Home / Android / How to use WhatsApp in your PC?

How to use WhatsApp in your PC?

இனி கணினியிலும்  பயன்படுத்தலாம் WhatsApp
இது வரை நீங்கள் கையடக்கத் தொலைபேசி களில் மட்டும் பயன் டுத்தி வந்த வட்ஸ்எப் எனும் மிகப் பிரபலமான மெஸெஞ்சர் சேவையை இனிமேல் கணினியிலும் பயன் படுத்தக் கூடிய வசதி கடந்த  மாதம் அறிமுகம்செய்யப் பட்டுள்ளது. WhatsApp Web  என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையைப் பெற நீங்கள் எந்தவொரு மென்பொருளையும் ரவிறக்கவோநிறுவவோ வேண்டியதில்லை. இணைய தளங்களைப் பார்வையிட உதவும் உங்கள் வெப் பிரவுஸரிலேயே அதனைப் பயன் படுத்தலாம். எனினும் தற்போது கூகில் க்ரோம் ப்ரவுஸரில் மாத்திரமே இதனைப் பயன் படுத்த முடியும்.  
ஸ்மாட் தொலைபேசியிலுள்ள வட்ஸ்எப் அப்லிகேசனின் ஒரு பிரதிபளிப்பாகவே பிரவுஸரில்கண்பிக்கப்படுகிறது. எனவே இந்த வசதியைப் பெற உங்கள் கையடக்கத் தொலைபேசியிலும் வட்ஸ்எப் அப்லிகேசன் நிறுவப்பட்டிருப்பதோடுஇணைய இணைப்பிலும் இருத்தல் அவசியம்.
கணினியில் வட்ஸ்எப் பயன்படுத்த பின்வரும்  வழி முறையக் கையாளுங்கள்.
முதலில்உங்கள் கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ் எப் அப்லிகேசனின் மிக அண்மைய பதிப்பை நிறுவிக் கொள்ளுங்கள். அடுத்து வட்ஸ்எப் அப்லிகேசனைத் திறந்து Menu > Whatsapp web என்பதைத்தெரிவு செய்யுங்கள். அப்போது QR Code  ஸ்கேனர் கையடக்கத் தொலைபேசியில் இயக்கப்படும்

அடுத்து
உங்கள் கணினியில் க்ரோம் பிரவுஸரைத் திறந்து  https://web.whatsapp.com எனும் தளத்திற்குச் செல்லுங்கள். பிரவுஸரில் ஒரு QR Code காண்பிக்கப்படும். இக் கியூஆர் கோடினை தொலைபேசியிலுள்ள QR Code  ஸ்கேனர் மூலம் கணினித் திரைக்கு  நேராக தொலைபேசியைப் பிடித்து ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் கையடக்கத் தொலைபேசி இனம் காணப்ட்டதும்  தொலைபேசித் திரையில் காண்பிக்கப் படுவது போன்றே பிரவுஸரிலும் காண்பிக்கப்படும். கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்எப் பயன் படுத்துவது போன்றே அனைத்து வசதிகளுடன் பிரவுஸரிலும்  நீங்கள் பயன் படுத்த ஆரம்பிக்கலாம்
அனூப்

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply