
ஒரு கணினியின் செயற்திறனில் பிரதான நினைவகமான ரேம் முக்கிய பங்கு வகிக்கிறது. நினைவகத்தின் கொள்ளளவு அதிகமயிருப்பின் கணினி வேகமாகவும் குறைவாக இருப்பின் மந்த கதியிலும் இயங்குவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். நினைவகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதாயின் அதற்கு அதிகம் செலவாகும். உங்களிடம் ஒரு பென் ட்ரைவ் இருப்பின் அதனையே ரேம் ஆகப் பயன் படுத்தலாம். இந்த வசதிய விண்டோஸ் இயங்கு தளம் வழங்குகிறது.
நீங்கள்பயன் படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு எனின் பின்வரும் மாற்றங்களை உங்கள் கணினியில் செயற்படுத்த வெண்டும். முதலில்பென் டரைவைக் கணினியில் செருகி அதனை ஃபோமட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து My Computer ஐக்கனில் ரைட் க்ளிக் செய்து properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலாக் பாக்ஸில் Advance டேபைக் க்ளிக் செய்யுங்கள். அங்கு performance. என்பதன் கீழ் settings தெரிவு செய்யுங்கள். தோன்றும் performance options டயலாக் பாக்ஸில் மீன்டும் Advance டேபைக் க்ளிக் செய்யுங்கள். அங்கு change என்பதைத் க்ளிக் செய்து வரும் பெட்டியில் உங்களது பென்ட்ரைவுக்குரிய எழுத்தைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் custom size என்பதைத்தெரிவு செய்து நினைவகமாகப் பயன் படுத்தக் கூடிய பென்ட்ரைவின் அளவை விரும்பியவாறு தெரிவு செய்து கொள்ளலாம். இறுதியாக set பட்டனைக் க்ளிக் செய்து ஓகே சொல்லி விட்டுக் கணினியை மறுபடி இயக்குங்கள். முன்னரை விட கணினி வேகமாக இயங்குவதை அவதானிக்கலாம்.

விண்டோஸ் 7, 8 மற்றும் 10 பயனர்கள் இன்னும் இலகுவக இந்த மாற்றத்தைச் செய்யலாம். முதலில் பென்ட்ரைவைக் கணினியில் செருகி விட்டு அதனை ஃபோமட் செய்யுங்கள் பின்னர் கம்பியூட்டர் அல்லது திஸ் பீசி திறந்து பென் ட்ரைவ் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து ‘properties’ தெரிவு செய்யுங்கள். அங்கு Ready boost டேபைக் க்ளிக் செய்து Use this device என்பதைத்தெரிவு செய்யுங்கள். இங்கு நினைவகமாகப் பயன் படுத்தக் கூடிய உச்ச அளவைத் தெரிவு செய்து ஓகே க்ளிக் செய்யுங்கள்.
அனூப்