதனமும் அவசியம். ஆனால் உங்கள் வானொலிக் கனவை நனவாக்குகிறது இணைய வானொலி. வெறும் இரண்டோ ஆல்லது மூவாயிரம் ரூபாவை செலவிட்டு அல்லது எந்த செலவுமே இல்லாமல் இலவசமகவே ஒரு இணைய வானொலி சேவையை இரண்டொரு நிமிடங்களில் அரம்பித்து விடலாம்.
முதலில் http://www.winamp.com/ இணைய தளத்திலிருந்து WinAmp 5.5 பதிப்பை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். (பைல் அளவு 10 MB)
அடுத்து http://www.shoutcast.com/ இணைய தளத்திலிருந்து வின்-ஏம்ப்பிற்கான shoutcast plugin ஐ டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள் (பைல் அளவு 2 MB)
அடுத்து http://www.listen2myradio.com இணைய தளத்திற்குச் சென்று இலவச ரேடியோ சேர்வரில் ஒரு கணக்கொன்றை ஆரம்பித்து விடுங்கள். இலவச சேர்வரின் மூலம் குறைந்தது 10 பயனர்களுக்கு (users) மட்டுமே சேவை வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் அதிக பயனர்கள் அவசியம் எனின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கணக்கொன்றை அரம்பித்ததும் உங்களுக்கு நிலையான (Static IP Address) ஒரு ஐபி முகவரி வழங்கப்படுவதோடு இணைய வானொலியைக் கேட்பதற்குப் பயனர்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரியும் (URL) உங்களுக்கு வழங்கப்படும்.
அடுத்து வின்-ஏம்ப் ப்ரோக்ரமைத் திறந்து கொள்ளுங்கள். வின்-ஏம்ப் விண்டோவில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Options > Preferences >DSP Effect ஊடாக Nullsoft Shoutcast தெரிவு செய்யத் தோன்றும் சவுட் காஸ்ட் சோர்ஸ் விண்டோவில் Input டேபில் க்ளிக் செய்து இன்புட் டீவைஸாக வின்-ஏம்ப் தெரிவு செய்யுங்கள். மைக் மூலம் இன்புட் செய்வதாயின் SoundCard Input தெரிவு செய்து அதன் கீழ் Microphone தெரிவு செய்யுங்கள்.
அடுத்து Encoder டேபில் க்ளிக் செய்து Encoder Type ஆக MP3 என்கோடர் தெரிவு செய்யுங்கள். என்கோடர் செட்டிங்ஸில் விரும்பிய அளவினைத் தெரிவு செய்யலாம். இணைய வேகம் மந்தமாயின் 24 Kbps தெரிவு செய்வது பொருத்தமானது.
பின்னர் Output டேபில் க்ளிக் செய்து Address எனுமிடத்தில் உங்களுக்கு வழங்கப்பட் டுள்ள ஐபி முகவரியையும் உரிய போட் (Port) இலக்கம் மற்றும் உங்கள் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டையும் வழங்கி Connect பட்டனில் க்ளிக் செய்து விட்டு வின்-ஏம்பில் பாடலையும் ஒலிக்கச் செய்யுங்கள்.
இப்போது உங்கள் இணைய வானொலி செயற்பட ஆரம்பித்திருக்கும்.அடுத்து பிர வுசரைத் திறந்து உங்கள் வனொலிக்கென வழங்கப்பட்டிருக்கும் இணைய முகவரியூடாக அதனைப் பரீட்சித்துப் பாருங்கள்.
இணைப்பு சரிவர இயங்காவிட்டால் listen2myradio.com தளத்தின் உங்கள் கணக்குக்குரிய கண்ட்ரோல் பேண்லுக்குள் நுளைந்து ரேடியோவை ஓன் செய்து விட்டு மறுபடி முயற்சியுங்கள்.
இறுதியாக ஒரு வார்த்தை. தொழில் ரீதியாக ஒரு வானொலி சேவையை ஆரம்பிக்க வேண்டுமாயின் அதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பதை மற்ந்து விடாதீர்கள்.
-அனூப்-