மடிக்கணினி மற்றும்கையடக்கக் கருவிகளில் வைபை இணைப்பு மூலம் இணையத்தைப் பயன் படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் டெஸ்க்டொப் கணினிகளில் எவ்வாறு வைபை இணைப்பைப் பெறுவது எனப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
புதிதாகவரும் சில டெஸ்க் டொப் கணிகளில் வைபை இணைப்பைப் பெறும் வசதியும் இணைந்தே வருகின்றன. ஆனால் பொதுவாக பாவனையிலுள்ள பழைய டெஸ்க் டொப் கணினிகளில் இந்த வசதி கிடைப்பதில்லை. எனவே டெஸ்க்டொப் கணினிகளிலும் வைபை வசதியைப் பெற வேண்டுமானால் அதற்கு வைபை வசதி உள்ளிணைந்த (built-in) மதர்போர்டைவாங்கிப் பொருத்துவது மதர்போர்டில் தனியாக Wi-Fi card மாத்திரம் வாங்கிப் பொருத்துவது, யூ.எஸ்.பீ வைபை அடெப்டர் பொருத்துவது USB Wi-Fi adapter என மூன்று வழிகள் உள்ளன. வைபை வசதி உள்ளிணைந்த மதர்போர்டை வாங்கிப் பொருத்துவதானால் அதற்கு அதிகம் செலவாகும். தனியாக Wi-Fi card வாங்கி மதர்போர்டில் பொருத்துவது என்பது செலவு குறைந்த வழியானாலும் அந்தக் கணினியில் மாத்திரமே அதனைப் பயன் படுத்தலாம். எனவே மூன்றாவது சொன்ன Wi-Fi adapter வாங்கிப் பயன் படுத்துவதே சிறந்த தேர்வாகும். இந்த Wi-Fi adapter செலவு குறந்த வழி என்பதோடு அந்த எடப்டரை எந்தவொரு கணினியிலும் தேவையான போது ஒரு பென் ட்ரைவ் போன்று பயன் படுத்தக்லாம்.
USB Wi-Fi adapter பயன் படுத்துவதன் மூலம் வைபை ஊடாக இனைஅய இனைப்ப்பிஉப் பெற லாம். இதனை ஒரு பென் ட்ரைவ் போன்று plug-and-play கணினியில் செருகிப்பயன் படுத்தலம். இணையத்தைப்பயன் படுத்தாத போது அகற்றி விடலாம் அல்லது வேறு கணினியில் இணைத்துப் பயன் படுத்தலாம். இலங்கையில் இதன் விலை சுமார் ரூபா. 1500 .