Home / Android / How to turn your Android device into a wi-Fi hotspot?

How to turn your Android device into a wi-Fi hotspot?

உங்கள்அண்ட்ரொயிட் கருவியை WiFi Hotspot ஆக மாற்றுவது எப்படி?
நீங்கள்மடிக்கணினி வைத்திருக்குறீர்கள். ஆனால் நீங்கள் இருக்குமிடத்தில்  இணைய தொடர்பு பெறுவதற்கான  கேபல் இணைப்போ அல்லது வயரின்றி இணைய தொடர்பு பெறக் கூடிய  (3G dongle) டொங்கள் வசதியோ இல்லை என வைத்துக்  கொள்ளுங்கள். ஆனால் இணைய வசதியுடன் கூடிய ஒரு அன்ட்ரொயிட் (கருவி) செல்லிட தொலைபேசியும் உங்களிடம் இருந்தால் அந்த இணைய வசதியை உங்கள் மடிக்கணினியுட்ன் டேட்டா கேபலின்றிப் பகிர்ந்து கொள்ளலாம்.

அதாவதுஉங்கள் செல்லிட தொலைபேசியை ஒரு WiFi Hotspot  ஆக மாற்றிவிடலாம். அதிலிருந்து உங்கள் மடிக்கணினிக்கு மட்டுமன்றி WiFi வசதி கொண்ட பிற கருவிகளுடனும் ஒரே இணைய தொடர்பை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செல்லிட அண்ட்ரொயிட் தொலைபேசிக் கருவியில் பின்வரும் மாற்றத்தைச் செய்யுங்கள்.

முதலில்Settings தெரிவு செய்யுங்கள். அடுத்து Wireless and Networks தெரிவு செய்து வரும் மெனுவில் Tethering and Portable Hotspot என்பதைத் தெரிவு செய்யுங்கள். இறுதியாக Portable Wifi hotspot என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து மடிக் கணினியில் Wifi பட்டனை இயங்கு நிலைக்கு மாற்றிவிடுங்கள். அவ்வளவுதான்.


-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply