Home / How to..? / How to use hashtags?

How to use hashtags?

How to use hashtags?ஹேஸ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் ஒரு இடுகையில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடாகும் (#). ”ஹேஷ்;டேக்” எனும் வார்த்தை ட்விட்டர் மூலமே உருவாக்கப்பட்டது. மேலும் அது ”#-ஹேஷ் (இக்குறியீடு “இலக்கம்”; என்பதைக் குறிக்கவும் பயன்படுகிறது) மற்றும் tag -குறிச்சொல் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு ட்விட்டர் இடுகையில் ஒரு முக்கிய குறிச்சொல்லைக் குறிப்பதற்காக  அந்த வார்த்தைக்கு முன் ஹேஷ் (#) குறியீட்டை  (Shift+3) தட்டச்சு செய்வதன் மூலம் இது பெறப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ” tech” என்ற சொல்லை ” #tech” என டைப் செய்வதன் மூலம் ஒரு ட்வீட்; இடுகையில் அந்த வார்த்தை ஒரு குறிச்சொல்லாக மாற்றப்படுகிறது.

ஹேஷ்;டேக் செய்யப்பட்ட வார்த்தைகளை ட்விட்டர் தானாகவே இணைப்புக்களாக (hyperlinks) மாற்றும். இது நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு அதே ஹேஸ்டேக் கொண்ட சமீபத்திய ட்வீட் இடுகைகளை பட்டியலிடுகிறது. நீங்கள் ஹேஸ்டேக் பயன்படுத்தி; ஒரு ட்வீட் இடுகையிடும்போது ​​உங்கள் ட்வீட் உங்களைப் பின் தொடர்பவர்களை மட்டுமல்லாது பொது வெளியில் அது காண்பிக்கப்படும். ஒரு ட்வீட் இடுகையில்  ஹேஷ்N;டகைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக நீங்கள் ட்விட்டரின் ”தேடல்” அம்சத்தை பயன்படுத்தயும்; ஹேஷ்டேகுகளைத்  தேடலாம்.

ட்வீட் இடுகைகளை  வகைப்படுத்துவதற்காகவும்  ஹேஸ்டேக்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் ஒரே ஹேஷ்டேக்கின் அனைத்து ட்வீட்களும் தொடர்புடையவை. எனவே, hashtags பயன் படுத்தி தேடல் மேற்கொள்ளும் போது அப்போது பிரபலமான செய்தித் தலைப்புகளைக் கண்காணிக்க முடிகிறது.  உதாரணமாக, அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த IPL  கிரிக்கட் தொடரின்போது #ipl #cricket #csk #viratkohli #dhoni போன்ற ஹேஷ் டேகுகள் பிரபலமாகின. கடந்த மாதம் இந்திய அளவில்  ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Nesamani ஹேஷ்டேகையும் மறந்திருக்க மாட்டீர்கள். அதேபோல் #election  எனும் ஹேஷ்டேக் தேர்தல் காலங்களில் பிரபலமாக இருக்கும். #Apple மற்றும் ;; #microsoft போன்ற பிரபல நிறுவன பெயர்கள் கொண்ட ஹேஷ்டேக் இடுகைகள் புதிய தயாரிப்புகளை வெளியிடும் காலங்களில் அவை பற்றிய கருத்துக்களை மக்கள் தெரிவிக்கும் போது பயன்படுத்தப்படலாம். ஒரே ஹேஷ்டேக் மூலம் ட்வீட் இடுகையிடும்போது அதனுடன் தொடர்புடைய விடயம் ஒரு விவாதமாகவும்  மாறக்கூடும்.

ஒரு ஹேஷ்;டேக் என்பது ஒரு தனி  வார்த்தையாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
வார்த்தைகளின்  சேர்மானமாகவோ இருக்கலாம். ஆனால் ஹேஷ்;டேக் இடும் போது இடை வெளிகள் இல்லாமல் ஒரே சொல்லாக இருக்க வேண்டும் என்பது நியதி. மேலும் அவற்றுள் எண்களும் கூட அடங்கும்.

உங்கள் ட்வீட் இடுகைகளில் நீங்கள் ஏற்கனவே பிரபலமான ஹேஷ்டேக்களைப் பயன்படுத்தலாம் அல்லது உங்களுடைய சொந்த ஹேஷ்டேகையும் உருவாக்கலாம். எனினும் பிறர் உங்கள் ட்வீட்டைப் பார்க்க விரும்பினால், பிரபலமான ஹேஷ்டேக்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

ஒவ்வொரு ட்விட்டர் இடுகையிலும் பல ஹேஷ்;டேக்களை சேர்க்க முடியும், எனினும் ட்வீட் ஒன்றிற்கு மூன்றிற்கு மேல் ஹேஷ்டேக்களைப் பயன்படுத்த வேண்டாம் என ட்விட்டர்  பரிந்துரைக்கிறது. மேலும் ஒரு ட்வீட் இடுகையின் முடிவில் ஹேஷ்டேக்களைச் சேர்ப்பது பொதுவான  வழக்கமாகும். ஆனால் இடுகையின் இடையேயும்  ஒரு வார்த்தைக்கு முன்னால் # குறியீட்டை சேர்ப்பதன் மூலம் எந்த வார்த்தையும் ஹேஷ்டேக் ஆக மாற்றலாம்.

ஹேஷ்டேக்களை ட்விட்டர் மட்டுமன்றி பொதுவாக அனைத்து சமூக வலைத்தளங்களும் ஆதரிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்க.

How to use hashtags?

About admin

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *